எஸ்சி பட்டியலில் இருந்து விடுவித்து தேவேந்திரகுல வேளாளர்களை எம்பிசி
பிரிவில் சேர்க்க வேண்டும்: புதிய தமிழகம் மாநாட்டில் தீர்மானம்!!
*08/10/17 ஞாயிற்றுக்கிழமை!*
*தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து விடுவித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
புதிய தமிழகம் கட்சி சார்பில் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மாநாடு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழகத்தில் பட்டியல் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலடி, கடையர், வாதிரியார், தேவேந்திர குலத்தார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அனைத்து பெயர்களுமே தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரை குறிப்பதே ஆகும்.
வேளாண்மையை உயிர்த் தொழிலாக செய்துவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என அடையாளப்படுத்தப்படுவதால் இச்சமூக மக்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
எனவே,
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து விடுவித்து தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
*முன்னதாக, நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறும்போது,*
*‘‘எங்களது கோரிக்கையை 6 மாதத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக