வெள்ளி, 6 அக்டோபர், 2017

இராமேஸ்வரம் கோவிலில் காணாமல் போன நகைகள் விபரம்!



இராமேஸ்வரம் கோவிலில் காணாமல் போன நகைகள் விபரம்!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்‌ஷி சிவராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மனுக்குச் சூட்டப்பட்ட 10 ஆபரணங்கள் மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட கைமணி ஆகியவற்றின் நிலைகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், கோயில் இணை ஆணையர், தக்கார் ஆகியோர்  மூன்று வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கோயிலிலிருந்து மாயமானதாகக் கூறப்படும் நகைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நகைகள் இவைதான் :

*1.ரத்தினப் பதக்கம், 2. வைர அட்டியல், 3. சிவப்புக்கல் அட்டியல், 4. ரத்தினப் புல்லாக்கு, 5. சிறு பொட்டு பதக்கம், 6. ரத்தினங்களால் இழைக்கப்பட்ட திருமாங்கல்யம், 7. வைரச் சுட்டிப் பதக்கம், 8.ரத்தின நெக்லஸ் 9.தங்கத்தினால் செய்யப்பட்ட கை மணி, 10.வலம்புரிச் சங்கினால் ஆன உமா சங்கர் சிற்பம்.*

*இவை அனைத்தும் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி ஆட்சிக் காலத்தில், அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மனுக்கு வழங்கப்பட்டது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக