திங்கள், 16 அக்டோபர், 2017

MATHI NEWS செய்திகள்@16/10/17


MATHI NEWS செய்திகள்@16/10/17

தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமி‌ஷன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு: மத்திய அரசிடம் நாளை அறிக்கை - சென்னையில் அதிகாரிகளுடன் இன்று இறுதிக்கட்ட ஆலோசனை

டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மந்திரி நேரில் ஆய்வு - ரூ.256 கோடி வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்

டெங்கு பாதிப்பு: சென்னை ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு; மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது

மதுரை: பாலமேடு பள்ளியில் வகுப்பறையில் பட்டாசு வெடித்து அட்டகாசம்

பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு

பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்

வேலூர் அருகே 11 மாத குழந்தையை கொன்று தாய் பூர்ணிமா தற்கொலை

நெல்லை: பனங்குடியில் கேரள மருத்துவ கழிவு லாரி சிறைபிடிப்பு

கிருஷ்ணகிரியில் கிரானைட் லாரி கவிழ்ந்து 2 சிறுவர்கள் பலி

தமிழக அரசு அனுமதி அளித்தால் மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராக உள்ளதாக நடிகர் விவேக் பேசினார்.

வீரபத்ர சிங் அரசில் இருந்து அமைச்சர் அனில்சர்மா ராஜினாமா; பாஜகவில் சேர்ந்தார்: இமாச்சலில் காங்கிரஸுக்கு பின்னடைவு

விவசாயிகள் பிரச்னையில் மீடியாக்கள் கவனம் செலுத்த வேண்டும் : வெங்கைய நாயுடு

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் சேதம்: 3 பேர் பலி

 வியாபம் ஊழல் விவகாரத்துக்கும் 24 பேர் இறப்புக்கும் தொடர்பில்லை: சிபிஐ விளக்க அறிக்கை வெளியிட்டது

குஜராத் : பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இன்று மோடி உரை

என்.ஆர்.ஐ.க்கள் வாக்களிக்க இனி இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியமிருக்காது - சுஷ்மா சுவராஜ்

ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள தூய்மை இந்தியா திட்ட சின்னம் பற்றி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் நாளை மறுநாள் இரவு மாநில அரசு சார்பில் ‘தீபோத்சவா’ என்னும் பெயரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது

பிரதமர் நரேந்திர மோடியின் திறன்மிகு நிர்வாகத்தால், இந்தியா, வளர்ச்சிப்பாதையில் வீறுநடை போட்டு முன்னேறி வருவதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை விமர்சிக்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஆய்வறிக்கை, குளிர் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 11 இந்தியர்கள் மாயமான விபத்து பற்றி அறிய உதவி எண்கள் வெளியுறவுத்துறை அறிவிப்பு

சோமாலியாவில் கொடூரம்: வெடி குண்டு தாக்குதலில் 276 பேர் பலி, 300 பேர் காயம்

இந்தியாவில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக