மத்திய திட்டங்களுக்கு ஒத்துழையுங்க! நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்.
15/10/17- ஞாயிற்றுக்கிழமை!
*''மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தொழில் கடன் மற்றும் காப்பீடு திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.*
அதை, மக்களிடம் எடுத்துச் சென்று, அவர்கள்
தன்மானத்துடன் வாழ, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''
என: ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வங்கிகளில் வழங்கப்படும் 'முத்ரா' சிறு தொழில் கடன் குறித்த ஊக்குவிப்பு நிகழ்ச்சி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.
இதில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:_
*வங்கிகளுக்குள் நுழைவதற்கு, தாழ்வு மனப்பான்மையால், ஏழைகள் அச்சப்படுவர்.*
*ஆனால், ஒரு காசு செலவு இல்லாமல், கோடிக் கணக்கான ஏழைகளுக்கு, வங்கிக் கடன் அளிக்கப் பட உள்ளது.*
*ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, அதன் சிரமங்களை உணர்ந்த, பிரதமர் மோடி தான், அதற்கு காரணம்.*
*ஏழைகள், தன்மானத்துடன் பிழைப்பதற் காக, முத்ரா கடன் திட்டத்தை, இரு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தார்.*
*எவ்வித பிணைத் தொகையும் இல்லாமல், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நம்பிக்கை வைத்து, முத்ரா கடனுதவி வழங்கப் படுகிறது.*
*இங்கு நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சியை தென் தமிழகம் போன்ற, சாதாரண மக்கள் வாழும் இடங்களிலும் நடத்த வேண்டும்.*
*இத்திட்டத்தில், உரியவர்களுக்கு பலன் கிடைக்கிறதா என்பதை, மாநில அரசு கவனிக்க வேண்டும்.*
*வங்கி அதிகாரி களிடம், முத்ரா திட்டத்தில் பயன் பெற்றவர்கள் பட்டியலை கேட்டு, சரிபார்க்க வேண்டும்.*
*தவறு இருந்தாலோ, கடன் தராமல் இருந்தாலோ கேள்விகேட்கலாம்.*
*இத்திட்டத்தில் ஈடுபாட்டுடன் பங்களிப்பு தந்து,மக்கள் தன்மானத்துடன் வாழ்வதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.*
*வங்கிகளில் ஆண்டுக்கு 12 ரூபாய்;*
*330 ரூபாய் என விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.*
*ஆந்திராவில் மாநில அரசும், மத்திய அரசும், தலா, 171- ரூபாய் செலுத்தி, மக்கள் ஒரு காசு செலவில்லாமல் பயன்பெற வழி செய்யப்பட்டுளது. அதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.*
*மேலும்: இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக