MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 03/10/17 !
சசிகலா பரோல் விவகாரம் : பரோல் வழங்க ஆவணங்கள் முறையாக இல்லாததால் தாமதம்.பரோல் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்க சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது சிறை கண்காணிப்பாளர் தகவல்
சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்கும்
சசிகலா பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை - கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி தகவல்.
பெட்ரோல் டீசலுக்கான அடிப்படை கலால் வரியினை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது மத்திய அரசு.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர் கேஎம்.விஜயன் உயர் நீதிமன்றத்தில் முறையீடு.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார்.ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் - லதா ரஜினிகாந்த்.
ராஜீவ் கொலை வழக்கில் ராபர்ட் பயஸை விடுவிக்கக் கோரும் வழக்கு நவ.7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
டிடிவி.தினகரன் என்ன காந்தியா ? யார் குற்றம் செய்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் : அமைச்சர் சண்முகம்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.வரும் 24ம் தேதி வரை அவருடைய நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
பண மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு 30 நிமிடத்தில் ஜாமின் வழங்கப்பட்டது.
கேளிக்கை வரியை ரத்து செய்யாவிடில் 6 மாவட்டங்களில் தீபாவளி முதல் திரையரங்குகளை மூட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு.
உள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டிடிவி தரப்பு கூடுதலாக 30 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல்.
ஜெயலலிதா கைரேகை சான்றளித்த அரசு மருத்துவர் பாலாஜி நியமன வழக்கில் நாளை தீர்ப்பு : மாற்றம் இந்தியா நாராயணன் தொடுத்த வழக்கு.
ஜம்மு- காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு.
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேச தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம் மறுப்பு.
டிடிவி தினகரன் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு போன்று என் மீதும் போட வாய்ப்பு உள்ளது : முக.ஸ்டாலின்.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் 2.31 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் : தேர்தல் ஆணையம்.
2017 ஜனவரி 6 முதல் அக்.2 வரை 5.47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் : தேர்தல் ஆணையம்.
உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் முறையிட்டதை தொடர்ந்து அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று விசாரிக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவின் கணவர் ம.நடராஜனை வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.
சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் : டிடிவி.தினகரன் தரப்பு.
ராமேஸ்வரம் கோயிலில் இருந்து விலை மதிக்க முடியாத 13 நகைகள் காணாமல்போனது தொடர்பான வழக்கில் இந்துசமய அறநிலைத்துறை பதில்தர உத்தரவு.
ரெய்னர் வைஸ் , பேரி பேரிஸ் , தோர்ன் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் நாயக் மகேந்திர ஷேம்ஜங் வீரமரணம்.
பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் : உயர்நீதிமன்றம்.
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் ஆஜர்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் 8 ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தலைமை பண்பற்று ஸ்டாலின் பேசுகிறார் : அமைச்சர் ஓஎஸ் மணியன்.
காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுடன் முக.அழகிரி சந்திப்பு.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் இன்று நடைபெற்றது
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வலியுறுத்தலின்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - மைத்ரேயன் எம்பி.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் வேலுமணியை அமைச்சர்கள் சிவி. சண்முகம் , கேபி.அன்பழகன் நேரில் சென்று நலம் விசாரிப்பு.
அரசு மருத்துவமனைகளில் பணம் பெறுவது குறித்த குற்றச்சாட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் : ஆர்பி. உதயகுமார்.
இமாச்சலப்பிரதேசம் : பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் டிஜிபி டிகே.ராஜேந்திரன் சந்திப்பு.
நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீபிற்கு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்.
பாலியல் வன்கொடுமை வழக்கில்சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் கைது.
திருவாரூர் வலங்கைமான் அருகே ரெங்கநாதபுரத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை தீபிகா பலி.
சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் டெங்கு காய்ச்சலால் பலி.
மதுரை தனியார் மருத்துவமனையில்
டெங்கு காய்ச்சலுக்கு 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விருதுநகரை சேர்ந்த காவலர் தங்கச்சாமி பலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக