வியாழன், 12 அக்டோபர், 2017

Mathi News முக்கிய செய்திகள்@12/10/17


Mathi News முக்கிய செய்திகள்@12/10/17

அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு

போக்குவரத்து துறை ஊழியர்கள் 20ம் தேதி வரை லீவு எடுக்க தடை

சிவகங்கை : கார் விபத்தில் கோகுல இந்திராவின் சகோதரர் உயிரிழப்பு

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி., அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி : கும்பக்கரை அருவியில் குளிக்க மீண்டும் தடை

தர்மபுரி : ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்தது

சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.360 கோடி செலவில் காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

கபீர் புரஸ்கார் விருது, அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

திமுகவின் ஊழலை தோலுரித்துக் காட்டினால் அது அர்த்தமற்றதா?- அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

குட்கா விவகாரத்தில் அமைச்சர், உயர் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?- முத்தரசன்

போலீஸ் கேன்டீனில் கூடுதல் பொருட்கள் வாங்கலாம்: டிஜிபி

பா.ஜ.,வில் இருக்கும் பெண் தலைவர்களை கண்டு காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு பயம் வந்துவிட்டது என பா.ஜ., மூத்த தலைவர் ஷா நவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

திறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை: மாயாவதி

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டில்லியில் கவர்னர்கள் மாநாடு இன்று துவக்கம்

‛டி.சி.,4' விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது

தி வயர் இணையதளம் மீது அமித்ஷா மகன் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மலிவுவிலை இந்திரா உணவகம் கர்நாடகம் முழுவதும் திறக்கப்படும்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

ஆன் - லைன் மூலமாக, 166 மொபைல் போன்களுக்கு, 'ஆர்டர்' கொடுத்து, பொருள் கிடைக்கவில்லை என, பணத்தை திரும்பப் பெற்று, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, டில்லியைச் சேர்ந்த பட்டதாரி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்றைய(அக்.,12) விலை: பெட்ரோல் ரூ.70.93; டீசல் ரூ.60.02

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 2 தளபதிகளின் தலைக்கு பரிசு அறிவித்தது, அமெரிக்கா

கட்டலோனியா தனிநாடு குறித்து முடிவெடுக்க 5 நாள் கெடு விதித்த ஸ்பெயின் பிரதமர்.

*மதிய செய்திகள்@12/10/17

காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது;அவர் ஒரு மனிதர்-பீகார் முதல் மந்திரி பேச்சு

தேசியக் கொடி அவமதிப்பு: ஹர்திக் படேல் மீதான வழக்கை வாபஸ் பெற்றது குஜராத் அரசு

தமிழக டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக, பிரதமரை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நல்லதோ, கெட்டதோ, நடராஜன் குடும்பத்திலேயே பெரிய மனிதர். நான் இல்லாத சூழலில், அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை என, , தினகரனை, சசிகலா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது

டெங்கு விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக்கூடாது அமைச்சர் செல்லூர் ராஜூ

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளை பார்வையிட பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

15 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு பணி : கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

திமுக எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு அக்.,27 க்கு ஒத்திவைப்பு

முதல்வர் பழனிசாமிக்கும் எனக்கும் எந்த மன வருத்தமும் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் ஒருவர் கைது

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க கூடாது: விஜயகாந்த் ஆவேசம்

சேலம் : காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

அரசு வேலைவாய்ப்புகளை ஒழிக்க சதி: இளைஞர்களைத் திரட்டி விரைவில் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

இந்த ஆட்சி விரைவில் கலைக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்: வைகோ எச்சரிக்கை

பெங்களூருவிலிருந்து கோவை வந்த பஸ்சில் 2 கிலோ தங்கம் திருட்டு

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு

இந்தியாவுடன் நல்லுறவு சாத்தியப்படவில்லை: பாக். ராணுவ தளபதி ஜாவித் பஜ்வா கருத்து

வியட்னாமில் வெள்ளம்: 37 பேர் பலி; மீட்புப்பணி தீவிரம்

வடகொரியா மீது நடவடிக்கை: ட்ரம்ப் உறுதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசிய சம்பவம்: கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கோரினர்

இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக