தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநரின் குறிப்புகள்...
அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்வாரிலால் புரோஹித், பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.
நாக்பூர் கிழக்குப் பகுதியில் 1978-ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பின் 1980 தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பின் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பி.ஜே.பி-யின் முயற்சியில் நாட்டம் கொண்டு, 1991-ம் ஆண்டில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் பன்வாரிலால்.
1996-ல் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஜே.பி. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மஹாஜனுடன் 1999-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பி.ஜே.பி-யிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
2003-ல் விதார்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 2009-ல் மீண்டும் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மேகாலயா மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக