திங்கள், 2 அக்டோபர், 2017

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 02/10/17 !

MATHI NEWS இன்றைய  பரபரப்பு செய்திகள் 02/10/17 !

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் எல்லைப்பகுதியில் அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : 10 வயது சிறுவன் உயிரிழப்பு.

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்வு.

தமிழகஅரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகம் செய்ய தூண்டிய புகாரில் டிடிவி தினகரன்,வெற்றிவேல்,புகழேந்தி உள்ளிட்ட 13பேர் மீது போலீஸ்வழக்குப்பதிவு.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி உட்பட 9 பேர் மீண்டும் குடகு விடுதிக்கு வருகை.

அஸ்சாமில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 78 ஆயிரம் பேர் பாதிப்பு.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் மத்திய அரசையும் உட்படுத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

உபி அரசின் சுற்றுலா மையங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம்.

கடல் நீர் சர்க்கரை ஆகலாம் ஆனால் ஸ்டாலின் எண்ணம் என்றைக்கும் பலிக்காது : அமைச்சர் ஜெயக்குமார்.

அரசு காந்தி வழியில் நடப்பதால்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஜெயலலிதாவின் திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : ஓ.பன்னீர்செல்வம்.

பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்.மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மாநில சுயாட்சிகளை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களை மாநாட்டுக்கு அழைக்கிறோம்.பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அழைத்துளோம் : வைகோ.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு.

ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு.

நீர்வரத்துக்கு ஏற்ப விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு.காவிரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது : அமைச்சர் தங்கமணி.

திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே காந்திசிலைக்கு மாணவர்கள் அனிதாவின் முகமூடி அணிந்து மரியாதை.

கிண்டி ராஜ்பவனில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்தித்து பேசினார்கள்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணின் கட்சி ஆந்திரா, தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டி.

ரஜினி , கமல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மாறி மாறி பேசி வருகிறார் : முக.ஸ்டாலின்.

ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசு செயல்படவில்லை என நல்லக்கண்ணு குற்றச்சாட்டு.காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு

ராயலசீமா பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது : வானிலை மையம்.

சிவாஜி சிலையின் கீழ் கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது அரசியல் நாகரீகமற்ற செயல்.புதிய ஆளுநருக்கும், பொறுப்பு ஆளுநருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது : முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவை மரங்களை அகற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

2017-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் பரிசுக்குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார்.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து அக்.5 முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாப் பட்டியலில் காசி நகரத்துக்கு முதலிடம்.

லாஸ்வேகாஸ் நகரில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரங்கல்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தான் வாங்கிய ஐந்து தேசிய விருதுகளை தாரளமாக திருப்பி தரலாம் - எஸ்வி.சேகர்.

ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் பழனிசாமி திருமலை சென்றடைந்தார்.நாளை காலை அஷ்டதளபாத பதம் ஆராதனையில் பங்கேற்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக