வெள்ளி, 6 அக்டோபர், 2017

MATHI NEWS இன்றைய 1 வரிச்செய்திகள்! 06/10/17- வெள்ளிக்கிழமை!



MATHI NEWS இன்றைய 1 வரிச்செய்திகள்!  06/10/17- வெள்ளிக்கிழமை!

தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நெல்லை, எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் 77 வயதான கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று வயது வெறும் எண் மட்டும்தான் என்று நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் பிறந்து, பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் 2 வருடம் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.

தமிழக அரசின் 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினை காரணமாக இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கும் வரை இந்த முடிவில் மாற்றமில்லை என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

ராஜராஜ சோழனின் 1032வது சதயவிழா அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 2 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

40 மொழிகளின் உரையாடலை உடனடியாக மொழியாக்கம் செய்யும் ஹெட்போனை கூகுல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

24 நாடுகள் பங்கேற்கும், 17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று(அக்.,6) துவங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக