செவ்வாய், 24 அக்டோபர், 2017

MATHI NEWS இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 24/10/17 !

MATHI NEWS இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 24/10/17 !

விரைவில் விடுதலை ஆவேன் பரோலில் வெளிவர குறல் கொடுத்த அனைவருக்கும் நன்றி - பேரறிவாளன்.

பரோலை நீட்டிக்க மறுத்தது தமிழக அரசு :
2 மாத பரோல் முடிந்ததை அடுத்து வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் பேரறிவாளன்.

போலீஸார் சங்கம் அமைக்க மகாராஷ்டிர மாநில பாஜக அரசு அனுமதி.
அறக்கட்டளையாக பதிவு செய்து கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி.

உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்தை கட் அவுட், பேனர்களில் பயன்படுத்தக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் மற்றும் இயக்குநர் அமீரை விடுவித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு.

நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நாள்- "கறுப்பு தினமாக" அனுசரிப்பு அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் - திமுக செயல் தலைவர் தளபதி முக.ஸ்டாலின்.

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்குவதில் தவறில்லை விடுதலை செய்வதிலும் தவறில்லை - டிடிவி தினகரன்.

கந்துவட்டியை ஒழிக்க அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் முதலிடம் வகிப்பது டெங்குவும், லஞ்சமும் தான் என விஜயகாந்த் குற்றச்சாட்டு.

திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் ஆட்சி கலைவது உறுதி - தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், பாஜகவினரையும் ஒருநாள் முதுகில் குத்துவார்கள் - டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மத்திய அரசு விஜயை மறைமுகமாக மிரட்டி வருகிறது - சீமான்.

திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜகவை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.7 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு.

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு.

நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது - திமுக முதன்மை செயலர் துரைமுருகன்.

கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்.

கரூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன் விசிக போராட்டத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது : ஹெச். ராஜா.

யாழ் நூலகத்துக்கு அரிய வகையான ஒரு லட்சம் மதிப்புள்ள நூல்களை அனுப்பும் திட்டம் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்.

மற்ற மாநிலங்களை விட தமிழக சிறைகளில் ஏற்படும் உயிரிழப்பு குறைவு : உயர்நீதிமன்ற கிளையில் சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல்.

கந்துவட்டி குறித்து புகார் மனுக்களை பெறுவதில் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : நெல்லை மாவட்ட எஸ்பி.

நெல்லையில் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கைதான தளவாய்ராஜ் பாண்டியன் என்பவருக்கு நவ.7 வரை நீதிமன்ற காவல்.

கந்துவட்டி புகார் குறித்து இனி மாதம் ஒருமுறை கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் - நெல்லை எஸ்பி.

சதீஷ்குமார் என்ற நபருக்கும் காரில் சென்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கும் இடையே மோதல் சம்பவம் : இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட மாரியப்பனுக்கு எதிரான வழக்கு நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் - டிடிவி.தினகரன்.

சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் வகையில், தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

பெண்களிடம் சில்மிஷம் 2 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு.

தீக்குளிப்புக்குக் காரணமாக இருந்த, போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை வேண்டும் - முக.ஸ்டாலின்.

நாட்டின் பொருளாதார அடிப்படை வலிமையாக உள்ளது.பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன : அருண் ஜெட்லி.

கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருப்பதை நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது : நல்லகண்ணு.

ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16ம் தேதி நடைபெறும்.

தமிழிசை பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார்.

பிரேசிலில் உள்ள 30 அடி உயர பாலத்தில் 245 பேர் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி கின்னஸ் சாதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக