என் அண்ணன் திருமா வராமல் நான் சாப்பிடமாட்டேன்! இயக்குனர் நிரோஜன்
13/10/17 அன்று இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் உதவி இயக்குனர் - நிரோஜன் (ஈழ தேசம்).அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி -சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது!
ஐயா பழநெடுமாறன், ஐயா காசி ஆனந்தன், ஐயா வைகோ, அண்ணன் வேல்முருகன், அண்ணன் சீமான், அண்ணன் மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதமன், நடிகர் & எழுத்தாளர் செயகாந்தன், அண்ணன் மணி (பத்திரிகையாளர்) பல நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள் அனைவரும் வந்து வாழ்த்தி நின்றாலும் - தம்பி நிரோஜனின் பார்வையெல்லாம் - வாசலையே பார்த்திருந்தது!
ம்ம்ம் அவனது அன்பு அண்ணன் திருமா இன்னும் வரவில்லை!
வேறு ஒரு முக்கிய நிகழ்வில் இருந்த - தலைவர் அவர்களால் நேரத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கஇயலவில்லை!
அனைவரும் கடந்துச்சென்றார்கள்! உறவினர்களும் கலைந்துச்சென்றார்கள்!
இரவு 10.10 ஆனதால் - மாப்பிள்ளையையும் & பெண்ணையும் சாப்பிட அழைத்தார்கள்!
தம்பி நிரோஜன் -முடியாது என மறுத்தார்!
என் அண்ணன் திருமா - வருவதாக வாக்களித்திருக்கிறார்! நிச்சயம் வருவார் என்றார்!
அவர் என்னை வாழ்த்தினால் தான் என் மனம் பூரணமடையும் என்று அழுத்தமாக சொன்னார்!
என்ன சொல்வதென்று தெரியாமல் சுற்றி இருந்த உறவுகள் திகைத்து நின்றார்கள்!
தம்பியின் மனம் அறிந்த அண்ணன் ஓடிவந்தார் - இரவு 10.15 கு!
அரங்கமே அதிர்ந்தது! அத்தனை பேர் முகத்திலும் அளவற்ற மகிழ்ச்சி !
வந்தவர் தனது தம்பி நிரோஜனை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை சொன்னார்!
அடுத்த அரைமணி நேரம் - மாப்பிள்ளையை மறந்துவிட்டு அத்தனை பேரும் தலைவர் திருமா வை சுற்றி வளைத்து , புகைப்படம் எடுத்து ,அன்பினைக் கொடுத்து - தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்!
குட்டீசுகளும் விடவில்லை !,மாமா, மாமா என அவரை ஆசையாக அழைத்து, அணைத்து - புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்!
இனிதே முடிந்தது தம்பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
திருமா : தமிழகத்திற்கு மட்டுமல்ல - ஈழ தேசத்திற்கும் நீங்கள் என்றும் செல்லப்பிள்ளை தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக