வெள்ளி, 27 அக்டோபர், 2017

அரசு மதுக்கடையில் பெண் விற்பனையாளர் இங்கு அல்ல கேரளாவில்.



அரசு மதுக்கடையில் பெண் விற்பனையாளர் இங்கு அல்ல கேரளாவில்.

*கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.*

*கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.*

*இவற்றில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர்.*

*இவர்கள் எழுத்துத்தேர்வு மூலமே பணியமர்த்தப்படுவர், இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட 8 பேர் தேர்வு பெற்றனர்.*

*ஆனால் பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படவில்லை.*

*இதை எதிர்த்து ஷைனி உட்பட 8 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.*

*இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.*

_அதில் அரசு பணியில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது._

*இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபான விற்பனை கூடத்தில் விற்பனையாளராக நேற்று பணியில் சேர்ந்தார்.*

*மற்ற பெண்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*கேரள அரசு மதுபான விற்பனை கழகம் தொடங்கி 33 ஆண்டுகள் ஆகின்றன, இதில் ஷைனி தற்போது முதல் விற்பனையாளராக பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக