சின்னம்மா அவர்களை சந்திப்போம்: 11 அமைச்சர்கள், 23 MLAகள் போர்க்கொடி!
தமிழக அமைச்சர்கள் மற்றும் MLA கள் சின்னம்மாவை சந்திக்க விருப்பம் முள்ளவர்கள், தங்களது விருப்பத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கூறியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக இந்த பஞ்சாயத்து ஓடியுள்ளது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நானே சின்னம்மாவை சந்திக்க வேண்டும் இருப்பினும் இந்த சூழ்நிலையில் சந்திப்பது டெல்லிக்கு ஏற்புடையதாக இல்லை என கூறியிருக்கிறார்.
ஆனால் அவரிடம் பேசிய அமைச்சர்கள், நாங்கள் சின்னம்மா மூலம் தான் பதவி, பொறுப்புக்கு வந்தோம், அம்மா இருக்கும் போதே சின்னம்மா தான் எங்களை பரிந்துரைத்தார். ஆகவே நாங்கள் அவரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என கூறினார்கள். அதை கேட்ட எடப்பாடி, மீண்டும் ஒரு சிக்கல் வராமல் நீங்கள் பேசுங்ககள் என கூறியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக சின்னம்மா பரோலில் வந்த நாளில் இருந்து தமிழக அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன், பாலகிருஷ்ண ரெட்டி, ராஜேந்திர பாலாஜி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், உட்பட கொங்கு மண்டல அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், என 11 அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பெரும்பாலும் அதிமுக MLA கள் சுமார் 23 பேர் வரை சின்னம்மாவை சந்திக்க உள்ளனர்.
சின்னம்மா வந்து செல்லும் வரை நடக்கிற அரசியல் நிகழ்வுகள், அதன் பின்பு நடக்கிற புதிய அரசியல் சூழல், தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக