புதன், 18 அக்டோபர், 2017

மெர்சல் விமர்சனம்



மெர்சல் விமர்சனம்

பதிவு செய்த நாள்: அக் 18,2017
தேனான்டாள் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 100வது படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் விஜய் காஜல் நித்யா மேனன் சமந்தா நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் மூன்று வித்யாசமான கேரக்டரில் மாறன், வெற்றி, தளபதி என்று நடித்துள்ளார்.
படம் ஓப்பனிங்கே நான்கு பேர் கடத்தலும், அதை தொடர்ந்து நடக்கும் கொலைகள் என பரபரப்பாக தொடங்குகிறது. இதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் களமிறங்குகிறார். அந்த கடத்தலில் ஈடுபடுவது 5 ரூபாய் டாக்டர் மாறன் விஜய் என்பது தெரிந்து, அவரை கைது செய்கிறார். விஜய் மருத்துவத்துறையில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? மூன்று விஜய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது மெர்சல் படத்தின் மீதிக்கதை.
5 ரூபாய் டாக்டர், மேஜிக் மேன், ஊர் தளபதி என்று மூன்று ரோல்களிலும் விஜய் கலக்குகிறார். படத்தில் சமூக கேள்விகளை விஜய் வைத்துள்ளார். மேஜிக் செய்து கொலை செய்கிறார். ஆடுகிறார்..பாடுகிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.. முதல் பாதியில் நிறைகிறார்.. இரண்டாம் பாதியில் குறைகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேல் எப்போதும் போல் அவர் பங்கிற்கு கலக்கியிருக்கிறார்.
வெளிநாட்டு போர்ஷனில் விஜய் ஜோடியாக காஜல் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி தருகிறார். சமந்தா, நித்யா மேனனும் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சரியாக நடிப்பில் அசத்தியிருக்கின்றனர்.
இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனியார் ஆஸ்பத்திரி நடத்தும் கேரக்டர். அவர் பாலிசியே இறந்து போறவர்களை வைத்து காசு பார்ப்பது தான். இந்த ஆஸ்பத்திரி நடத்துபவர்கள் நோக்கமே அப்பாவி மக்களிடம் காசு பிடுங்குவதுதான். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போகாமல் இவர்களது தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் இறப்பிலும் காசு பார்க்கின்றனர். இது ஒரு டீமாக செயல் படுகின்றனர். ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ், டிரைவர், புரோக்கர்கள் என்று அத்தனையும் தோல் உரித்துக்காட்ட அருமையான வாய்ப்பு விஜய் அட்லி அன் கோ விற்கு. ஆனாலும், இதில் நமக்கு ரமணாவை நினைவு படுத்துகிறார் அட்லி.
சாமானிய மக்களில் ஒருவனாக காளி வெங்கட். அவரது மகள் விபத்தில் சிக்க ஆறு லட்சம் கறந்து இறுதியில் இறந்து போவது உருக்கம்.
ஏழைகிட்ட உசிரு ஒன்னே ஒன்னுதான் இருக்கு, அதையும் எடுத்திட்டா எப்படி இவர்களை சும்மா விட முடியும் என்று விஜய் நியாயத்தை கையில் எடுத்து களைபறிக்க தொடங்குகிறார். விஜய் பேசும் வசனத்துக்கு ரசிகர்கள் கைதட்டல் தியேட்டர் வரை அதிர்கிறது
ஆஸ்பத்திரியில் ஏழைப்பெண் இறந்து கலவரம் பிரச்சனைகள் கை கோர்க்காமல் இருக்க அதே குப்பத்தில் மருத்துவ முகாம் நடத்த எடுக்கும் முயற்சி நல்ல மூவ்
மருத்துவம் இலவசமாக கிடைக்கனும் 25 சதவீதம் ஜிஎஸ்டி போடும்போது மருத்துவம் இலவசமாக ஏன் கொடுக்க கூடாது. பணக்காரர்களுக்கு கிடைக்கும் மருத்துவம் ஏழைகளுக்கும் கிடைக்கனும் போன்ற நிகழ்கால நிகழ்வுகளும் அசத்தல்.
ஆளப்போறான் தமிழன் பாடல்கள் புதிய எழுச்சி பாடல். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணியும் அசத்தல்.
ராஜா ராணி, தெறி என அட்லியின் படங்களில் பழைய படங்களின் சாயல் தெரிந்தன. அது, மெர்சலில் தெரிந்தாலும் அதை வழக்கம் போல தனது இயக்கத்தால், படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் மெர்சல் காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், மெர்சல் : தீபாவளிக்கு வெளிவந்த ஆட்டம்பாம்!
நன்றி தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக