சனி, 21 அக்டோபர், 2017

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூா். நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திருமதி பாரதி அவர்கள்



அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூா்.
நிர்வாக  அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திருமதி பாரதி அவர்கள்
 பொறுப்பேற்ற இரண்டு தினங்களிலிலேயே சிறப்பு தரிசன நுழைவுக்கட்டணத்தில் நடந்த தில்லு முல்லுகளை சரி செய்து திருக்கோவிலுக்கு சேர வேண்டிய வருமான தொகையினை பன்மடங்கு பெருக்கியுள்ளார். தினமும் காலை திருக்கோவில் முழுவதும் Surprise Visit செய்வதால் பணியாளர்கள் துடிப்புடன் வேலை செய்கின்றனர். கந்தசஷ்டி விழாவினையொட்டி திருக்கோவில் முழுவதும் சுகாதார வசதிகளும் திறம்பட செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு  வருவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் கட்டி வந்த கல்லா கனிசமாக குறைந்ததை அடுத்து நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வராமலேயே கிழ்மட்ட அதிகாரிகள் அன்னதான முகாம்களை கோவில் வளாகத்திற்கு வெளியே கோவில்  பஸ்டான்ணடிற்கு  அப்பால் ஒதுக்கியுள்ள விபரம் அறிந்த நிாவாக அதிகாரி ஊழியர்களை கடுமையாக சாடி வழக்கமாக இயங்கி வந்த அதே இடத்திலேயே தொடர்ந்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து  பந்தலும் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவிலுக்கு சொந்தமான அறைகளை குலுக்கல் முறையில் Transparency  யாக தேர்வு செய்து ஏழை பணக்காரர் மற்றும் விஐபிக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பக்கதர்களுக்கு  வாடகைக்கு  கொடுத்துள்ளார். மொத்தத்ததில் தற்போது பொருப்பேற்றுள்ள நிர்வாக அதிகாரியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.  அவருக்கு நமது உளம் கனிந்த பாராட்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக