ஞாயிறு, 1 அக்டோபர், 2017

"யாரும் அறிந்திடாத சுவிட்சர்லாந்தை பற்றிய ரகசியங்களை வெளியிட்ட அந்த குற்ற வாலியார்?



"யாரும் அறிந்திடாத சுவிட்சர்லாந்தை பற்றிய ரகசியங்களை வெளியிட்ட அந்த குற்ற வாலியார்?

*ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா செல்ல அல்லது அங்கு வாழ தயாராக இருப்பவர்கள் பின் வரும் சுவிஸை பற்றிய சுவாரஸ்ய உண்மைகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.*


உலகில் சதுர வடிவில் கொடிகள் கொண்ட நாடுகள் சுவிட்சர்லாந்தும் ஒன்று. மற்றொரு நாடு வத்திக்கன் ஆகும்.

சுவிஸின் லத்தீன் பெயர் Confoederatio Helvetica என்பதாகும். சூரிச் நகரத்தில் உள்ள காபி உலகின் மிக விலை உயர்ந்தது. இன்ஸ்டன்ட் காபி தோன்றியதே சுவிட்சர்லாந்தில் தான்.

1867ம் ஆண்டு சுவிஸ் தொழிலதிபர் ஹென்நரி நெஸ்லே, நெஸ்லே நிறுவனத்ததை தொடங்கினார்.

சுவிட்சர்லாந்து உள்ள குடிமக்கள் நாடாளுமன்றம் இயற்றும் புதிய சட்டங்களை எதிர்க்கலாம்.
புதிய சட்டம் இயற்றப்பட்ட 100 நாட்களுக்குள் சட்டத்திற்கு எதிராக 50,000 பேர் கையெழுத்திட்டு சமர்பித்தால், புதிய சட்டம் குறித்த தேசியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.

உலகின் மிக பிரபலமான கண்டுபிடிப்புகள் சில சுவிஸ் நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தற்பெருமை கொண்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரபல சூத்திரம் சுவிஸில் உருவாக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் படி ஜப்பானை தொடர்ந்து சுவிஸ் ஆண்கள் உலகின் அதிக ஆயுள் எதிர்பார்ப்புக் காலம் கொண்டவர்கள் ஆவார். ஐரோப்பாவில் உள்ள சிறந்த கணிதவியலாளர்கள் சுவிஸ் நாட்டவர்கள் ஆவார்.

சுவிட்சர்லாந்தில் ஜோடியாக மட்டுமே செல்லப்பிராணி வைத்திருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.ஒரே ஒரு செல்லப்பிராணி வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

*சுவிட்சர்லாந்தில்*



"சுவிட்சர்லாந்தில் நாய் வைத்திருப்பவர்கள், நாயின் அளவு மற்றும் எடை தீர்மானிக்கப்பட்டு வருடாந்திர வரி செலுத்த வேண்டும்.

உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியாக பிறந்து வாழ ஏற்ற சிறந்த இடங்களில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.

சுவிஸில் 3000 மீட்டர் உயரத்துக்கு மேல் சுமார் 208 மலைகள் உள்ளது.

சுவிட்சர்லாந்தில் குழந்தையின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பெயர் வைக்க பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கு இடையே ஒரு கணிசமான சொத்து இடைவெளி உள்ளது.

சுவிட்சர்லாந்தில் தாராளவாத துப்பாக்கி சட்டங்கள் இருந்தாலும் தொழில்மய நாடுகளில் குறைந்த குற்ற விகிதங்கள் உள்ள நாடாக சுவிஸ் திகழ்கிறது. சுவிஸ் ஆண் குடிமக்களுக்கு கட்டாய இராணுவ சேவை உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகள் சுவிட்சர்லாந்தில் அமைதி மற்றும் அழகை உறுதி செய்ய அனைவரும் கட்டாயமாக சமுதாய விதிகளை பின்பற்ற வேண்டும்.

சுவிட்சர்லாந்தின் கோதர்டு சுரங்கப்பாதை உலகின் மிக நீளமானதாகும். அதன் நீளம் 57 கி.மீ என அளவிடப்பட்டுள்ளது. இதில், 2.3 கீ.மீ ஆல்ப்ஸ் மலைக்கு கீழ் அமைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் திருமணங்கள் கிட்டத்தட்ட பாதி விவாகரத்தில் முடிவடைகிறது

உலகில் கஞ்சா பயன்பாட்டில் மிக உயர்ந்த விகிதங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக சுவிஸ் உள்ளது.

சுவிஸில் ஆங்கிலம் அதிக அளவில் பிரபலம் என்றாலும் சுவிச்சர்லாந்தில் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மற்றும் Rhaeto-Romantsch என நான்கு ஆட்சி மொழிகள் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக