புதன், 18 அக்டோபர், 2017

அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?



அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .

ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,

அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .

இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .

இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....

கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .

தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது .

இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக