சனி, 30 செப்டம்பர், 2017

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா?



தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா?

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்த பன்வாரிலால் புரோஹித், மூன்று முறை நாக்பூர் தொகுதி எம்.பியாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் 2 முறையும் பாஜக சார்பில் ஒரு முறையும் என மூன்று முறை எம்.பியாக இருந்துள்ளார். அசாம் மாநில ஆளுநராக சிறிது காலமும் மேகாலயா ஆளுநராகவும் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்.
தொடக்கத்தில் காங்கிரசில் இருந்த பன்வாரிலால் புரோஹித், பிறகு பாஜகவிற்கு சென்று 1996-ம் ஆண்டு பாஜக சார்பில் எம்.பி ஆனார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் காங்கிரசிற்கு சென்ற பன்வாரிலால், மறுபடியும் பாஜகவில் சேர்ந்தார். இவ்வாறு காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டு முறை புரோஹித் மாறி மாறி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 2003-ம் ஆண்டு விதர்பா ராஜ்ய கட்சி என்ற கட்சியை புரோஹித் தொடங்கினார்.
இவ்வாறு அரசியலில் எம்.எல்.ஏ, எம்.பியாக மட்டுமல்லாமல் தனிக்கட்சி நடத்திய அனுபவமும் புரோஹித்துக்கு உண்டு.
தமிழகத்தில் அரசியல் நெருக்கடி மிகுந்த இந்த நிலையில், புரோஹித் எப்படி செயல்படப் போகிறார்? பிரச்னைகளை திறம்படக் கையாள்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

முதல் விடுதலை தற்கொலைப் போராளி குயிலி


சிறப்பு பார்வை இன்று குயிலியின் நினைவுநாள்...
சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு உற்றதுணையாக இருந்து, ஆங்கிலேயர்களின் ஆயுதங்கிடங்கை தீயிக்கு இறையாக்கிய முதல் பெண் தற்கொலைப் போராளி வீரமங்கை குயிலியின் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

*முதல் விடுதலை தற்கொலைப் போராளி குயிலி..!*

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.

தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு.

ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.

அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.

"1776ம் ஆண்டு"

வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.

குயிலி. அதுதான் அவள் பெயர்.

வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.

வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்.. ஒருநாள். குயிலியிடம் வந்தார்,

"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"

"சொல்லுங்கள் ஐயா!''

"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''

"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.

அன்றிரவு.

குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார்.

அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது.

கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார்.

தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார்.

கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.

ஒருநாள். நள்ளிரவு.

வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது.

கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார்.

அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.

நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு

மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன.

ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.

சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.

"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது.

இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''

அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள்.

"பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?''

என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.

"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!''

ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.

பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது.

"எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.

அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.

ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.

அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.

அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவி

ற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது.

புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது.

இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.

"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.

வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.

வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு,

"வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.

நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.

ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.

பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.

இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார்.

திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார்.

வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.

குயிலி என்ன ஆனார்.

போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது.

அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது.

நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன்.

என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள்.

வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின.

கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்?

குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது.

குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது.

தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.

அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக !!!

(வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை)..


தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்


தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

1. அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா,
2. பீகார் - சத்யபால் மாலிக்,
3. அசாம் - ஜகதீஷ் முகி,
4. மேகாலயா - கங்கா பிரசாத்
5. தமிழ்நாடு - பன்வாரிலால் புரோஹித்

தமிழக புதிய கவர்னராக *பன்வாரிலால் புரோஹித்* நியமனம்.

இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் 3முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பா.ஜ.வில் இணைந்தார்.

இதே போன்று மற்ற சில மாநிலங்களிலும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னர- *தேவேந்திர குமார் ஜோஷி.*

மேகாலயா கவர்னர - *கங்கா பிரசாத்*

அசாம் கவர்னர - *ஜெகதீஷ் முகி*

அருணாச்சல பிரதேச கவர்னர - *பி.டி.மிஸ்ரா*

பீஹார் கவர்னர - *சத்யபால் மாலிக்*

மரபணு நோயைப் பெருக்கும் அகமணத் திருமணங்கள்



மரபணு நோயைப் பெருக்கும்  அகமணத் திருமணங்கள்: என்ன


மீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.

குறிப்பிட்ட சாதிச் சமூகத்தில் மரபணு சார்ந்த பரம்பரை நோய்கள் இயல்பைவிட கூடுதலாக இருக்கின்றன எனவும் உள்ளபடியே அகமண உறவு காரணமாகவே இவை உருவாயின எனவும் ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி. ஆய்வு நிறுவனத்தைss சார்ந்த ஆய்வளர்கள் நிறுவியுள்ளனர். சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல சமூகத்தில் மரபணு நோயையும் கூடுதலாக்கிப் பொதுச் சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்று சுட்டுகிறது இந்த ஆய்வு.

நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபியல் நோய் ஆபத்து குறித்து நாம் ஏற்கெனவே அறிவோம். இந்த ஆய்வு, சாதிக்குள் நடக்கும் அகமண திருமணமும் இவ்வாறே மரபியல் நோய்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது. சாதி, குலம், பண்பாடு அல்லது மொழி என்ற பாகுபாட்டுப் பிரிவின் அடிப்படையில் திருமணங்கள் அமைந்து அகமண முறை நடைமுறைப்படுத்தும் நிலையில் அந்த மக்கள் பிரிவிடம் மரபியல் வேறுபாடுகள் குறைந்துபோகின்றன. 'ஏழு தலைமுறை' கடந்து திருமணம் என்று கோத்திரம் பார்த்துத் திருமணம் செய்வதும் பலன் தராது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அகமண முறை நீடிக்கும் நிலையில் பல்வேறு கோத்திரங்களுக்குள்ளும் மரபியல் வேறுபாடுகள் அழிந்துபோகின்றன.

பண்டைய காலத்தில் திடும்திடுமென கொள்ளை நோய்கள் பரவி, கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து போவர்கள். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவில் இருந்தவர்களில் பலர் திடீரென மடிந்துபோனால் அந்தக் குழுவின் மரபியல் பரவல் சுருங்கிவிடும். அந்தக் குழு, அகமண முறையைக் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தால் அதன் பின்னர் ஒடுங்கிய மரபியல் பரவலே அந்தக் குழுவில் அமைந்துபோகும். அதேபோல ஒரு குழுவில் இருந்த சிலர் பிணக்கம் காரணமாக அல்லது பிழைப்பு தேடித் தனியாக வேறு ஒரு குழுவை ஏற்படுத்திப் பிரிந்து சென்று தொலைவில் வேறு ஒரு நிலப்பகுதியில் குடிபுகுந்து வாழத் தொடங்கி அவர்களும் தங்களுக்குள் அகமண முறையைப் பின்பற்றினாலும் அந்தக் குழுவிடமும் மரபியல் பரவல் குறைந்துபோகும். மக்கள்தொகை மரபியல் ஆய்வில் இவை முறையே மக்கள்தொகை முட்டுப்பாடு (population bottleneck)மற்றும் ஸ்தாபக நிகழ்வு (founder event) கோட்பாடு என அழைகப்படுகிறது.

அகமண முறையைப் பின்பற்றினால் மக்கள்தொகை முட்டுப்பாடு மற்றும் ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தலைமுறை தலைமுறையாக தொடரும்; காலப்போக்கில் மரபியல் பரவல் மேலும் சுருங்கும். அகமண முறையின் காரணமாக மரபியல் பரவல் செழிக்க முடியாமல் தேங்கிய நிலைக்கு உள்ளாகும்போது ஒடுங்கு-மரபணுப் பிறழ்ச்சி வழி ஏற்படும் பரம்பரை நோய்கள் (recessive genetic diseases) கூடும். மரபியல் பரவல் ஒடுங்கினால் அது மரபியல் நோய்களுக்கு இட்டுச்செல்லும்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளத்தைச் சார்ந்த மானுடவியல் பார்வையில் தனித்தனிக் குழுவாக அகமண முறை கொண்டு வாழும் 275 சாதிகளைச் சார்ந்த 2,800 நபர்களின் மரபணு தொகுதிகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்தக் குழுக்களில் ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருந்தது புலப்பட்டது. இன்று பல லட்சம் மக்கள்தொகை கொண்டதாகப் பல சாதிகள் இருந்தபோதிலும், ஆயிரம் தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் காரணமாக நீண்ட மரபணுத் தொடர்கள், அகமண முறையின் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட குழுவில் எல்லோரிடமும் பரவியிருப்பது இந்த ஆய்வில் வெளிப்பட்டது. எனவே, மரபணு நோயைத் தூண்டும் மரபணு தாய் தந்தை இருவரிடமும் அமைந்து குழந்தைக்குப் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதன் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட மரபணு நோய் அந்தச் சாதியில் பரம்பரை நோயாக வளர்ந்துவிடுகிறது.

ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி-சி.எஸ்.ஐ.ஆர். (CCMB-CSIR) எனும் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த குமாரசாமி தங்கராஜும் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியை சார்ந்த டேவிட் ரெய்ச்சும் இணைந்து தலைமையேற்று நடத்திய இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த குஜ்ஜர் சமுதாயம், உத்தர பிரதேசத்தைச் சார்ந்த பனியா, தெலங்கானா பகுதியின் ரெட்டி சமூகம், தமிழகத்தில் பிராமணர்கள், கள்ளர்கள், அருந்ததியர்கள், புதுச்சேரியை சார்ந்த யாதவர்கள் முதலானோரிடையே ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

முப்பது லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் அகமண முறையின் காரணமாக வலுபெற்ற ஸ்தாபக நிகழ்வு தொடர்ச்சியாக தெலங்கானா வைசிய சமுதாயத்தில் ‘பிசிஎச்ஈ’ (BChE - butyrylcholinesterase) எனும் அரிய மரபணு நோய் மற்ற சமுதாயங்களைவிட நூறு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று சுட்டும் இந்த ஆய்வு, சாதி அமைப்பின் வேறு ஒரு அவல முகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘பிசிஎச்ஈ’ மரபணு நோய் காரணமாக ஏற்படும் வளர்சிதைமாற்றச் சீர்கேடுகளின் காரணமாக இந்த நோய் கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைகளின்போது வலி தெரியாமல் இருப்பதற்குத் தரப்படும் மயக்க மருந்து மீது ஒவ்வாமை ஏற்படும்.

எனவே, இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம். எந்த ஒடுங்கு மரபியல் நோய் எந்தெந்த சாதியில் மிகுந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான ஒடுங்கு மரபணுவை இனம்காண்பது இந்த ஆய்வின் அடுத்த படிநிலை என்று தங்கராஜ் கூறுகிறார். தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துவரும் தற்போதைய காலகட்டத்தில் மரபணு நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும், ஆகவே தங்களின் ஆய்வு பொதுச் சுகாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்கிறார்.


இப்படிப் பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் தெளிவாகக் கூறிவிட்டன. எனினும் நம் சமூகமோ இன்னமும் சாதியை இறுக்கமாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது!

-- த.வி. வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘விஞ்ஞான் பிரசார்’ என்ற தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 30/09/17 !



MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 30/09/17 !

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் நீயமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 7 படகுகளை மீட்டு, ராமேஸ்வரம் புறப்பட்டனர் தமிழக மீனவர்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிஜே ஹல்லி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர்.திருநெல்வேலியை சேர்ந்த சம்பத் ராஜ் பெங்களூருவின் 51வது மேயராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் : அருணாச்சலப் பிரதேசம் - பிடி. மிஸ்ரா , பீகார் - சத்யபால் மாலிக் , அசாம் - ஜகதீஷ் முகி , மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு.

சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.

ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்யாமல் புல்லட் ரயிலுக்கு கனவு காண்கிறார் மோடி - சிவசேனா.

பொதுச்செயலாளர் பதவி இனி கிடையாது என்ற பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராகவும், அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக்கூடாது - எம்பி கேசி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு.

காங்கிரஸ்சார்பில் 2 முறையும், பாஜக சார்பில் ஒரு முறையும் நாக்பூர் மக்களவை எம்பியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைபாடு காரணமாக பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெசவாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகை விரைவில் வழங்கப்படும் - தஞ்சையில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் பேட்டி.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதி மன்றத்தை அணுகுவோம் - தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்.இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் , ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும். அடிப்படை உறுப்பிர்களின் உரிமைகளை காக்க வேண்டும் - எம்பி கேசி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் தனிச்செயலரின் 2 மகன்களுக்கும் டெங்கு; ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி சுகாதார சீர்கேடே காரணம் - கிரண்பேடி.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக பெற்ற கடற்படை அதிகாரி தேவேந்திரகுமார் ஜோஷி நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அம்பத்தூரைச் சேர்ந்த சிறுமி ஜெனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பெரிய கலையமுத்தூரைச் சேர்ந்த பீர்பானு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 29 வது நாளாக தடை.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 34000 லிருந்து 20000 கன அடியாக குறைந்தது.

புனேவில் ஏடிஎம்மில் நிரப்ப காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடி கொள்ளை.

நடிகரும் எழுத்தாளருமான டாம் ஆல்டர் தோல் புற்றுநோய் காரணமாக காலமானார்.

வடசென்னை அனல்மின்நிலையத்தில் 2ஆவது பிரிவில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்யப்பட்டதால் 1200 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்.

திருத்தணி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமி உடனடியாக மீட்பு.

ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றிய 10 காவலர்கள் பணியிடமாற்றம்.சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறியதால் நடவடிக்கை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை மலையப்ப சுவாமி தேரில் நான்கு மாட வீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்


தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

புதுடெல்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தவர். தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?
------------------------------------------------------------------------

பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).

சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.

ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

• உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

• நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல்  
        நீதிமன்றம்.
• நீதிமன்றம் துவங்கும் நேரம்.
• உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக
        உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து
        வரச்செய்வது.
• முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக்
        கொள்ளச் சொல்வது.

நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:
=========================================

பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம்.

அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.
பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்:

• குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
• சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
• பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
• காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
• மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
• களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
• சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
• குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.

பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.

பிணையில் விடுவிக்க மனு:
==========================
• குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.

• வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.

அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

• நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
• பணியை இழக்க நேரிடுமா?
• பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
• காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?

குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்:
==============================================
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.

மேல் முறையீடு:
-------------------------
பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.

ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.

பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள்:
-------------------------------------------------------------------------
குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நிபந்தனை எதுவும் இல்லாமல்
• சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு
• பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.

சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம்.

 நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால். அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு. அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

பிணை முறிவும், பிணையாளிகளும்:
====================================
• பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.
• குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.
• பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
• அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.
• எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
• பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்ப தற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
• தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.
......

MATHI NEWS *செய்திகள்@29/9/17

MATHI NEWS *செய்திகள்@29/9/17

 தமிழகம், புதுவையில் கனமழை வாய்ப்பு

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டில் 4-ந் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் இந்த அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

கிருஷ்ணகிரி : கெலவரபள்ளி அணை நிரம்பியது; வெள்ள அபாய எச்சரிக்கை

டெங்கு இறப்புகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படாததே காரணம்: அன்புமணி

மேட்டூர் அணையில் இருந்து 2-ந் தேதி தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அணையில் நீர் திறப்பு; ஓசூர் பார்த்தகோடா தரைப்பாலத்தை கடக்க தடை

பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

அதிமுக., அம்மா அணியின் அவைத் தலைவர் செங்கோட்டையன் நீக்கம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு

நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

காங்., துணை தலைவர் ராகுல் தான் ஹிந்துவா, அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

இன்று ஸ்ரீநகர் செல்கிறார் நிர்மலா சீதாராமன்

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பதஞ்சலி நிறுவனத்தின், 'பிராண்டு' மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உயரும் என, அதன் நிறுவனர், பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

செப்-29: பெட்ரோல் விலை ரூ. 73.15, டீசல் விலை ரூ.61.91

புதுச்சேரியில் 400 காவலர்கள் இடமாற்றம்

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது

உ.பி.யில் இந்து - முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பஜ்ரங் தல் அமைப்பு

800,000 போதை மாத்திரைகளை கடத்திய ரோஹிங்யா வாலிபர்களை வங்கதேச போலீஸ் கைது செய்தது

போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை

புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

தெருச்சண்டை விவகாரம்: ஸ்டோக்ஸ், ஹேல்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கம்

வியாழன், 28 செப்டம்பர், 2017

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு



பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு

பெங்களூரு மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டார்.

*நெல்லையை சேர்ந்தவர்*

பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று(செப்.,28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர். மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் போட்டியிட்டார். அவருக்கு சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்தன. அவர் 139 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் பிஜே ஹல்லி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர். திருநெல்வேலியை சேர்ந்த சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மேயராக பதவியேற்க உள்ளார்.

துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வானார்.இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ஜ.,வினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர்.

சசிகலா மற்றும் நடராஜன்


சசிகலா மற்றும் நடராஜன்

எத்தனை ஐஏஎஸ்?.
எத்தனை ஐபிஎஸ்?
எத்தனை அதிகாரிகள்?
எத்தனை எம்எல்ஏகள்?
எத்தனை எம்பிகள்?
எத்தனை ராஜ தந்திரம்?
எத்தனை கட்டுக்கோப்பு?
எத்தனை துரோகம்?
எத்தனை அதிகாரம்?
எத்தனை துஷ்பிரயோகம்?
எத்தனை வியூகம்?
எத்தனை சாதூரியம்?
எத்தனை ஒருங்கிணைப்பு?
எத்தனை பலம்?
எத்தனை நீதி அவலம்?
எத்தனை பிரிவினைகள்?
எத்தனை கோடான கோடி பணம்?
எத்தனை வியாபாரம்?
எத்தனை அபகரித்த மாட மாளிகைகள்?
எத்தனை மிரட்டல்கள்?
எத்தனை தர்பார்கள்?
எத்தனை சமயோஜித ஆற்றல்?
எத்தனை வஞ்சகம்?
எத்தனை சிந்தனை?
எத்தனை வேதனை?
எத்தனை பட்டாளம்?
எத்தனை டாம்பீகம்?
அடேங்கப்பா...எத்தனை பிரம்மிப்பு!?.

இருந்தும் என்ன செய்வது?!.
நோக்கமும்,எண்ணமும் தவறாகி போனதே?!.

சாதுர்யமாக புத்தி வேலை செய்ய வேண்டிய நேரத்தில் உடல் ஒத்துழைப்பு இல்லாமல் வீணாய் போனதே!?.

வாய்ப்பு கிடைத்தும்,பேரதிகாரம் கிடைத்தும் ரசிக்க வாழ்வில் இயலவே இல்லையே!!.

அங்குதான் நண்பர்களே தர்மம்,நல் எண்ணம் எனும் மகா சக்தி உணர்வாய் கொப்பளித்து வருகிறது.

கடவுள் நம்பிக்கை உள்ள மனைவி ஜெயிலில்...
கடவுள் நம்பிக்கை இல்லாத கணவன் உயிரை கையில் பிடித்த நிலையில்...
எல்லாம் கிடைத்தும் அனுபவிக்க இயலாத நிலை!!?.

தப்பு பண்ண வாய்ப்பு கிடைத்தாலும் தப்பு செய்யாதீர்கள் மக்களே.

பதவி இருக்கும் போது ஆடுபவர்கள் இதை எச்சரிக்கையாக கொண்டு வாழுங்கள்.

நம்பிக்கை துரோகம் மகா கொடியது.
பாவ விமோசனமே கிடையாது.

ஆடும் வரை ஆட்டம்...
கண்ணதாசன் பாடலே நமக்கு பதில்.

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 இரவு நடந்தது என்ன?



ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 இரவு நடந்தது என்ன?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, அதாவது மருத்துவ மொழியில் நோயாளியின் உடல்நிலை அறிக்கை (patient care report) புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. 10:01-க்கே அப்போலோவில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் போயஸ் இல்லத்தை அடையும்போது மணி 10:06. ஆம்புலன்ஸில் இருந்து விரைந்து சென்ற 3 பேர் கொண்ட மருத்துவக்குழு, போயஸ் தோட்ட இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. அங்கு மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்த முதல்வரை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். அசைவு மட்டுமே இருந்ததும், முதல்வரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவானதும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்ததும் நமக்கு கிடைத்துள்ள உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதாகாய்ச்சல் மற்றும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்திருக்கிறது.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், ஜெயலலிதாவின் உடலில் எந்த பகுதியிலும் காயமோ, புண்களோ இல்லை என்பதற்கான குறிப்பும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக மருத்துவ உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

MATHI NEWS முக்கிய செய்திகள்@28/9/17



MATHI NEWS முக்கிய செய்திகள்@28/9/17

தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை ஆப்கானிஸ்தான் சிறைக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் வீடு புகுந்து பாதுகாப்பு படை வீரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பாதிரியார் தாம் உழுன்னலில் இந்தியா திரும்பினார்.

இந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 'கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல்-உலக மேம்பாட்டு அறிக்கை 2018' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் உலக வங்கி வெளியிட்டது.

 ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை: தேர்தலில் வென்றதும் ஜெ.வை பார்த்தேன் - திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் புதிய தகவல்

ஜோலார்பேட்டை அருகே தண்டவாள விரிசல் ஏற்பட்டதால் சென்னைக்கு வரும் 5 ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பகத்சிங் பிறந்தநாள்; பிரதமர் மோடி வீரவணக்கம்

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு

சென்னையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க 81 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்களின் சேவையை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்பண்டிகைகள் எதிரொலி: நாளை முதல் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தருமபுரி அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்

வேதாரண்யம் அருகே 4-வது நாளாக தொடரும் கப்பலை மீட்கும் பணி

கழிவுகளால் அசுத்தமாக உள்ள வைகை ஆற்றை சுத்தம் செய்ய பல்லாயிரக்காண மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்று சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். பிரதமர் தொடங்கிய தூய்மையே சேவை எனும் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை சுத்தம் செய்ய மாணவர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில் இயங்கும் கோவை அச்சகத்தை மூடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு: வடமாநில அச்சகத்தை மேம்படுத்தும் நடவடிக்கை என தொழிலாளர்கள் புகார்

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

 மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு பெறுகிறார்

வேதாரண்யத்தில் கனமழை: 10 ஆயிரம் டன் உப்பு மழை நீரில் கரைந்தது

தருமபுரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 47 சவரன் நகை கொள்ளை

மதுரை ஆதீன மடத்தில் பூஜை செய்ய அனுமதி கோரி நித்யானந்தா மனு

சிதம்பரம் அருகே இறால் பண்ணைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி : ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

தேனி : கும்பக்கரை அருவியில் குளிக்க 27 வது நாளாக தடை

 ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல்கள் இயக்க தடை விதிப்பு

கொளத்தூரில் வாகனங்கள் சூறை: வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 8 பேர் கைது

குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்

சேலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முதல்-அமைச்சர் கட்சியினர், அதிகாரிகளுடன் ஆலோசனை

ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் எடுத்தது யார்?: சு.திருநாவுக்கரசர் கேள்வி

பில்லி, சூனியங்கள் செய்வதை தடை செய்ய தனிச்சட்டம்: கர்நாடக அரசு முடிவு

நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது சிவாஜி குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஜப்பான் பார்லி., கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்

10,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் லட்சுமணன் தங்கம் வென்றார்.

மதிய செய்திகள்@28/9/17

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சோனியா முடிவால் அதிருப்தி: பீகார் புதிய காங். தலைவருக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

ம.பி சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சிந்தியா - கமல்நாத் தகவல்

சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில் இந்தியாவின் புதிய பொருளாதாரம் இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்

பொருளாதார வீழ்ச்சிக்கு இனியும், முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம்: சசிகலா குடும்பத்திடம் தீவிர விசாரணை நடத்தும் வகையில் விசாரணை வியூகம் அரசாணையில் புதிய தகவல்

 ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சசிகலா குடும்பத்திற்கு சொத்து உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள்கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டத்தை மாற்றும் குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி-செங்கோட்டையன்

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சலால் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருப்பூர் அருகே புறவழிச்சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்துள்ளது. அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.அந்த உடலின் அருகே ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுதபடி இருந்தது.

நாகையில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

என் மனைவியை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார்கள்: தாடி பாலாஜி புகார்

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் தீ

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மை : சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்

அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்: திருமாவளவன்

ஜெனீவாவில் வைகோ பேச வாய்ப்பளிக்க கூடாது: சிங்களர்கள் புகார்

கோவை: இரட்டை கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பி.எஸ். கலந்து கொள்ள வேண்டும் நடிகர் பிரபு கோரிக்கை

கேரளாவில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் நொறுங்கி விபத்து

கேரள மாநிலம், ஆலப்புழை அருகேயுள்ள செட்டிக்குளக்காரா தேவி கோயிலுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த பூசாரி சுதிர் குமார், அங்கு பணிசெய்ய எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, அவரின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் முதல் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த பூசாரிமீது இரண்டாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: திலீப் காவல் நீட்டிப்பு

திருப்பதியில் பிரம்மோற்சவ கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சுற்றுலா துறையில் தனியார் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் அடையலாம் -உ.பி. அரசு

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி துர்கா பூஜையை முன்னிட்டு பாடல் ஒன்றுக்கு கவிதை வரிகளை எழுதியுள்ளார்.

டெல்லி-கோவிலுக்குள் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து எரித்து மறைத்து வைத்த கோவில் பூசாரி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு

‛பிளேபாய்' இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்

தெற்காசியாவில் ஜிகாதிகளின் எழுச்சிக்கு அமெரிக்காவும் காரணம்: பாகிஸ்தான்

பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

புதன், 27 செப்டம்பர், 2017

மதி செய்திகள் இன்றைய பரபரப்பு செய்திகள் 27/09/17

மதி  செய்திகள்  இன்றைய பரபரப்பு செய்திகள் 27/09/17

தமிழக அரசு சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க அழைத்து வருவதற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு.

சசிகலா , டிடிவி.தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.ஜெயலலிதாவை பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன் - டெல்லியில் தம்பிதுரை பேட்டி.

காவிரி விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் விளக்கம்.

ஜெயலலிதா உடலில் இருந்து எக்மோ கருவி அகற்றுவதற்கு முன் சசிகலா , ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டது - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் விளக்கம்.

திருத்தணி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.

மருத்துவர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது உச்ச வரம்பை 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இலங்கை புங்குடுதீவில் பள்ளி மாணவி வித்யா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு தூக்கு - யாழ்ப்பாணம் நீதிமன்றம் தீர்ப்பு.

ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தை வசூலிக்க கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனு.

ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் விசாரணை ஆணையத்தை வரவேற்கிறோம்.நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் - அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி.

அமெரிக்க ராணுவ விமானங்களை வாங்க உள்ளோம்.காவல்துறையை நவீனமயமாக்க ரூ 25,060 கோடி நிதி ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் மறியலால் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க அமைச்சர் மேட்டீஸ் ஆப்கான் சென்றுள்ள நிலையில் தலைநகர் காபூலில் 25 நிமிடங்களுக்குள் 3 குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன.

சென்னை, கோவிலாபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மணிவிழா : இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக.ஸ்டாலின் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

7வது ஊதிய குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடியிடம் ஒப்படைப்பு.

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் - தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.

அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர் எஸ்பி-யிடம் கேட்டுள்ளோம்.வேறு படிப்பை தேர்வுசெய்ய அனிதா தயாராக இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது சந்தேகம் அளிக்கிறது -தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களை குழப்பும் விதத்தில் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள்.விசாரணை ஆணையத்திற்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் விவகாரம் :
தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்ததாக மனைவி மீது நடிகர் தாடி பாலாஜி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் : திருமாவளவன்.

கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூக்கள் மலரத்தொடங்கின.

சிறையில் உள்ள கைதிகளுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த புகாரில் சேலம் மத்திய சிறைகாவலர் பணிநீக்கம்.

ட்விட்டரில் சோதனை முன்னோட்டமாக எழுத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் டைப் செய்யலாம் : ட்விட்டர்.


மாலை செய்திகள்@27/9/17


உலக பொருளாதார பட்டியலில் இந்தியா 40-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.

ஈராக்கில் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஆண்ட 2000-ம் ஆண்டு பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளான் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்து உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது நிகழ்ந்தவை தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாவூத் சகோதரருக்கு 4 நாள் போலீஸ் காவல்

பாலாற்றில் குளிக்கவும், இறங்கவும் தடை

சென்னையில் ரூ. 6 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அக்.,1 சிவாஜி மணிமண்டபம் திறப்பு: தமிழக அரசு

ரூ.50 லட்சம் மோசடி: ஐதராபாத்தில் போலி சாமியார் கைது

பறவை மோதியதால் ராய்பூரில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக ராய்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

போலி புகைப்படம் காட்டிய பாகிஸ்தானுக்கு ஐ.நா., கண்டனம்

மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் தாக்குதல்

ஆட்சி கவிழ்க்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ராவுக்கு 5 வருட சிறை

யாழ்ப்பாணம் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை

நிலவின் சுற்று வட்டப்பாதையில் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க அமெரிக்காவும்- ரஷ்யாவும் திட்டமிட்டு உள்ளன

பங்குச்சந்தைகள் கடும் சரிவு: சென்செக்ஸ் 440 புள்ளிகள் வீழ்ச்சி


*இரவு செய்திகள்@27/9/17

இனிப்பு வகைகள், பிஸ்கட், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, பீடி, சிகிரெட், உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தனி அங்கீகாரம் பெற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்-ராகுல் காந்தி

மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு

உடுமலையில் சைக்கிள் குண்டு வழக்கில் தலைமறைவான முஜிபுர்ரகுமான் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள முஜிபுர் ரகுமானை தேடப்படும் குற்றவாளியாக உடுமலை நீதிமன்றம் அறிவித்தது.

பி.இ மாணவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு-2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

போபாலில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காமிரா மூலம் கண்டுபிடிடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் கனமழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடானது; கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை

ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு: ஆந்திரா வானிலை ஆய்வு மையம்

ஜோதிடர் அறிவுரையின்படி, முதல்வர் ஆவதற்காக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவனையே மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக, தகவல் பரவி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பணி பட்டியல் வெளியீடு

மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீஸ் தேர்வு சிறப்பு பயிற்சி

சென்னை: ஸ்டாலினுடன் பேரறிவாளன் தாயார் சந்திப்பு

வந்தவாசி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை பலி

தமிழக அரசு ஸ்திரமற்ற, ஊசல் ஆடிக் கொண்டிருக்கும் அரசு : நாஞ்சில் சம்பத்

தகவல் மைய ஆணையர் கோபாலகிருஷ்ணன் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

எடியூரப்பா திடீர் பல்டி: பழைய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

பண மோசடி வழக்கு: தேஜஸ்வி, ராப்ரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரகதி திட்டம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு

டெல்லியில் 15 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்: துணை முதல் மந்திரி அறிவிப்பு

மராட்டியத்தில் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி வசதி இல்லாததால், ஆண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர்.

பிசிசிஐ பொதுமேலாளர் பதவியிலிருந்து ஸ்ரீதர் ராஜினாமா.

*இரவு செய்திகள்@27/9/17-பகுதி-2💐*


துர்கா பூஜை: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை: அமைச்சர் ராம்விலாஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை 3 மாதத்தில் முடிக்க தமிழக அரசு உத்தரவு

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் அழிப்பு

மியான்மரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது மோதலில் நடந்த கொடூரங்களுக்கு சாட்சியாகி உள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. சம்மன்

கே.கே.நகரில் பணமோசடி செய்து தலைமறைவான மகனைப் பிடிக்க தந்தையை கடத்திய கும்பலை சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்து தந்தையை மீட்டனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

அரசியல் விழாக்களுக்கு மாணவர்களை அழைத்து செல்ல அதிகாரிகள் துணை போகக்கூடாது: ஸ்டாலின் வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்கலை.க்குள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அடையாள அட்டையுடன் தான் வர வேண்டும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே கனமழையால் பாலம் உடைந்தது : 10 கிராம மக்கள் அவதி

விராலிமலை அருகே சுங்கசாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆதீன மடத்தில் பூஜை : பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் நித்தியானந்தா மனு

நான் இறந்துவிட்டால் ஐக்கிய ஜனதா தள கட்சி என்னாகும் என நிதிஷ்குமார் பேசியிருப்பது தொண்டர்கள் இடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பனராஸ் பல்கலை வன்முறைக்கு சமூக விரோத சக்திகள் காரணம் - முதல்வர் ஆதித்யநாத் விளக்கம்

ஐதராபாத்-குடும்பத்தாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக பொய்யான அறிக்கை அளித்து, வருமானவரி ரீபண்ட் பெற்றதில் தகவல்தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த 200 பணியாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த 200 பேருக்கு ரீபண்ட் பெற்றுக்கொடுத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தவறான ஆலோசகர்களால் பொருளாதார மந்த நிலை: ஆர்எஸ்எஸ் சார்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சாடல்

லே பகுதியில் சிக்கிய அமெரிக்கரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டது

ஐ.நா.வில் இந்தியாவிற்கு பதில் கூறிய பாகிஸ்தான், காசாவில் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

உடல்நிலை மோசமடைந்தது: நவாஸ் ஷெரீப் மனைவி மீண்டும் லண்டன் மருத்துவமனையில் அனுமதி

குர்திஸ்தானில் நடந்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது: ஈராக் பிரதமர் வலியுறுத்தல்

30 பேரைக் கொன்று மாமிசத்தைச் சாப்பிட்ட ரஷ்ய தம்பதி கைது

ரஞ்சி டிராபி: சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக புஜாரா நியமனம்

தெலுங்கானாவில் விசிக தொடக்கம்



மதி செய்திகள்
தெலுங்கானாவில் விசிக தொடக்கம்-

விசிக -தேசிய கட்சியாக பரிணாமம் பெறும் வாய்ப்பு

19.9.14 அன்று ஐதராபாத்தில் விசிக தொடங்கப்பட்ட வரலாற்று நிகழ்வை அறிந்திருப்பீர்கள்.
ஆறாவது மாநிலத்தில் விசிக கொடி பறக்கிறது என்பது நாம்
அனைவருக்கும் மகிழ்ச்சி .
தமிழ்நாடு,புதுவையில் நமது கட்சி வலிமையாக உள்ளது.
கேரளா ,கர்நாடக,ஆந்திரா,தற்போது தொடங்கப்பட்டுள்ள தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களிலும வலிமை பெற வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ்,BJP,BSP,CPM,CPI,NCP,AAP ஆகிய கட்சிகளுக்கு அடுத்து ஆறு
மாநிலங்களில் கட்சி அமைப்பை பெற்றிருக்கிற கட்சியாக விசிக திகழ்கிறது .
அதாவது தேசிய கட்சியாக பரிணாமம் அடையக்கூடிய வாய்ப்பை விசிக பெற்றிருக்கிறது..
.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தோழர் மணியரசன் பேசும் தமிழ்த்தேசியம் உண்மையானதா? போலியானதா?

தோழர் மணியரசன் பேசும் தமிழ்த்தேசியம் உண்மையானதா? போலியானதா?
.....................................................

'தமிழ் இந்து' இதழில் தோழர் சமஸ் எழுதிய கட்டுரைக்கு தோழர் மணியரசன் பதில் எழுதியுள்ளார். தோழர் சமஸ் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விடை சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
தோழர் மணியரசனுக்கும் உண்டு. ஆனால், அவரது உடனடி பதில் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் சமஸ் மீது சந்தேகத்தை எழுப்புகிறார். அவரைத் தமிழத்தேசியத்தின் எதிரியாக முத்திரை குத்துகிறார்.  இதனால், தோழர் மணியரசன் பேசும் தமிழ்த்தேசியம் உண்மையா? போலியா? என்னும் வினாவை எழுப்புகிறது.

இதற்கு விடைதேடுவதற்கு முன் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் கடந்த பத்தாண்டுகளாக சான்றோருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் விருதுகள் வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டுக்கான (2017) 'செம்மொழி ஞாயிறு'விருதை
தமிழறிஞர் அய்யா இளங்குமரனார் அவர்களுக்கு எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
வழங்க முடிவு செய்து அவரின் ஒப்புதல் கேட்க சொன்னார். நானும்
தமிழறிஞர் இளங்குமரனாருடன்
பேசினேன். முதலில் தயங்கியவர் பின்னர் ஒப்புக்கொண்டார். எமது
தலைவரிடமும் இந்த மகிழ்ச்சியான
தகவலைச் சொன்னேன். ஆனால், விருது வாங்கும் நாளில் அய்யா இளங்குமரனார் வரவில்லை. இரு நாட்களுக்கு முன்பே வரவியலாது என்கிற தகவலை எமது தலைவரிடம்
சொல்லி உள்ளார்.
என்னிடம் ஒப்புக்கொண்ட அந்த தமிழறிஞர் ஏனோ ஏதோ ஒரு சூழலில் வர முடியாமல் போய்விட்டது.

ஆனால், இந்த செய்தியை ஒரு முக்கியமான செய்தியாக தோழர் மணியரசன் அவர்கள் தனது  'தமிழர் கண்ணோட்டம' மாத இதழில் "விடுதலைச்சிறுத்தைகள் விருதை தமிழறிஞர் இளங்குமரனார் வாங்க மறுப்பு" என்று பதிவிட்டார்.
அதாவது, விடுதலைச்சிறுத்தைகள் வழங்கிய விருதை தமிழறிஞர் இளங்குமரனார் வாங்க மறுத்தது தோழர் மணியரசனுக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கையிலிருந்து
எழுத்தாளர் தோழர் சமஸ் அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிற
தோழர் மணியரசன் அவர்களின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது, தோழர் சமஸ் அவர்கள் எமது தலைவர் எழுச்சிதமிழர் அவர்களை பாராட்டியும் அவரது தலைமையில் நடைப்பெற்ற  வரலாற்றுச்சிறப்புமிக்க மாநில சுயாட்சி மாநாட்டின் தேவை குறித்து எழுதியதைப்பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே கடந்து போவதை கூர்ந்து
கவனித்துப் பார்த்தால்
தோழர் மணியரசன் அவர்களின் "தமிழத்தேசிய அரசியலை" நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

அதாவது, திருமாவளவனைப் பாராட்டி எழுதுவதா? என்பதைத்தான் சுற்றி வளைத்து. சமஸ் மீது பாய்ந்து எதிர்வினை ஆற்றி உள்ளார்.

இந்து- இந்தி - இந்திய தேசியத்தை எதிர்க்கும் வலிமை கொண்டதே உண்மையான தமிழ்த்தேசியம் என்னும் அடிப்படையில் தான் விடுதலைச்சிறுத்தைகள் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் சமரசமில்லாமல் களமாடி வருகிறோம்.

தமிழ்த்தேசியத்தின் வலிமையே தலித்துகளின் விடுதலையில் தான் இருக்கிறது என்பதை நுட்பமாக புரிந்து கொண்டு உறுதியாகப் போராடி வருகிறோம். அந்த வகையிலான ஒரு பாய்ச்சல் தான் 'மாநில சுயாட்சி மாநாடு' !
முழுக்க முழுக்க இந்திய தேசியத்துக்கு சவால் விடக்கூடிய மாநாடு.
இந்த மாநாட்டை தோழர் மணியரசன் வரவேற்க மனமில்லாமல் எம்மைப் பாராட்டும் எழுத்தாளர் சமஸை விமர்சிப்பது ஏன்?

"தமிழ்நாட்டு முதலமைச்சராக
தலித், கிறித்தவர், முசுலிம் வருவதற்கான சனநாயக வாயப்பு உருவாக வேண்டும் என்பது சனநாயக அறங்களில்  ஒன்று"
என்று தோழர் மணியரசன் கூறியிருக்கும் "சனநாயக அறம் "
" சனநாயக வாய்ப்பு " எங்கிருந்து உருவாகும் ? யார் உருவாக்குவார்?

சாதிய ஆதிக்கத்தின் சனநாயக அறத்தைக்  கடந்த
காலங்களில் புரிந்து கொண்டுதானே
களமாடிவருகிறோம்.

2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்"மாநுடத்தின் தமிழ்க்கூடல்" என்ற மாநாட்டுக்காக விடுதலைப்புலிகளால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு அம்மாநாட்டில் பங்கேற்ற எமது தலைவர் எழுச்சித்தமிழர் பங்கேற்றபோது," சாதயற்ற தமிழீழம் அமைய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதற்கு விடுதலைப்புலிகளின் கலை இலக்கிய பண்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் கவிஞர் புதுவை ரத்தினதுரை பதிலளித்து பேசும்போது," சாதிஒழிந்த தமிழீழம் தான் புலிகளின் லட்சியம். சாதிகளடங்கிய தமிழீழம் என்றால், அப்படிப்பட்ட தமிழீழமே தேவையில்லை" என்று பிரகடனம் செய்தார். அதாவது சாதியம் தமிழீழத்தில் இருக்கிறது என்பதை விட, சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பேசினார்.

ஆனால், தமிழகத்தில் தமிழ்த்தேசியத்தை கட்டமைக்க விரும்பும் தோழர் மணியரசன் அவர்கள் வெறுமனே 'தமிழ் மொழி' 'தமிழர்' 'தமிழரல்லாதார்'
என்கிற உணர்ச்சி அரசியல்  மற்றும் வெறுப்பு அரசியலைத் தான் செய்து வருகிறாரே ஒழிய,
சாதி ஒழிப்புக்கான- தலித்திய விடுதலைக்கான அரசியல் கொஞ்சமும் இல்லை என்பதை அவரது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்தே
புரிய முடிகிறது.

"தலித் தலைமை" என்றால்
அது பறையர் தலைமையா?
அருந்ததியர் தலைமையா?
பள்ளர் தலைமையா?
என்று நுட்பமான அரசியல் செய்துவரும் தோழர் மணியரசன் அவர்களின் தமிழ்ததேசிய அரசியல் சாதி ஆதிக்க அரசியலாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறதே ஒழிய,
தமிழ்ததேசிய வேர்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்ளவில்லை.

தமிழ்த் தேசிய வேர்களைப் புறக்கணித்து விட்டு, தமிழ்த் தேசியத்தை இங்கே படைக்க முடியாது என்பதை தோழர் மணியரசன் அவர்கள்
புரிந்து கொள்வது நல்லது!
               - வன்னி அரசு

MATHI NEWS செவ்வாய்- செப்டம்பர் 26


 MATHI NEWS   செவ்வாய்- செப்டம்பர் 26

• ஜெ., மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பு

• ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது சசிகலாதான்.. இன்டர்போல் விசாரணைக்கே தயார்.. அதிரடி காட்டும் டிடிவி!

• ஜெயலலிதா நைட்டி அணிந்து, டிவி பார்த்தபோது சசிகலா எடுத்துள்ள வீடியோ ஆதாரம் உள்ளது: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

• கமல் ஹாஸன் அரசியலை மீடியாதான் பெரிதுபடுத்தி வருகிறது!- டிடிவி தினகரன்

• சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவனை அறிக்கை

• அரசியலுக்கு வந்ததும் சினிமாவுக்கு முழுக்கு - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

• ஜெனிவாவில் 'அண்ணன்' வைகோவை தாக்க முயன்ற சிங்களர்கள் - ஸ்டாலின் கடும் கண்டனம்

• கமிஷனர் ஜார்ஜ், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தியா? என கண்டனம் தெரிவித்த ஆறுமுகசாமி!

• எஸ்.பி.ஐ வங்கி குறைந்தபட்ச இருப்பு தொகை இனி ரூ.3000 போதும் - பென்சனர்களுக்கு கிடையாது

• ஐசியுவில் இதே நாளில் அன்று ஜெயலலிதா... இன்று நடராஜன் - ஆனா கவனிக்க சசி இல்லை

• ஜெ. இட்லி சாப்பிடலையா.. உண்மையை சொல்லுங்க அந்த இட்லியை சாப்பிட்டது யாரு? நெட்டிசன்கள் சீண்டல்

• தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% அதிகம் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

• ஆளுநர் வந்தபோது ஜெ சுயநினைவோடு இல்லை... கட்டை விரலை காட்டவில்லை- தீபக்

• நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் பயன் இல்லை... சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்

• சிவாஜியின் 90வது பிறந்தநாளான அக்டோபர் 1ல் மணிமண்டபம் திறப்பு...முதல்வர் திறந்துவைக்கிறார்!

• சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எனக்கு பிடிக்காது.. …ஆனால் ஜெயலலிதாவுக்கு பிடிக்கும் – தீபக்

• கட்சி தொடங்குவது உறுதி-நான்தான் முதல்வர் என்பது இல்லை... யாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்: கமல்ஹாசன்

• பாஜக கூட்டணிக்கு ரஜினி பொருத்தமானவர்... கமல் பரபரப்பு பேட்டி

• கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை!

• ஜெயலலிதா மரணத்தில் துளி கூட சந்தேகம் இல்லை…அனைத்துக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது- தீபக்

• பாலியல் சாமியார் ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!

• குர்திஸ்தான் தனிநாடாவதற்கான வாக்கெடுப்பு- ஈராக் கடும் எதிர்ப்பால் போர் பதற்றம்!

• தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல்: ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

• முதலில் நாடு... பின்னர்தான் கட்சி...: பாஜக செயற்குழு கூட்டத்தில் மோடி பரபரப்பு பேச்சு.

• ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக அமைச்சர்கள் பேசி வருவதாக தினகரன் ஆதரவாளர்கள் கண்டனம்.

• டிடிவி தினகரனை அசிங்கமாக திட்டிய தீபக் – பல இடங்களில் பீப் சவுண்டு போட்டு கட் செய்த தனியார் தொலைக்காட்சி

• ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ஆளுநரை குறை கூறமுடியாது என தமிழிசை பேட்டி: வீடியோ ஆதாரம் குறித்து இவ்வளவு நாள் பேசாதது ஏன் என டிடிவி தினகரனுக்கு கேள்வி.

• வி.கே.சசிகலாவிற்கு பயந்தே  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக பொய் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணியும் ஒப்புதல்.

• சசிகலா இல்லை என்றால் ஜெயலலிதா இல்லை…ஜெயலலிதா இல்லை என்றால் சசிகலா இல்லை – மனம் திறந்த தீபக்

• தொலைந்த கல்வி சான்றிதழ்களை எளிதாக பெறலாம்: தமிழக அரசின் புதிய திட்டம் இன்று முதல் அமல்!

• மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

• நாடு முழுவதும் கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு: ரூ.16,320 கோடியில் திட்டம்

• மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த ரோஹிங்கியர்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள நிலம் வழங்கிய வங்கதேசம்

• பஸ் ஊழியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு மாதம் ரூ.1200 இடைக்கால நிவாரணம் அறிவிப்பு: ஸ்டிரைக் ஒத்திவைப்பு

• பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்

• ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் 3 நாட்களே சுயநினைவோடு இருந்தார் தீபக் பேட்டி

• செங்கோட்டையனுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவியை…எடப்பாடி சட்டையை பிடித்து இழுத்து வந்து பதவி கொடுக்க சொன்னது தினகரன்தான்…- நேரில் பார்த்ததாக தீபக் விளக்கம்

• ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது ஏன்: மத்திய அரசு மீது தீபக் குற்றச்சாட்டு

• அமைச்சர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து ஆலோசனை நடத்தலாம்: கிரண்பேடி

• காவ்யா மாதவனைக் கைது செய்யும் திட்டம் இல்லை: காவல்துறை தகவல்

• செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம்

• சிங்கப்பூர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற தலையில் பல குத்துகளை வாங்கிய பிரதீப் தமிழர் உயிரிழப்பு

• தமிழகத்தில் வங்கிப் பணியில் சேர தமிழ் புலமையை கட்டாயமாக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்

• என்.எல்.சி. நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

• எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக வழக்கு

• பி.வி. சிந்துவுக்கு பத்ம பூஷண்: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை

• பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வன்முறை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு

• ராஜஸ்தானில் சூனியக்காரி என சந்தேகித்து 70 வயது மூதாட்டி அடித்து கொலை

• சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

• கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

• பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

கட்சியிலிருந்து சசிகலாவையும் தினகரனையும் ஓரங்கட்டவேண்டும் – தீபக்

• 200 குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகள் கணக்கெடுப்பு...

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. இன்று காலை பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெனிபாவை ஜோதி முருகன் என்பவர் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த ஜெனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கொலைசெய்ய முயன்றது ஏன் என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை குளமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர் எம்.எஸ்ஸி., எம்ஃபில் இதழியல்துறை படித்துள்ளார். கடந்தாண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் ஜோதிமுருகன். தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் சில்மிஷம் செய்துவந்துள்ளார். மாணவிகளிடம் தவறாகப் பேசுவது; போனில் தொல்லை செய்வது உள்ளிட்ட தவறுகள் செய்துள்ளார். இந்தத் தகவல் இதழியல்துறைத் தலைவர் பேராசிரியை ஜெனிபாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கினார் ஜெனிபா. இவருக்குப் பதிலாக இரண்டு விரிவுரையாளரைக் கடந்த வியாழன் அன்று நியமித்துள்ளார் ஜெனிபா.


இதனால் கோபத்திலிருந்த ஜோதிமுருகன் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளார். பேராசிரியை ஜெனிபா அறைக்குச் சென்ற ஜோதிமுருகன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அறையிலேயே இருந்துகொண்டு ஜெனிபா கத்துவதை ரசித்துள்ளார். தகவல் அறிந்து மாணவர்கள் ஜோதிமுருகனைத் தாக்கியதோடு, நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலை கிடைக்காத கோபத்தில் பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. வேலை பறிபோனதால் மனைவியும் அவரை மதிக்காமல் இருந்துள்ளார். இந்த விரக்தியால் ஜோதிமுருகன் இவ்வாறு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜோதிமுருகன் மனநோயால் சற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஜோதிமுருகன் நண்பர்களிடம் பேசினோம். "ஜோதிமுருகன் தற்போது பி.ஹெச்டி படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார். பேராசிரியர் ஜெனிபா இவரை அவரது அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தினார். இதனிடையே, தன்னை கெளரவ விரிவுரையாளராக நியமிக்கும்படி பலமுறை ஜோதிமுருகன் கேட்டுள்ளார். ஆனால், ஜெனிபா மறுத்துவிட்டார். ஜோதிமுருகனின் மனைவி அரசு ஆசிரியராக இருப்பதால் இவர் வேலைக்குச் செல்லவில்லை என்று அடிக்கடி சண்டைபோட்டுள்ளார். ஜோதிமுருகன் தன் நிலைமையை எடுத்துக்கூறியும் ஜெனிபா அவரைத் தொடர்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஜோதி முருகன் விரக்தியில் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டார்" என்கின்றனர்.

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 26/09/17 !


MATHI NEWS இன்றைய பரபரப்பு  செய்திகள் 26/09/17 !

ஜெயலலிதா நலம் பெற வேண்டி 20 சிறுவர்களுக்கு அலகு குத்தியது ஏன் என்று கேள்வி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் : 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

ஜெயலலிதாவின் மரணத்தில் மிகப்பெரிய மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை : முக.ஸ்டாலின்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரிக்கும் : அமைச்சர் சிவி. சண்முகம்.

மருத்துவமனையில் நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம்.
சிறந்த நடிகரான கமல் தேவையற்ற கருத்துகளை பகிர்வதை நிறுத்திகொள்ள வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜூ.

சசிகலாவுக்கு பயந்து தான் ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் கூறினோம். உண்மையில் ஜெயலலிதாவை பார்த்தது இல்லை - அமைச்சர் கேசி வீரமணி.

சர்க்கஸ் கோமாளிகளை போல் அமைச்சர்கள் பேசுகின்றனர் - புகழேந்தி டிடிவி தினகரன் ஆதரவாளர்.

பொதுமக்களுக்கு காய்ச்சல் வரும் பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டுகோள்.டெங்கு கொசுக்களை தடுக்க வீட்டின் அருகே தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

தனியார் பள்ளியின் பவள விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார்.

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தினால் அப்போது பதிலளிப்பேன் - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: அரசின் தொடர் நடவடிக்கையால் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : அமைச்சர் நிலோபர் கபில்.

விசாரணை தொடங்கும்போது ஜெயலலிதாவை யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதுதெரியவரும் : அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் நீதிபதி பணியை டிடிவிதினகரன் பார்க்க வேண்டாம்யார் யாரை விசாரிக்க வேண்டும் என்பது நீதிபதிக்கு தெரியும் : அமைச்சர் ஜெயக்குமார்.

பொய்யை எத்தனை முறை மறைத்தாலும் உண்மை என்பது வெளிவந்தே தீரும். ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதே உண்மை - திமுக முதன்மை செயலர் துரை முருகன்.

2011இல் தேர்தல் விதிமுறை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் உள்ளிட்டோர் விடுவிப்பு.

திண்டுக்கல் சீனிவாசன் கருத்துக்கு முதல்வர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை; அமைதியாக இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அடையாளமா? : திமுக முதன்மை செயலர் துரைமுருகன்.

நாகை மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் வடகரை தம்பி சம்சுதீன் திமுகவில் இணைந்தார்.

திருச்சி : குடிநீர் விநியோக பணிகளில் போலி பிவிசி குழாய் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் விநியோகஸ்தர்கள் 2 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி.

நாமக்கல் சிபிஐசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் பழனியப்பன் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலைவழக்கில் முன்ஜாமீன் நிபந்தனைப்படி ஆஜர்.

பண்ணை பசுமைக் கடைகள் மூலம் ரூ.81கோடிக்கு காய்கறிகள் விற்பனை விவசாயிகளுக்கு உரம்,இடுபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் செல்லூர் ராஜூ.

தீபாவளிக்கு நாள் ஒன்றுக்கு சென்னையில் இருந்து 4,820 சிறப்புப் பேருந்துகள் வெளியூருக்கு இயக்கம் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு.

ஐசிசியின் புதிய விதிப்படி வீரர் ஒழுங்கீனமாக செயல்பட்டால் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவர்.

ஐசிசியின் புதிய விதிப்படி டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 80 ஓவருக்கு மேல் டிஆர்ஸ் கேட்க முடியாது.

சென்னை அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் துறைத் தலைவராக உள்ள பேராசிரியை ஜெனிபா என்பவருக்கு கத்திக்குத்து.

திங்கள், 25 செப்டம்பர், 2017

பழம்பெரும் நடிகர் பீலி சிவம் மதுரையில் காலமானார்.

Veteran Tamil actor Peeli Sivam dies at 80
பழம்பெரும் நடிகர் பீலி சிவம் மதுரையில் காலமானார்.

பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது. நாதஸ்வரம் அவமதிப்பு: பிக்பாஸ் தயாரிப்பளர் ஆஜராக கோர்ட் உத்தரவு! குர்திஸ்தான் தனிநாடாவதற்கான வாக்கெடுப்பு- ஈராக் கடும் எதிர்ப்பால் போர் பதற்றம்! வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Featured Posts தூரத்து இடி முழக்கம்' படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு நடிகர் விஜயகாந்துடன் விருத்தகிரி வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் சின்னத்திரையிலும் வலம் வந்தார். உறவுகள் போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்

புதிய FM அலைவரிசையை அறிமுகப்படுத்தி அசத்திய அரசுப் பள்ளி மாணவர்!..



புதிய FM அலைவரிசையை அறிமுகப்படுத்தி அசத்திய அரசுப் பள்ளி மாணவர்!..

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர், புதிய FM ரேடியோ அலைவரிசையை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார்.

கல்லல் அருகே செம்பனூரில் செயல்படும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் சந்தோஷ்குமார், 99.2 MEGA HERTZ அலைவரிசையில் புதிய FM ரேடியோ சேவையை தொடக்கியுள்ளார்.

6 மாத ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மாணவர் சந்தோஷ்குமார் உருவாக்கிய இந்த கண்டுபிடிப்பு, மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வழங்கப்படும் இந்த FM ரேடியோ சேவையில், செல்போன் மூலம் விரும்பும் பாடலை கேட்டால், அதனை சந்தோஷ்குமார் ஒலிபரப்புகிறார்.

மாணவரின் இந்த சாதனையை பள்ளி ஆசிரியர்களும் ஊர் பெரியவர்களும் பாராட்டிவருகின்றனர்.

பொய் எத்தனை வகைப்படும்





பொய் எத்தனை வகைப்படும்
1.பொய் சொன்னோம்
அப்போலோவில் அம்மா நல்லா இருக்காகனு
பொய் சொன்னோம்
2.தேர்தல் ஆணையத்தில் சின்னம்மா தான் அடுத்த பொதுசெயலாளர்னு
பொய் சொன்னோம்
3.ஆர்கே நகரில் தினகரனுக்கு வாக்கு அளிக்க
பொய் சொன்னோம்
4.தமிழகத்தில் நீட் தேர்வு இல்லைனு
பொய் சொன்னோம்
5.அம்மா ஆட்சி தமிழகத்தில் நடக்குதுனு
பொய் சொன்னோம்
6.அம்மா மரணத்தில் சந்தேகம்னு
பொய் சொன்னோம்
7.சின்னம்மா காலில் விலவில்லை
என்று பொய் சொன்னோம்
8.பாஜகவுக்கு நாங்க அடிமை இல்லைனு
பொய் சொன்னோம்
9.தினகரன் எங்களை மிரட்டினாரனு
பொய் சொன்னோம்
10.தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்குதுனு
பொய் சொல்வோம் இன்னும் சொல்வோம்
எங்கள் பதவியே காப்பாற்றி கொள்ள
நாங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க
#இப்படிக்கு
தமிழக அமைச்சர்கள்

டிரைவிங் தெரிஞ்ச உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?



டிரைவிங் தெரிஞ்ச உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

*பற்றி எரியும் பெட்ரோல்!*

⛽ சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து வையுங்கள். இதனால் பெட்ரோல் வீணாவதை தவிர்க்கலாம்.

⛽ கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக்கொண்டிருந்தால் வெகு வேகமாக எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும்.

⛽ நிழலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் வீணாவதை பெருமளவு தவிர்க்கலாம்.

⛽ வாகனங்களை நிறுத்தியவுடன் இன்ஜினையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

⛽ எக்ஸாஸ்ட் பாதையில் எந்தவித ஓட்டையோ, அடைப்போ இருக்கக்கூடாது.

⛽ வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.

⛽ பெட்ரோல் - டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகமாகும்.

⛽ இந்தியச் சாலைகளில் 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினால் 40 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும்.

⛽ வாகத்தில் போதுமானளவு ஆட்களை மட்டுமே ஏற்ற வேண்டும். அதிக எடையை வாகனம் சுமந்து செல்லும் போது எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

⛽ ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே மிக சிறந்தது. அதிக வேகத்தில் செல்வதால் எரிபொருள் செலவு அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும்.

⛽ பழக்கமில்லாத, புதிய பாதைகளில் செல்லும்போது, சரியாக விசாரித்துவிட்டுச் செல்ல வேண்டும். இதனால் இடத்தைத் தேடுவதற்கான நேரம், எரிபொருள் செலவைக் குறைக்கலாம்.

⛽ பெட்ரோல் - டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பக்கூடாது. பெட்ரோல் - டீசல் நிரப்பிய பிறகு, அதனை சரியாக மூடுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்க முடியும்.

⛽ கார்களில் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். ஆனால் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்க முடியும்.

MATHI NEWS 25/09/17 திங்கட்கிழமை இன்றைய 1 வரிச்செய்திகள்..!

MATHI NEWS 25/09/17 திங்கட்கிழமை இன்றைய 1 வரிச்செய்திகள்..!

வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றார். விரைவில் அவர் மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களிடமிருந்து தனி நபர்கள் நேரடியாக பட்டாசு வாங்க வேண்டும் என்றால் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் அவசியம் என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள் அனைத்திலும், நம் நாட்டின் கலாசாரம் தொடர்பான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும் என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் 28ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

வரும், டிச., 31க்குள், பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில், பேராபத்தை விளைவிக்கும் சுனாமி ஏற்படப் போவதாக, கேரளாவை சேர்ந்த, பி.கே.ஆய்வு மைய இயக்குனர், பி.கே.கலயில் எச்சரித்துள்ளார்.

2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது.

சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரிய குழுவைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர். ரயில் பயணிகள் தங்களது குறைகளை இந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

பத்திரிக்கையாளராகவும், பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருன் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் ஜூனியர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியு சிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

*இன்றைய 1 வரிச்செய்திகள்!*



வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றார். விரைவில் அவர் மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களிடமிருந்து தனி நபர்கள் நேரடியாக பட்டாசு வாங்க வேண்டும் என்றால் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் அவசியம் என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள் அனைத்திலும், நம் நாட்டின் கலாசாரம் தொடர்பான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும் என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் 28ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

வரும், டிச., 31க்குள், பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில், பேராபத்தை விளைவிக்கும் சுனாமி ஏற்படப் போவதாக, கேரளாவை சேர்ந்த, பி.கே.ஆய்வு மைய இயக்குனர், பி.கே.கலயில் எச்சரித்துள்ளார்.

2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது.

சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரிய குழுவைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர். ரயில் பயணிகள் தங்களது குறைகளை இந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

பத்திரிக்கையாளராகவும், பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருன் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் ஜூனியர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியு சிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


அம்பேத்கர் சாதிய தலைவரா?


அம்பேத்கர் சாதிய தலைவரா?

* பாடசாலையில் கோணிப்பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா?

* ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்துக்காகத் தண்ணீர் குடித்தபோது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா?

* சாலையோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காக உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா?

* என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா?

* அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஆபீஸர் ஆன பிறகும் #உங்களுடைய வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா?

* பெற்ற பிள்ளைகளையும், உற்ற மனைவியையும் அடுத்தடுத்து வறுமைக்குப் பலி கொடுத்திருக்கிறீர்களா? ‘இல்லை’ என்றால் நிச்சயமாக, உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!

இந்திய அரசியலில் இன்றுவரையில் அதிகம் படித்த,
நவீன ஆய்வு முறையில் ஆழ்ந்த புலமை வாய்ந்த,
கடல் போல எழுதிய தலைவர் அம்பேத்கர் ஒருவரே.

*வெளிநாட்டு பல்கலைக்கழங்கங்களில் பொருளியல், அரசியல், சமூகவியல், மானுடவியல், வரலாறு, தத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற பேரறிஞர். மாபெரும் அரசியல் தலைவராகவும், சட்டமேதையாகவும், சாதி கொடுமைக்கு எதிரான போராளியாகவும், பொருளாதார அறிஞராகவும், கல்வியாளராகவும், இதழாளராகவும் சிறந்து விளங்கிய அம்பேத்கரை மேற்கத்திய ஊடகங்கள் ‘நவீன இந்தியாவின் தந்தை’ என கொண்டாடுகின்றன.*

*தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர்தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தீட்டு தீட்டுவென தீட்டியவர்.*

அம்பேத்கரின் வியர்வை சிந்திய அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்திய தேசமே இயங்க முடியாது.
*சட்டத்தின் மூலம் இந்தியாவின் தலைவிதியை தீர்மானித்த அம்பேத்கர், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவை உருவாக்கி நாட்டு பொருளாதாரத்தின் தலைவிதியை திருத்தி எழுதினார்.*
கல்வி கடன் திட்டம்,
விவசாய கடன் திட்டம்,
விடுமுறையுடன் மகப்பேறு ஊதிய திட்டம்
போன்றவற்றுக்கு எல்லாம் முதல் புள்ளியை வைத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

இமயமலைக்கு கீழே மூன்று பக்கம் கடலால் பரந்திருந்த நிலப்பரப்புக்கு பாரதம் என பெயர்ச்சூட்ட நேரு துடித்தார். இந்துஸ்தானி என பெயர் சூட்ட இந்துத்துவா வாதிகள் திட்டம் போட்டனர். *சாதி, பேதமற்ற மதசார்பற்ற நாடு என்பதை குறிக்க வேண்டுமானால் ‘இந்தியா’ என்றுதான் பெயர் சூட்ட வேண்டும் என்றவர். ஒருவகையில் இந்த நாட்டுக்கே பெயர் வைத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர்தான்.*
இதுமட்டுமல்ல, தேசிய கொடி உருவாக்கத்தின்போது மூவண்ண கொடிக்கு மத்தியில் காங்கிரஸின் சின்னமான ‘ராட்டை’யை போட காந்தியும், இந்துக்களின் அடையாளமான ‘ஓம்’ முத்திரையும் போட சவார்க்கரும் துடித்தனர்.
ஆனால், அம்பேத்கர் ‘அனைவரும் சமம்’ என பறைச்சாற்றும்
‘அசோக சக்கரத்தை’ப் பதித்தார். இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திகொண்டு திரியும் ‘ஜெய்ஹிந்த்’களுக்கு இது தெரியுமா?

தீண்டாமையின் மூலம் சாதிமுறை,
சாதிமுறையின் மூலம் வருணாசிரமம்,
வருணாசிரமத்தின் மூலம் பார்ப்பனியம்,
பார்ப்பனியத்தின் மூலம் அரசியலதிகாரம்
எனக்கூறி இந்து மதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

*“நாய்களை விடவும், பன்றிகளை விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும், இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?” என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை.*

*ஏறத்தாழ 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. ஆதலால் இந்தியை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் தகுதியிருக்கிறது.*
*இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் தமிழுக்கே இருக்கிறது” என எந்த பச்சை தமிழனும் பேசாததை, உரத்தகுரலில் அன்றே நாடாளுமன்றத்தில் வெடித்த அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.*

‘அம்பேத்கரை சாதிய தலைவர்’ என இரும்பு கூண்டுக்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள்.
*அவர் தான் பிறந்த ‘மகர்’ சாதிக்காகவோ, மராட்டியருக்காவோ போராடவில்லை.*

இந்திய சாதிய சமூகத்தில் சிக்குண்ட ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காகப் போராடினார், இந்து சனாதனம் பரவியுள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சாதிய இழிவை சுமந்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக அறிவாயுதம் ஏந்தினார். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் சாதி ஒழிப்பே ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலை என உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் ஒளி ஏற்றினார்.

*ஐரோப்பாவில் அடிமைப்படுத்தப்படும் ‘ரோமா’ எனும் கறுத்த நிறமுள்ள ஐரோப்பிய நாடோடிக்குழுவினர் இன்று அம்பேத்கரை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.*
‘ஜெய்பீம்’ என்ற குழுவை உருவாக்கி கல்வியின் மூலம் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
ஹங்கேரிய வீதிகளில் அம்பேத்கரின் படத்தை ஏந்தி சம உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரோமாக்களின் அம்பேத்கரிய போராட்ட வடிவம் இன்று ஐரோப்பா முழுவதும் பரவிவருகிறது.

இதேபோல ஜப்பானில் வாழும் தொல்குடிகளான ‘பாரக்குமி’ என்ற மக்களிடம் பெரும்பான்மை ஜப்பானியர்கள் பாகுபாடு காட்டுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் பாரபட்சமும், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளும் பாய்ச்சப்படுகிறது.
இப்போது பாரக்குமியர்கள் அம்பேத்கரியத்தை உள்வாங்கி, தங்க‌ளின் உரிமைக்காகப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு உலகம் முழுக்க பல்வேறு குழுக்கள், அம்பேத்கரிய போராட்ட வடிவத்தை உள்வாங்கி, சமூக விடுதலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன.

*பார்ப்பனியமும், முதலாளியமும் ஏழை மக்களின் இரு எதிரிகள் என்றார் அம்பேத்கர்.*

*பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலவாரியம் அமைக்காததை கண்டித்து தனது #அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். எனவேதான் யாரையும் தலைவராக ஏற்காத பெரியார் அம்பேத்கரைத் தலைவராக ஏற்றார்.*
 புத்தர், இயேசு, மார்க்ஸ் போன்ற மாபெரும் புரட்சியாளரான அம்பேத்கரை சாதித் தலைவர் என்றும், மதத் தலைவரென்றும், மராட்டியத் தலைவரென்றும், அரைவேக்காட்டுத்தனமாக ‘சாதிய தலைவர்’ என்றும், ‘மராட்டியர்’ என்றும் சொல்பவர்களின் முகத்தில் நாளைய வரலாறு உமிழப் போகும் வார்த்தை...
*அம்பேத்க‌ர் சர்வதேசத் தலைவர். .*