வியாழன், 7 செப்டம்பர், 2017

தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் கார்கள்...



தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் கார்கள்...


நமது கார் பழுதாகி நின்றுவிட்டால் என்ன செய்வோம்? மற்றொரு வாகனத்தினை உதவிக்கு கேட்டு அதன்மூலம் அங்கிருந்து இழுத்துச் செல்ல சொல்வோம்.

ஆனால் Acura RLX sedan புதிதாக ஒரு காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இரு கார்களுக்கும் நடுவில் எந்த வித பொருள் தொடர்பும் இருக்காது.

ஆனால் முதல் காரின் அறிவுரையின்படி பின்னால் செல்லும் இரண்டாவது கார் தானாகவே ஓட்டிக்கொள்ளும்.

இதில் உள்ள ஆச்சர்யம் என்ன்வென்றால், ஓட்டுநரின் பங்கு மிகவும் குறைவு என்பது தான்!

இரு கார்களிடம் அமைக்கப்பட்டுள்ள தொடர்பு சாதனங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு சாதாரணமாக செல்வது போலவே செல்லத் தொடங்கிவிடும்.

கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த இந்த கண்டுபிடிப்புகள் விரைவாக வளர்ந்து வருகின்றன.

இதனை வெளியிட்ட நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் ஒரு வாகனத்திற்கு 2000$ என்ற மதிப்பின் அடிப்படையில் வாகனங்கள் வெளிவிடப்படும் என அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இதில் பல பிரச்சினைகளும் உள்ளன.

ஒருவேளை தானாக செல்லக்கூடிய கார் விபத்தானால் அதன் சேதம் யாருடைய பொறுப்பு? இந்த வாகனங்கள் சாலை விதிகளை மதிக்குமா? இதன் பாதுகாப்பு அளவு எந்தமாதிரி இருக்கும்? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே செல்கின்றன.

இருப்பினும் வாடிக்கையாளர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல பொறியியலாளர்களும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கார் தானாக ஓடுகிறது என ஓட்டுநர்கள் தூங்கிவிட முடியாது, அவர்களை விழிப்புடன் வைக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக