அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது.
*ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.*
சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது.
பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.
செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது.
தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது இந்தியக் கடற்படை.
அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.
*இறுதியாக ஒரு விஷயம்.*
*செண்டினல் என்கிறப் பெயருக்கு “காவலாளி” என்று பொருள்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக