மத்திய அரசு துறைகளில் 700 காலியிடங்கள்: விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாகும் குரூப் பி, சி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தற்போது மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 700 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 700
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. எஸ்எஸ்சி மேற்கு மண்டலம் - 75
2. எஸ்எஸ்சி கிழக்கு மண்டலம் - 97
3.
எஸ்எஸ்சி மத்திய மண்டலம் - 27
4. எஸ்எஸ்சி தெற்கு மண்டலம் - 61
5. எஸ்எஸ்சி வடகிழக்கு மண்டலம் - 13
6. எஸ்எஸ்சி வடமேற்கு மண்டலம் - 66
7. எஸ்எஸ்சி வடக்கு மண்டலம் - 244
8. எஸ்எஸ்சி கர்நாடகா மண்டலம் - 42
9. எஸ்எஸ்சி மத்திய பிரதேச மண்டலம் - 13
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு முதல் ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்கள் அறிய அதற்கான அறிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: பொதுவாக 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: மண்டலங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் அதற்குரிய மண்டலங்களின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 02.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscsr.gov.in அல்லது www.ssconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக