சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதனை இதே நாளில் தான் தொடங்கிவைத்தார்.
8.6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இத்திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கிவைத்தார். தான் விரும்பிஅணியும் பச்சை வண்ண புடவையை அணிந்து அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியே ஜெயலலிதா இறுதியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. அதன் பிறகு செப்டம்பர் 22ம் தேதி சுய நினைவு இழந்த நிலையில், அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக