வெள்ளி, 22 செப்டம்பர், 2017

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 22/09/17


MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 22/09/17

சமூக வலைதளங்களில் நீதித் துறையை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு.

கீழடி அகழாய்வில் தமிழக அரசும் பங்கெடுப்பதற்காக 2 வாரத்தில் உரிமம் வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை தொல்லியல் துறைக்கு உத்தரவு.

அரசியலில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என நானும் ரஜினியும் முடிவெடுத்துள்ளோம்.100 நாட்களுக்குள் தேர்தல் நடந்தால் போட்டியிடத் தயார் - நடிகர் கமல்ஹாசன்.

ஜெயலலிதா மரணம் குறித்து முதலமைச்சர் அறிவித்தபடி, விசாரணை கமிஷன் அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி : உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் ஆணை.

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்.கால தாமதம் செய்ததால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம் : நீதிபதி கிருபாகரன் கருத்து.

நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று திரும்பத் திரும்ப சொன்னதில் ஏமாற்றமே மிஞ்சியது.நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா? : நீதிபதி கிருபாகரன்.

பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன், மதுசூதனன் நேரில் ஆஜராக தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சி கட்டாய திருமணம் போல் உள்ளது; இதிலிருந்து வெளியேற தமிழக மக்கள் விரும்புகின்றனர் - நடிகர் கமல்ஹாசன்.

பொதுச்செயலாளருக்கு இணையான அதிகாரமிக்க 2 பொறுப்புகள் பற்றி தேர்தல் ஆணைய முதன்மை அதிகாரிகளை சந்தித்து விளக்கினோம் : கேபி.முனுசாமி.

அரசு ஊழியர் போராட்டம் விகாரம் : நீதிமன்ற உத்தரவுகளை சமுக வலைதளத்தில் விமர்சித்ததாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது.

தமிழகம் உட்பட 12 மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்களை நீக்கிய தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம்.

நீட் பயிற்சி மையங்கள் தொடர்பாக அக்.6ல் பதில்தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

இரட்டை இலை விவகாரம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள்,அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் இணைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்தில்விளக்கம்.

நாளை நடைபெறவிருந்த சிறப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

கர்நாடக மாநிலம் குடகு விடுதிக்கு தினகரன் வருகை - தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு சிபிஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

அணிகள் இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால் கட்சி, சின்னத்தில் எங்களுக்கே உரிமை : ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணி.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் : ஜிகே.வாசன்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.

நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது.படத்தில் வேண்டுமானால் முதல்வராகலாம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

முதல் விமானம் சேலம்-புதுச்சேரி-சென்னை-பெங்களூரு நகரங்கள் இடையே இயக்கப்படும் : பன்னீர்செல்வம் எம்பி.

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழக்கு தொடர்பாக 3 வார காலத்திற்குள் சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த திருமுருகன் மதுரை மாவட்ட 4ஆவது நீதிமன்றத்தில்.
 சரணடைந்தார்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீர் கலக்கவில்லை.நுரை பொங்கிய நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சாயக் கழிவுநீர் கலக்கவில்லை என தெரியவந்துள்ளது : அமைச்சர் கருப்பணன்.

சிலை கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாட்சா கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்.

மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் : கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கரூர் : செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிற்சாலை பாகிஸ்தான் : ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு.

எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது : ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 6 அக்னி தீர்த்தங்களையும் கோயிலுக்கு வெளியே அமைக்க உத்தரவு - உயர் நீதிமன்ற கிளை.

ஒகேனக்கல் ஆற்றுக்கான நீர்வரத்து 12,500 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக உயர்ந்ததால் பரிசல் இயக்க 2வது நாளாக தடை - தருமபுரி மாவட்ட நிர்வாகம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.

திருப்பூர் : அவிநாசியில் அரசுப்பேருந்து மோதி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.

திருப்பூர் : அவிநாசியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த ஓட்டுநருக்கு முறையாக சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக