திங்கள், 25 செப்டம்பர், 2017

டிரைவிங் தெரிஞ்ச உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?



டிரைவிங் தெரிஞ்ச உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

*பற்றி எரியும் பெட்ரோல்!*

⛽ சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து வையுங்கள். இதனால் பெட்ரோல் வீணாவதை தவிர்க்கலாம்.

⛽ கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக்கொண்டிருந்தால் வெகு வேகமாக எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும்.

⛽ நிழலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் வீணாவதை பெருமளவு தவிர்க்கலாம்.

⛽ வாகனங்களை நிறுத்தியவுடன் இன்ஜினையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

⛽ எக்ஸாஸ்ட் பாதையில் எந்தவித ஓட்டையோ, அடைப்போ இருக்கக்கூடாது.

⛽ வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.

⛽ பெட்ரோல் - டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகமாகும்.

⛽ இந்தியச் சாலைகளில் 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினால் 40 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும்.

⛽ வாகத்தில் போதுமானளவு ஆட்களை மட்டுமே ஏற்ற வேண்டும். அதிக எடையை வாகனம் சுமந்து செல்லும் போது எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

⛽ ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே மிக சிறந்தது. அதிக வேகத்தில் செல்வதால் எரிபொருள் செலவு அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும்.

⛽ பழக்கமில்லாத, புதிய பாதைகளில் செல்லும்போது, சரியாக விசாரித்துவிட்டுச் செல்ல வேண்டும். இதனால் இடத்தைத் தேடுவதற்கான நேரம், எரிபொருள் செலவைக் குறைக்கலாம்.

⛽ பெட்ரோல் - டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பக்கூடாது. பெட்ரோல் - டீசல் நிரப்பிய பிறகு, அதனை சரியாக மூடுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்க முடியும்.

⛽ கார்களில் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். ஆனால் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக