அம்பேத்கர் சாதிய தலைவரா?
* பாடசாலையில் கோணிப்பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா?
* ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்துக்காகத் தண்ணீர் குடித்தபோது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா?
* சாலையோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காக உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா?
* என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா?
* அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஆபீஸர் ஆன பிறகும் #உங்களுடைய வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா?
* பெற்ற பிள்ளைகளையும், உற்ற மனைவியையும் அடுத்தடுத்து வறுமைக்குப் பலி கொடுத்திருக்கிறீர்களா? ‘இல்லை’ என்றால் நிச்சயமாக, உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!
இந்திய அரசியலில் இன்றுவரையில் அதிகம் படித்த,
நவீன ஆய்வு முறையில் ஆழ்ந்த புலமை வாய்ந்த,
கடல் போல எழுதிய தலைவர் அம்பேத்கர் ஒருவரே.
*வெளிநாட்டு பல்கலைக்கழங்கங்களில் பொருளியல், அரசியல், சமூகவியல், மானுடவியல், வரலாறு, தத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற பேரறிஞர். மாபெரும் அரசியல் தலைவராகவும், சட்டமேதையாகவும், சாதி கொடுமைக்கு எதிரான போராளியாகவும், பொருளாதார அறிஞராகவும், கல்வியாளராகவும், இதழாளராகவும் சிறந்து விளங்கிய அம்பேத்கரை மேற்கத்திய ஊடகங்கள் ‘நவீன இந்தியாவின் தந்தை’ என கொண்டாடுகின்றன.*
*தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர்தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தீட்டு தீட்டுவென தீட்டியவர்.*
அம்பேத்கரின் வியர்வை சிந்திய அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்திய தேசமே இயங்க முடியாது.
*சட்டத்தின் மூலம் இந்தியாவின் தலைவிதியை தீர்மானித்த அம்பேத்கர், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவை உருவாக்கி நாட்டு பொருளாதாரத்தின் தலைவிதியை திருத்தி எழுதினார்.*
கல்வி கடன் திட்டம்,
விவசாய கடன் திட்டம்,
விடுமுறையுடன் மகப்பேறு ஊதிய திட்டம்
போன்றவற்றுக்கு எல்லாம் முதல் புள்ளியை வைத்தவர் டாக்டர் அம்பேத்கர்.
இமயமலைக்கு கீழே மூன்று பக்கம் கடலால் பரந்திருந்த நிலப்பரப்புக்கு பாரதம் என பெயர்ச்சூட்ட நேரு துடித்தார். இந்துஸ்தானி என பெயர் சூட்ட இந்துத்துவா வாதிகள் திட்டம் போட்டனர். *சாதி, பேதமற்ற மதசார்பற்ற நாடு என்பதை குறிக்க வேண்டுமானால் ‘இந்தியா’ என்றுதான் பெயர் சூட்ட வேண்டும் என்றவர். ஒருவகையில் இந்த நாட்டுக்கே பெயர் வைத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர்தான்.*
இதுமட்டுமல்ல, தேசிய கொடி உருவாக்கத்தின்போது மூவண்ண கொடிக்கு மத்தியில் காங்கிரஸின் சின்னமான ‘ராட்டை’யை போட காந்தியும், இந்துக்களின் அடையாளமான ‘ஓம்’ முத்திரையும் போட சவார்க்கரும் துடித்தனர்.
ஆனால், அம்பேத்கர் ‘அனைவரும் சமம்’ என பறைச்சாற்றும்
‘அசோக சக்கரத்தை’ப் பதித்தார். இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திகொண்டு திரியும் ‘ஜெய்ஹிந்த்’களுக்கு இது தெரியுமா?
தீண்டாமையின் மூலம் சாதிமுறை,
சாதிமுறையின் மூலம் வருணாசிரமம்,
வருணாசிரமத்தின் மூலம் பார்ப்பனியம்,
பார்ப்பனியத்தின் மூலம் அரசியலதிகாரம்
எனக்கூறி இந்து மதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
*“நாய்களை விடவும், பன்றிகளை விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும், இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?” என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை.*
*ஏறத்தாழ 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. ஆதலால் இந்தியை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் தகுதியிருக்கிறது.*
*இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் தமிழுக்கே இருக்கிறது” என எந்த பச்சை தமிழனும் பேசாததை, உரத்தகுரலில் அன்றே நாடாளுமன்றத்தில் வெடித்த அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.*
‘அம்பேத்கரை சாதிய தலைவர்’ என இரும்பு கூண்டுக்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள்.
*அவர் தான் பிறந்த ‘மகர்’ சாதிக்காகவோ, மராட்டியருக்காவோ போராடவில்லை.*
இந்திய சாதிய சமூகத்தில் சிக்குண்ட ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காகப் போராடினார், இந்து சனாதனம் பரவியுள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சாதிய இழிவை சுமந்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக அறிவாயுதம் ஏந்தினார். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் சாதி ஒழிப்பே ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலை என உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் ஒளி ஏற்றினார்.
*ஐரோப்பாவில் அடிமைப்படுத்தப்படும் ‘ரோமா’ எனும் கறுத்த நிறமுள்ள ஐரோப்பிய நாடோடிக்குழுவினர் இன்று அம்பேத்கரை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.*
‘ஜெய்பீம்’ என்ற குழுவை உருவாக்கி கல்வியின் மூலம் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
ஹங்கேரிய வீதிகளில் அம்பேத்கரின் படத்தை ஏந்தி சம உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரோமாக்களின் அம்பேத்கரிய போராட்ட வடிவம் இன்று ஐரோப்பா முழுவதும் பரவிவருகிறது.
இதேபோல ஜப்பானில் வாழும் தொல்குடிகளான ‘பாரக்குமி’ என்ற மக்களிடம் பெரும்பான்மை ஜப்பானியர்கள் பாகுபாடு காட்டுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் பாரபட்சமும், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளும் பாய்ச்சப்படுகிறது.
இப்போது பாரக்குமியர்கள் அம்பேத்கரியத்தை உள்வாங்கி, தங்களின் உரிமைக்காகப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு உலகம் முழுக்க பல்வேறு குழுக்கள், அம்பேத்கரிய போராட்ட வடிவத்தை உள்வாங்கி, சமூக விடுதலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன.
*பார்ப்பனியமும், முதலாளியமும் ஏழை மக்களின் இரு எதிரிகள் என்றார் அம்பேத்கர்.*
*பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலவாரியம் அமைக்காததை கண்டித்து தனது #அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். எனவேதான் யாரையும் தலைவராக ஏற்காத பெரியார் அம்பேத்கரைத் தலைவராக ஏற்றார்.*
புத்தர், இயேசு, மார்க்ஸ் போன்ற மாபெரும் புரட்சியாளரான அம்பேத்கரை சாதித் தலைவர் என்றும், மதத் தலைவரென்றும், மராட்டியத் தலைவரென்றும், அரைவேக்காட்டுத்தனமாக ‘சாதிய தலைவர்’ என்றும், ‘மராட்டியர்’ என்றும் சொல்பவர்களின் முகத்தில் நாளைய வரலாறு உமிழப் போகும் வார்த்தை...
*அம்பேத்கர் சர்வதேசத் தலைவர். .*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக