திங்கள், 4 செப்டம்பர், 2017

டாக்டர் கிருஷ்ணசாமி பற்றி பாலபாரதியின் அதிர்ச்சிப் பதிவு!


டாக்டர் கிருஷ்ணசாமி பற்றி பாலபாரதியின் அதிர்ச்சிப் பதிவு!

நீட் தேர்வில் பாஸாக முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு நீட் தேர்வு காரணமில்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே சி.பி.ஐ விசாரணைத் தேவை என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி பற்றிய செய்தி ஒன்று தீயாகப் பரவி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி அந்தச் செய்தியை ட்வீட் செய்துள்ளார். அந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.
''2015-ம் ஆண்டு சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தார். அமைச்சர் ஒருவர் குறுக்கிட்டு எழுந்து, ''உங்கள் மகளுக்கு மெடிக்கல் கல்லூரியில் சேர போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும், முதலமைச்சரிடம் வந்து உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா (ஜெயலலிதா) கொடுத்தார்களே. அதை மறந்துவிட்டீர்களா...'' எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, கிருஷ்ணசாமி, 'அதை நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன்'' என முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் செய்தார்.
இந்த வணக்கத்தை வேறு எங்காவது சென்று போடவும் என்பதுபோல, முதலமைச்சர் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் சட்டமன்றத்தின் மேஜையின் மீது பொத்தென்று விழுந்தது. தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல் வழியாக உதவியைப் பெற்றவர், தன் மகளுக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதி என்று முழங்கி வருவதுதான் வேதனை'' என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக