MATHI NEWS காலை செய்திகள்@7/9/17
இந்தியாவில், கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், தினமும், 4௦௦ பேர் இறந்ததாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகத்தில் தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன.
பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நேற்று மர்ம நபர்களால் தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்கெளரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.ஜி பி.கே சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம், நிதி திரட்டி வந்த, டில்லி, ஸ்ரீநகரைச் சேர்ந்த வர்த்தகர்களின், 16 இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று, அதிரடி சோதனை மேற்கொண்டது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியது:–சீனா, பாகிஸ்தானுடன் பதற்றம் இந்தியா, போருக்கு தயாராக வேண்டும்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
மாணவி அனிதா மரணத்தில் நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
உரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: திமுக தொடுத்த வழக்கு இன்று விசாரணை
டிராக்டர் ஜப்தியால் பல்லடத்தில் விவசாயி தற்கொலை
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சேர பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தை திருப்பித் தர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமுவுக்கு பதிவு தபால் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார்
தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
நாகை அருகே சுவர் இடிந்து விழுந்து 3 பேர் மரணம் : உயிர் பிழைத்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் பரிசல்களில் செல்ல 6-வது நாளாக தடை தொடர்கிறது.
பல்லடம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி 5 லட்சம் கொள்ளை
சென்னையில் பரவலாக மழை
‛நீட்' விவகாரத்தில் தமிழக அரசு போராடும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று கவர்னரை சந்திக்கிறார் தினகரன்
பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள்: முதல்வர் திறப்பு
அதிமுக அரசு மணல் கோட்டை அல்ல; யாராலும் கலைக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் அம்மன் கே.அர்ச்சுனன் எம்எல்ஏ, (இன்று) நேற்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் சாய்பாபா காலனி பகுதி செயலாளர் என்.சின்னத்துரை இன்று (நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்-தினகரன்
திருப்பத்தூர் அருகே 10-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
நெல்லை: சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி
சென்னை பல்கலை தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
நெல்லையில் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த அதிகாரி சிறைபிடிப்பு
135 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. அரசின் சட்டவிரோத முடிவுகளுக்கு தலைமை செயலாளர் துணை போகக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் காங். துணை தலைவர் ராகுல், இடதுசாரி கட்சியின் யெச்சூரி ஆகியோர் பா.ஜ. மீது குற்றம்சாட்டினர். இதனை அரசியலாக்குவதாக கவுரி குடும்பத்தினர் புகார் கூறினர்
வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, வருமான ஏற்றத்தாழ்வு தற்போது அதிகரித்துள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2015-16 நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு வந்த மொத்த நன்கொடையில் 81 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சிக்கு வந்த மொத்த நன்கொடையில் 71 சதவிகிதமும் அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய தண்டனை சட்டத்தின், 375-வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன், தாம்பத்ய உறவு கொள்வது, பலாத்கார குற்றம் அல்ல என கூறப்பட்டுள்ளதை திருத்த வேண்டும்' என கோரி, தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.
முத்ரா திட்டத்தின் வாயிலாக 5½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மியான்மர் நாட்டின் ஒற்றுமையை அனைவரும் பாதுகாக்கவேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்
சிங்கப்பூரில் மலேசிய வாழ் இந்தியர்கள் 3 பேர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கடந்த 2014ல் கைதாகினர்அனைவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவி்ட்டுள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.இதில் 2 பேருக்கு 12 பிரம்படி தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு
சமீப காலமாக அமெரிக்கா அதிக இயற்கைச் சீற்றங்களை சந்தித்து வருவதாக ஐ.நா அறிவித்துள்ளதுசீனா மற்றும் இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் இந்த இடத்தை பிடித்துவிட்டது .நா. பொதுச் செயலாளர் ஆன்டொனியோ தெரிவித்துள்ளார்.கடந்த 1995 பிறகு இயற்கைச் சீற்றங்களால் அமெரிக்காவில், 2 கோடியே 42 லட்சம் பேர் வாழ்விடங்களை இழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்
அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாக். வெளியுறவு மந்திரி சீனா பயணம்
வடகொரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கோரிக்கை
சார்ஜாவில் வசிக்கும் 14 வயதான இந்திய சிறுவன் மன்சூர் அனீஸ் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளார்
சக்திவாய்ந்த ‘இர்மா’ புயல் தாக்கும் அபாயம் அமெரிக்க மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்
‘இர்மா’ புயலுக்கு கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலி
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு ரூ.76 லட்சம் இழப்பீடு பிரான்ஸ் பத்திரிகை வழங்க கோர்ட்டு உத்தரவு
லண்டனில் இருந்து நவாஸ் ஷெரீப், நாளை பாகிஸ்தான் திரும்புகிறார்
கவுரி லங்கேஷ் கொலையால் ஏற்பட்ட சத்தத்தை நிறுத்த முடியாது: பிரகாஷ்ராஜ்
செப்-07: பெட்ரோல் விலை ரூ. 72.34, டீசல் விலை ரூ.60.64
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி.
இன்றைய 1 வரிச்செய்திகள்! 07/09/17 வியாழக்கிழமை!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களுக்கும் இம்மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு கொடுக்கப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்கள், 3ஆம் நபருக்கு பகிரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனை புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஃபிரான்ஸ் பத்திரிக்கைக்கு 45 ஆயிரம் யு ரோ (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) அபாரதம் விதித்து பாரீஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கவுன்சிலிங் மையங்கள் தொடங்கப்படும் என்றார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,703 கனஅடியில் இருந்து 14,751 கனஅடியாக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாட்டின் 2-வது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று செப்டம்பர் 7 பதவியேற்றார்.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி 2016 ஆம் ஆண்டிற்கான விபத்து குறித்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,652 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
அதில் 1,50,785 பேர் மரணமடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நீட் தேர்வு விவகாரம் மற்றும் அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் முட்டாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி முட்டாள் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் கோவை அரசு கலைக்கல்லுரிக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கரீபியன் கடலை ஒட்டிய பகுதிகளை தாக்கிய இர்மா புயல் மற்றும் மழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப் ஆனி என்ற நிறுவனம், உலகில் அதிக அளவில் ஆன்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் 10 மிகப் பெரிய நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வு பட்டியலில் ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ. 72.34
💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ. 60.64
💎 தங்கம் 1
கிராம் - ரூ. 2,888.00
💎 வெள்ளி 1
கிராம் - ரூ. 44.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக