முக்கிய செய்திகள்@1/9/17
நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை
அரியலூர் செந்துறை ரோட்டில் அனிதா உறவினர்கள் சாலை மறியல்
மாணவி அனிதா மரணம்: அரியலூர் டி.எஸ்.பி., விசாரணை
நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை:அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மாணவி அனிதாவின் மரணத்தை பெரும் இழப்பாக கருதுகிறேன்: செங்கோட்டையன்
தற்கொலை தீர்வல்ல.யாரும் துயரமான முடிவை நாட வேண்டாம் என மாணவர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
' நல்ல மருத்துவரை இழந்து விட்டோம்': நடிகர் கமலஹாசன்
அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், 37 எம்.பிக்கள் ராஜினாமா செய்வோம் என மிரட்டியாவது நீட்டுக்கு விலக்கு பெறுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.அனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவி அனிதா உயிர் தியாகம் செய்திருக்கிறார்: பீட்டர் அல்போன்ஸ்
அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு- கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
நீட் தேர்வை எதிர்த்த மாணவி தற்கொலை: தமிழக அரசு ராஜினாமா செய்ய காங். தலைவர் வலியுறுத்தல்
அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை: அனிதாவின் மரணம் குறித்து ஜி.வி.பிரகாஷ்
அசல் ஓட்டுநர் உரிமம்: செப்.5 வரை நடவடிக்கை இல்லை- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது இல்லத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை 2-ம் நாளாக சந்தித்துள்ளார்2-வது நாளாக இன்று திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை மாவட்ட எம்.எல்.ஏக்களை முதல்வர் சந்தித்து பேசியுள்ளார்.
சபாநாயகரிடம் 5-ம் தேதி முதல் விளக்கம்: தங்க தமிழ்ச்செல்வன்
புளூவேல் விளையாட்டை தடை செய்க: ஸ்டாலின்
நெல்லை அருகே அரசு விழாவில் கருணாஸ் கார் உடைப்பு
ரூ.2 லட்சம் மோசடி வழக்கு கோவை கோர்ட்டில் இடைத்தரகர் சுகேஷ் ஆஜர்
முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் நன்றிக் கடிதம்
கேரள முதல்வர் வீட்டில் கமலுக்கு ஓணம் விருந்து
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மத்திய மந்திரி சபை மாற்றியமைப்பு
உத்தரபிரதேசத்தில் ரெயிலை தவறான பாதையில் கொடி அசைத்து அனுப்பிய ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னை ஆண்மையற்றவர் என நீதிபதியிடம் கதறிய குர்மீத்
‘என்னை தூக்கில் போடுங்கள், உயிர்வாழ விரும்பவில்லை’ சாமியார் குர்மீத் சிங் கதறல்
குடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - நாயை கற்பழித்த அந்த குடி போதை காமுகன் டெல்லியை சேர்ந்த 34 வயதுமிக்க டாக்ஸி ஓட்டுனர்.நாயை கற்பழித்து இரத்த கொட்டும் நிலையில் இருந்த அந்த பரிதாப பிராணியை வீசி சென்றுள்ளான்.
அமெரிக்காவை உலுக்கிய ஹார்வே புயல்: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு
கென்யா: அதிபர் தேர்தல் செல்லாது - 60 நாட்களில் மறுதேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்
கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் போட்ட ஜப்பானியரின் கணக்கை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 161.74 புள்ளிகள் அதிகரித்து 31,892.20. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 56.50 புள்ளிகள் உயர்ந்து 9,974.40.
தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,845
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,760
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,870
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.10
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.43,100
நடிப்புக்கும் காப்புரிமை வாங்கலாம்: நடிகர்களுக்கு கிராபிக்ஸ் வல்லுநர் யோசனை
சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கணை சாய்னா நேவால் 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேரடியாக நுழையும் வாய்ப்பை உறுதிசெய்வதில் இலங்கை தோல்வி.
*இரவு செய்திகள்@1/9/17🔵*
மாணவ, மாணவியர் தோல்வியை கண்டு துவழ வேண்டாம் என நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள முதல்வரை சந்தித்த பின்னர் சென்னை திரும்பிய நடிகர் கமலிடம் அரியலூர் மாணவி அனிதா இறப்பு குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது: மாணவியின் தற்கொலை போன்று இனியும் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அனிதாவின் மரணம் சோகமானநிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.தோல்விதான் முடிவு என மாணவர்கள் நினைத்து மனம் தளர்ந்து விட வேண்டாம்.தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். நேர்மையான முறையில் போராடுவோம் . அவரின் மரணத்தை கண்டு கண்ணீரோடு கோபமும் வரத்தான் செய்கிறது என கூறினார்.
அனிதாவின் உடலை வாங்க தந்தை மறுப்புஅவரது உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுபிரேத பரிசோதனை செய்ய தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக தந்தை சண்முகம் புகார்
மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
மாணவி அனிதா மரணம்: அரியலூரில் நாளை (செப்.,2 )கடை அடைப்பு
அனிதா தற்கொலை: அரியலூர் மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு
அனிதா மரணத்தை முன்வைத்து கொடூர அரசியல் செய்கிறார்கள்- தமிழிசை செளந்தரராஜன்
அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவிமுதல்வர் பழனிச்சாமி அறிவிப்புகுடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும்
நீதி மறுப்பிற்கு பலியானவள்தான் இந்த அப்பாவி அனிதாஅனிதா இறப்புக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு பேஸ்புக்கில் தீபா கண்டனம்
நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் போதிய முயற்சி எடுக்கவில்லை-ஜெயானந்த் குற்றச்சாட்டுதமிழக அரசின் திறனற்ற தன்மையால்தான் அனிதா உயிர் பறிபோனது-ஜெயானந்த்
அனிதாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் அஞ்சலிஅரியலூர் மருத்துவமனை சென்ற ஜி.வி.பிரகாஷ்
இந்த தேசம் 'தகுதி'யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது- சிவகார்த்திகேயன்
அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்-மக்கள் எல்லாவற்றையும் சகித்துகொள்வார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் இனியாவது திருந்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்-மேலும் சகோதரர்களாக நினைத்து படிப்பிற்காக எங்களை அணுகினால் நாங்கள் உதவ தயார் என அவர் அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ பலி
ஒற்றுமை உணர்வு தழைக்க தியாக திருநாளில் உறுதி ஏற்போம்இந்திய தவ்ஹீத் ஜமா அத் பக்ரீத் வாழ்த்துச் செய்திநாளை இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார்கள்
மும்பை கல்யான் ஜெயில் இருந்து தப்பிய 2 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 2 பேர் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த டேவிட் என்று தெரியவந்துள்ளது.மான்படா, மும்ரா ஆகிய காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
திருச்சி: ரியல் எஸ்டேட் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
திருச்சி: சிறை கைதி தப்பி ஓட்டம்
தலைமறைவான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
ஹெலிகாப்டர் பேர ஊழல் : மாஜி விமானப்படை தளபதி உள்ளிட்ட 8 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை
ஆந்திரா: விஜயவாடா ரயில்வே நிலையத்தில் 13 கிலோ தங்கம் பறிமுதல்
புதுடில்லி : ராஜ்நாத் வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை: ஐ. நா. விசாரணை குழுவுக்கு மியான்மர் அரசு அனுமதி மறுப்பு
புரோ கபடி 2017: சொந்த மைதானத்தில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக