தோழர் மணியரசன் பேசும் தமிழ்த்தேசியம் உண்மையானதா? போலியானதா?
.....................................................
'தமிழ் இந்து' இதழில் தோழர் சமஸ் எழுதிய கட்டுரைக்கு தோழர் மணியரசன் பதில் எழுதியுள்ளார். தோழர் சமஸ் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விடை சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
தோழர் மணியரசனுக்கும் உண்டு. ஆனால், அவரது உடனடி பதில் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் சமஸ் மீது சந்தேகத்தை எழுப்புகிறார். அவரைத் தமிழத்தேசியத்தின் எதிரியாக முத்திரை குத்துகிறார். இதனால், தோழர் மணியரசன் பேசும் தமிழ்த்தேசியம் உண்மையா? போலியா? என்னும் வினாவை எழுப்புகிறது.
இதற்கு விடைதேடுவதற்கு முன் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த பத்தாண்டுகளாக சான்றோருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் விருதுகள் வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டுக்கான (2017) 'செம்மொழி ஞாயிறு'விருதை
தமிழறிஞர் அய்யா இளங்குமரனார் அவர்களுக்கு எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
வழங்க முடிவு செய்து அவரின் ஒப்புதல் கேட்க சொன்னார். நானும்
தமிழறிஞர் இளங்குமரனாருடன்
பேசினேன். முதலில் தயங்கியவர் பின்னர் ஒப்புக்கொண்டார். எமது
தலைவரிடமும் இந்த மகிழ்ச்சியான
தகவலைச் சொன்னேன். ஆனால், விருது வாங்கும் நாளில் அய்யா இளங்குமரனார் வரவில்லை. இரு நாட்களுக்கு முன்பே வரவியலாது என்கிற தகவலை எமது தலைவரிடம்
சொல்லி உள்ளார்.
என்னிடம் ஒப்புக்கொண்ட அந்த தமிழறிஞர் ஏனோ ஏதோ ஒரு சூழலில் வர முடியாமல் போய்விட்டது.
ஆனால், இந்த செய்தியை ஒரு முக்கியமான செய்தியாக தோழர் மணியரசன் அவர்கள் தனது 'தமிழர் கண்ணோட்டம' மாத இதழில் "விடுதலைச்சிறுத்தைகள் விருதை தமிழறிஞர் இளங்குமரனார் வாங்க மறுப்பு" என்று பதிவிட்டார்.
அதாவது, விடுதலைச்சிறுத்தைகள் வழங்கிய விருதை தமிழறிஞர் இளங்குமரனார் வாங்க மறுத்தது தோழர் மணியரசனுக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையிலிருந்து
எழுத்தாளர் தோழர் சமஸ் அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிற
தோழர் மணியரசன் அவர்களின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது, தோழர் சமஸ் அவர்கள் எமது தலைவர் எழுச்சிதமிழர் அவர்களை பாராட்டியும் அவரது தலைமையில் நடைப்பெற்ற வரலாற்றுச்சிறப்புமிக்க மாநில சுயாட்சி மாநாட்டின் தேவை குறித்து எழுதியதைப்பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே கடந்து போவதை கூர்ந்து
கவனித்துப் பார்த்தால்
தோழர் மணியரசன் அவர்களின் "தமிழத்தேசிய அரசியலை" நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது, திருமாவளவனைப் பாராட்டி எழுதுவதா? என்பதைத்தான் சுற்றி வளைத்து. சமஸ் மீது பாய்ந்து எதிர்வினை ஆற்றி உள்ளார்.
இந்து- இந்தி - இந்திய தேசியத்தை எதிர்க்கும் வலிமை கொண்டதே உண்மையான தமிழ்த்தேசியம் என்னும் அடிப்படையில் தான் விடுதலைச்சிறுத்தைகள் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் சமரசமில்லாமல் களமாடி வருகிறோம்.
தமிழ்த்தேசியத்தின் வலிமையே தலித்துகளின் விடுதலையில் தான் இருக்கிறது என்பதை நுட்பமாக புரிந்து கொண்டு உறுதியாகப் போராடி வருகிறோம். அந்த வகையிலான ஒரு பாய்ச்சல் தான் 'மாநில சுயாட்சி மாநாடு' !
முழுக்க முழுக்க இந்திய தேசியத்துக்கு சவால் விடக்கூடிய மாநாடு.
இந்த மாநாட்டை தோழர் மணியரசன் வரவேற்க மனமில்லாமல் எம்மைப் பாராட்டும் எழுத்தாளர் சமஸை விமர்சிப்பது ஏன்?
"தமிழ்நாட்டு முதலமைச்சராக
தலித், கிறித்தவர், முசுலிம் வருவதற்கான சனநாயக வாயப்பு உருவாக வேண்டும் என்பது சனநாயக அறங்களில் ஒன்று"
என்று தோழர் மணியரசன் கூறியிருக்கும் "சனநாயக அறம் "
" சனநாயக வாய்ப்பு " எங்கிருந்து உருவாகும் ? யார் உருவாக்குவார்?
சாதிய ஆதிக்கத்தின் சனநாயக அறத்தைக் கடந்த
காலங்களில் புரிந்து கொண்டுதானே
களமாடிவருகிறோம்.
2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்"மாநுடத்தின் தமிழ்க்கூடல்" என்ற மாநாட்டுக்காக விடுதலைப்புலிகளால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு அம்மாநாட்டில் பங்கேற்ற எமது தலைவர் எழுச்சித்தமிழர் பங்கேற்றபோது," சாதயற்ற தமிழீழம் அமைய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதற்கு விடுதலைப்புலிகளின் கலை இலக்கிய பண்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் கவிஞர் புதுவை ரத்தினதுரை பதிலளித்து பேசும்போது," சாதிஒழிந்த தமிழீழம் தான் புலிகளின் லட்சியம். சாதிகளடங்கிய தமிழீழம் என்றால், அப்படிப்பட்ட தமிழீழமே தேவையில்லை" என்று பிரகடனம் செய்தார். அதாவது சாதியம் தமிழீழத்தில் இருக்கிறது என்பதை விட, சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பேசினார்.
ஆனால், தமிழகத்தில் தமிழ்த்தேசியத்தை கட்டமைக்க விரும்பும் தோழர் மணியரசன் அவர்கள் வெறுமனே 'தமிழ் மொழி' 'தமிழர்' 'தமிழரல்லாதார்'
என்கிற உணர்ச்சி அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலைத் தான் செய்து வருகிறாரே ஒழிய,
சாதி ஒழிப்புக்கான- தலித்திய விடுதலைக்கான அரசியல் கொஞ்சமும் இல்லை என்பதை அவரது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்தே
புரிய முடிகிறது.
"தலித் தலைமை" என்றால்
அது பறையர் தலைமையா?
அருந்ததியர் தலைமையா?
பள்ளர் தலைமையா?
என்று நுட்பமான அரசியல் செய்துவரும் தோழர் மணியரசன் அவர்களின் தமிழ்ததேசிய அரசியல் சாதி ஆதிக்க அரசியலாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறதே ஒழிய,
தமிழ்ததேசிய வேர்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்ளவில்லை.
தமிழ்த் தேசிய வேர்களைப் புறக்கணித்து விட்டு, தமிழ்த் தேசியத்தை இங்கே படைக்க முடியாது என்பதை தோழர் மணியரசன் அவர்கள்
புரிந்து கொள்வது நல்லது!
- வன்னி அரசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக