நரேந்திர மோடி செய்துள்ள ஊழல்கள்
1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.
2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி/ ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 பைசாவிற்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர்.
3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுரமீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.
4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரைவார்க்கப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.
5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். இது தேச பாதுகாப்பு அம்சம். ஆனால் ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங் களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையாநாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது.
6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுரமீட்டர் நிலம் தரப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.
7. அகமதாபாத். சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஒட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.
8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன்படிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.
9. ஹாசிரா எனும் இடத்தில் L&T நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மிட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1/- அதாவது சதுர அடி வெறும் 10 பைசாவிற்கு தாரை வார்க்கப்பட்டது.
10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு .
11. கால்நடை தீவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48-க்கு வாங்கப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் இந்த தீவனம் ரூ. 24க்கு கிடைக்கிறது.
12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்காரணமாக நஷ்டம் ரூ. 92 கோடி.
13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ. 4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ. 290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் நஷ்டம் .
14. Sujalam Sufalam yojana எனும் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு ரூ. 6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005ம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் இதுவரை பூர்த்தியாகவில்லை. (P.A.Commitee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ. 500 கோடி ஊழல் நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் பிஜேபி உறுப் பினர்களும் உள்ளனர்.
15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது மிகவும் சொகுகான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார்.
16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.
17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறு வனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை. லோக்பால் அமைப்பை குஜராத்தில் ஏற்படுத்த கவர்னர் எடுக்கும் முயற்சிக்கு ஏன் மோடி முட்டுக்கட்டை போடுகிறார் என்பதை மக்கள் வெகு விரைவில் அறிவர்.
- Arivuo, தமிழ் ஹிந்து வாசகர்
source: http://tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக