288 நாள் விண்வெளி பயணம்! சாதனைப் படைத்த பெக்கி விட்சன்..
கடந்த நவம்பர் 17-ம் தேதி விண்வெளிக்குச் சென்ற இவர், 288 நாள்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பூமியில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளார்.
57 வயது நிரம்பிய பெக்கி, இதுவரை 665 நாள்கள் விண்வெளியில் இருந்ததன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் அதிக நாள்கள் ஈடுபட்ட அமெரிக்கர் என்ற சாதனையையும், அதிக வயதில் விண்வெளியில் நீண்ட நாள்கள் இருந்த பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இவரது கடைசிப் பயணத்தின்மூலம் அதிக அனுபவம்பெற்ற விண்வெளி வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஓர் அணிக்கு இருமுறை தலைமைதாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிய இவர், 196.7 மில்லியன் கிலோமீட்டர் தூரம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது சாதனைகுறித்துப் பேசிய இவர், "நாங்கள் தொடர்ச்சியாகப் பல முந்தைய சாதனைகளை முறியடிப்பதே எங்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது" என்று பெருமையாகக் கூறுகிறார்.
சாதனைகளை முறியடிக்கவும் படைக்கவும் வயது ஒரு தடை அல்ல, முயற்சியே முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறார், பெக்கி விட்சன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக