ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மர்ம கோட்டையான ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் எப்படி உருவானது தெரியுமா ...???


மர்ம கோட்டையான ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் எப்படி உருவானது தெரியுமா ...???

மர்ம கோட்டையான ஜெ.வின் கொடநாடு எஸ்டேட்கொடநாடு..

 பத்திரிகைகளில் அடிக்கடி அடிப்பட்ட பெயர் இது.

 ஏழைகளை ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த இடமும் இதுதான்.

ஜெயலலிதா இருக்கும் போதே மர்மமாகவே இருந்த இந்த கொடநாடு பங்களா, அவர் இறந்த பிறகு அந்த மர்மம் மேலும் அதிகரித்துள்ளது .

ஆகையால் இந்த கொடநாடு பங்களாவைப் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துக் கொள்வோம்.


எப்படி வாங்கப்பட்டது ....???


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட்.

 குளிர்ச்சியும் பசுமையும் குலாவும் ரம்மியமான இந்தப் பகுதியில்தான் ஜெயலலிதா தனக்கான பங்களாவை உருவாக்கினார்.

ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்ற பின்னர் 1992 ஆண்டு 17 கோடி ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


விரிவாக்கம் ......!!!!


இது வாங்கப்படவில்லை என்றும் அபகரிக்கப்பட்டது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஜெயலலிதா மீது அப்போது எழுந்தது.

முதலில் 900 ஏக்கர் மட்டுமே வாங்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அருகில் உள்ள வேறு தோட்டங்கள் வாங்கப்பட்டு இதனுடன் இணைக்கப்பட்டு சுமார் 3,000 ஏக்கர் இடமாக விரிவாக்கப்பட்டது.


சொகுசு பங்களா ....!!!!


இதன் பின்னர் 5 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான சொகுசு பங்களா ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டது.

ஜெயலலிதா சென்னையில் இருந்து கொடநாட்டிற்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கு ஏற்ற வகையில் ஹெலிபேட் அங்கே அமைக்கப்பட்டது.


மர்ம பங்களா ......!!!!


இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் பிரமாண்ட பங்களாவை யாரும் பார்த்துவிடாத படி கட்டப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து யாரும் இந்த பங்களாவை பார்த்துவிட முடியாது.

அந்த அளவிற்கு இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது.


படகு குழாம் ....!!!!


ஜெயலலிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காக படகு குழாம் கொடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டது.

தேயிலைத் தொழிற்சாலை மற்றும் தோட்டத்தை ஜெயலலிதா சுற்றிப் பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் தயார் நிலையில் பங்களாவில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கார்கள் செல்வதற்காக சிறப்பு சாலைகளும் அங்கே போடப்பட்டிருந்தன.

11 நுழைவு வாயில் ......!!!


அனைத்து வசதிகளும் அடங்கிய கொடநாடு எஸ்டேட்டில் நுழைய மொத்தம் 11 நுழைவு வாயில்கள்.

இதில் எந்தப் பக்கம் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது.

இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்றால் அவர்கள் மட்டும் உரிய அனுமதி அட்டையுடன் உள்ளே பயந்து பயந்து சென்று


யாருக்கு சொந்தம் ....!!!


மர்மம் மிகுந்த கொடாநாடு எஸ்டேட் வி.கே. சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர்கள்தான் இயக்குநர்கள்.

 ஜெயலலிதாவுக்கு இதில் 10 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த கொடநாடு எஸ்டேட் பறிமுதல் செய்யப்படும் என்ற நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக