ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...



பாதுகாப்புத்  துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.

அதன்படி ஷிவ் பிரதாப் ஷுக்லா, அஷ்வின் குமார் ஷோபே, வீரேந்திர குமார், ராஜ்குமார் சிங், ஹர்தீப் புரி, கஜேந்திர சிங் ஷேகவத், சத்தியபால் சிங், கே.ஜே. அல்போன்ஸ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்,

நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, பியூஸ் கோயல் உட்பட 4 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

🔰நிர்மலா சீதாராமன் - பாதுகாப்புத்துறை
🔰சுரேஷ் பிரபு - வர்த்தகத்துறை
🔰பியூஸ்கோயல் - ரயில்வே துறை
🔰தர்மேந்திர பிரதான்- திறன் மேம்பாடு, பெட்ரோலியம்
🔰உமாபாரதி - குடிநீர் பராமரிப்பு துறை,  
🔰ஆர்கே சிங் - எரிசக்தி துறை(தனிப்பொறுப்பு)
🔰அல்போன்ஸ் - சுற்றுலா துறை
🔰ஹர்தீப் புரி - நகர்ப்புற வளர்ச்சி
🔰ஸ்மிருதி இரானி - தகவல் மற்றும் தொழில்நுட்பம்.  
🔰சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் கட்காரியிடம் கங்கை நதி சுத்தகரிப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக