சனி, 2 செப்டம்பர், 2017

மதி செய்திகள்@2/9/17




மதி செய்திகள்@2/9/17

அனிதா உடலுக்கு கட்சி தலைவர்கள் அஞ்சலி

சென்னை: மெரினாவில் போலீசார் ரோந்து பணி தீவிரம்

கருப்பு பணத்தை மீட்பதற்கு இந்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று சுவிட்சர்லாந்து பிரதமர் டோரிஸ் லியூதார்ட் உறுதி அளித்துள்ளார்.

சீனாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறுவது குறித்து எந்த தகவலும் வரவில்லை என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

அனிதா தற்கொலை வருத்தமளிக்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், நாடு முழுதும் 800 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

சென்னையில் மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை முழு கொள்ளளவை எட்டியது

தற்கொலை முயற்சி வேண்டாம்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி தரத்தாயார்: சைதை துரைசாமி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதா? ராமதாஸ் கண்டனம்

குழந்தைகளை போற்றுங்கள்: செல்பேசி சீரழிவுக்கு பலி கொடுத்து விடாதீர்கள்: அன்புமணி வேண்டுகோள்

அனிதாவுக்கு தலித் பெண் அடையாளம் வேண்டாம்; தமிழச்சியாக பாருங்கள்: ஜான்பாண்டியன் வேண்டுகோள்

பிரதமர் மோடிக்கு யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காது. எம்.பி.,க்கள் கூட்டத்தில் நான் சில பிரச்னைகளை எழுப்பிய போது அவர் என் மீது கோபப்பட்டார் என, பா.ஜ., எம்.பி., நாணா பதோலி கூறியுள்ளார்.

உ.பி.யில் குழந்தைகள் பலியான விவகாரம். டாக்டர் கபீல் கான் கைது

பீகாரில் வெள்ளத்தின் போது ஏரிகளின் உடைப்பிற்கு காரணம் எலிகளே என நீர்வளத்துறை மந்திரி பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பீகார் வெள்ளத்துக்கு எலிகள் மட்டுமல்ல, லாலுவும் காங்கிரசுமே காரணம்: துணை முதல்வர் குற்றச்சாட்டு

ஆந்திரா: ஏ.டி.எம்.ஐ உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை

பி.எஸ்.எல்.வி.39 ராக்கெட் தோல்வியை தழுவியதற்குக் காரணம் கூடுதல் சுமையே என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் சிவக்குமார் கருத்துஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி. 39 ராக்கெட் ஏவப்பட்டது.எடையைக் குறைத்திருந்தால் செயற்கைக்கோள் பிரிந்து புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது சியோமி என்ற சீன நிறுவனம். இந்தியாவில் அது தினமும் சுமார் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை புரிந்துள்ளது. ரெட்மி நோட் 4 என்ற மாடலின் விற்பனை எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 7 மாணவிகள் உடல் கருகி பலி

மும்பை ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சரத் ராவ் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக