பொன்விழாக் காணும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குறித்த
சில தகவல் துளிகள்!
1966ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம் 1966. 11. 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 14728 /4 இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் 1967. 01. 05ஆம் திகதி வெளியாகியது!
கூட்டுத்தாபனம் ஆன பிறகு நடைபெற்ற ஒரு சில முக்கிய நிகழ்வுகள் இவை!
1969. 04. 13 முதல் மணிக்கொரு தடவை செய்திச்சுருக்கம் ஒலிபரப்புவது ஆரம்பமானது.
1972. 02. 01 முதல் தேசியசேவையைச் சேவை ஒன்று என்றும், வர்த்தக சேவையைச் சேவை இரண்டு என்றும் அறிவிக்கும்முறை அமுலானது! ஆனால்
1984ல் மீண்டும் பழைய முறை செயற்படுத்தப் பட்டிருக்கிறது!
CEYLON BROADCASTING CORPORATION என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டுவந்த இக்கூட்டுத்தாபனத்தின் பெயர் 1972. 05. 22 முதல் இலங்கை குடியரசானதும் Srilanka Broadcasting Corporation என அழைக்கப்பட்டபோதும் தமிழ்ப் பெயரில் மாற்றம் வரவில்லை!
1976.08. 16 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டு நிகழ்வுகள் நேரடியாய் ஒலிபரப்பானதுடன், செய்திஒலிபரப்புக்கென Voice Cast எனும் கலையகத் தொகுதி நிறுவப்பட்டது!
1979. 04. 12அன்று முதலாவது பிராந்திய ஒலிபரப்பு ரஜரட்ட சேவையென்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டது!
1978. 12. 02 மத்திய கிழக்கு ஒலிபரப்பு உதயமானது!
1981. 08. 26அன்று Studio STX என்ற பெயரில் FM Stereo சேவை ஆரம்பமானது ஆங்கிலத்தில் மட்டும் ஒலிபரப்பான அது
1989. 11. 03ஆம் திகதி முதல் City FM சேவை என்று புதுவடிவில் மும்மொழி பண்பலை ஒலிபரப்பாகி மக்களை ஈர்த்தது!
1980. 02. 03 ருஹுணு பிராந்திய சேவை ஆரம்பம்!
1983. 04. 13 கண்டி பிராந்திய சேவை ஆரம்பம்! அதில் தமிழ் நிகழ்ச்சிகளும் ஒலிக்கத் தொடங்கின!
1986. 04. 12 கிராந்துரு கோட்டேயிலும்,
1987. 10. 01 மஹஇலுப்பள்ளமவிலும்,
1991. 02. 04 கொத்மலையிலும் சமூக வானொலி நிலையங்கள் இயங்க ஆரம்பித்தன!
1987 காலகட்டத்தில் பலாலி சேவை ஆரம்பிக்கப்பட்டது! இப்போது யாழ்FM
வடக்கில் ஒலிக்கிறது!
1993. 02.04 வன்னி சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளபோதும் 2002. 03. 30 அன்று நிறுத்தப்பட நேர்ந்தது!
1998. 04, 12 பொலனறுவையில் புலதிஸிராவய எனும் சமூக வானொலி ஆரம்பிக்கப் பட்டது!
1997. 08. 13 அன்று ஈரப்பெரியகுளத்தில் மத்திய அலை ஒலிபரப்பு நிலையம் நிறுவப்பட்டு வடக்குக்கான வானம்பாடி ஒலிபரப்பு கானம்பாட ஆரம்பித்தது!
2003. 01.01 முதல் ஊவா சமூக வானொலி உதயமாகி தமிழிலும் நிகழ்ச்சிகள் படைக்கிறது!
2005.11.04ஆம் திகதி கிழக்கில் அக்கரைப்பற்று நகரிலிருந்து பிறை FM
வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது!
2007. 11. 12 ஆதிவாசிகளுக்கும் வாய்ப்பளிக்கும் தம்பான FM ஆரம்பிக்கப் பட்டது!
2001. 04. 14 முதல் தமிழ் வர்த்தக சேவையின் பெயர் தென்றல் என மாற்றப்பட்டு இளையவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன!
2001. 08. 15 தெற்காசிய சிற்றலை ஒலிபரப்பு நிறைவு கண்டது!
நிறுத்தப்பட்ட தமிழ் வர்த்தக சேவை மீண்டும் 2005. 01. 15 முதல் மீள்உதயம் கண்டது! தேசிய சேவை அலைவரிசையில் ஒலித்து வருகிறது!
திக்கெட்டும் ஒலிக்கும் அன்னை வானொலி தொடர்ந்தும் பல்லாண்டு பல்லாண்டு புகழுடன் ஒலிக்க வாழ்த்துவோம்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
பொன்விழாக் கொண்டாடும் இவ்வேளையில் நம் தாய்த்திருநாடு சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடிய வேளையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட பொன்விழாச் சிறப்பிதழிலிருந்து சில பக்கங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
எனது குருட்டு அதிர்ஷ்டம்! எதிர்பாராத விதமாக என் நிழல்படமும் அதில் வந்திருக்கிறது!
நன்றி: மஹ்தி ஹசன் இப்ராஹிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக