வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள்


இந்த புதிய விதிமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள்!

பாஸ்போர்ட், வெளிநாட்டுக்குச் செல்லவேண்டிய ஒருவர் பெற வேண்டிய முக்கியமான ஆவணம் ஆகும்.

வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் பிரிவு இப்பணியைச் செய்கிறது.

சென்னை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான தலைமையகம், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சென்னையில் இயங்குகிறது.

*பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் :*

*பழைய விதிமுறை:*
26 ஜனவரி 1989 பிறகு பிறந்தவருக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்.

*புதிய விதிமுறை:*
பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும், அரசால் வழங்கப்பட்ட (பிறப்புச் சான்றிதழ், பள்ளியின் மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அல்லது இ-ஆதார் அட்டை, அரசு ஊழியராக இருந்தால் அடையாள அட்டை அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் ஓய்வூதிய சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை) எந்த ஒரு சான்றிதழையும் பிறப்பு சான்றிதழாக சமர்பிக்கலாம்.

*பெற்றோர்*
*அல்லது பாதுகாவலர்:*

*பழைய விதிமுறை:*
ஒருவர் பாஸ்போர்ட் பெற தாய் - தந்தை என இரண்டு பேரின் பெயர்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

*புதிய விதிமுறை:*
பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரின் பெயர் மட்டும் பதிவு செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெற்றோரில் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்றவர்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எளிதாகியுள்ளது.

மத அடிப்படையில் சாதுக்கள், சன்னியாசிகள் போன்றவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர் என்ற இடத்தில் தங்களது ஆன்மிகக் குருவின் பெயரைக் கூட பதிவு செய்து கொள்ளலாம்.

*இணைக்கப்படும் சான்றிதழ்கள்:*

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் பின் இணைப்புகள் 15-ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சேர்க்கையான ஏ, சி, டி, இ, ஜே மற்றும் கே ஆகியவை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டன. சில சான்றிதழ்கள் மற்றவற்றோடு சேர்க்கப்பட்டுவிட்டது.

இதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஏராளமான சான்றிதழ்களை இணைக்கும் பணி எளிமையாகியுள்ளது.

*அட்டஸ்டேஷன்:*

*பழைய விதிமுறை:*
விண்ணப்பதாரர்கள் இணைக்கும் சான்றிதழ்களுக்கு நோட்டரி அல்லது தனி நீதிபதி அல்லது முதன்மை குற்றவியல் நீதிபதியின் அட்டஸ்டேஷன் அவசியமாக இருந்தது.

*புதிய விதிமுறை:*
விண்ணப்பதாரரே வெள்ளை காகிதத்தில் தன்னுடைய கையொப்பம் இட்டு கொடுத்தால் போதுமானது.

*திருமணமானவர்*
*விவாகரத்தானவர்:*

*பழைய விதிமுறை:*
திருமணமானவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது திருமண சான்றிதழை இணைக்க வேண்டியது இதுவரை கட்டாயமாக இருந்தது.

*புதிய விதிமுறை:*
விண்ணப்பத்தில் பின் சேர்க்கையாக இணைத்து வந்த திருமண சான்றிதழ் இனி தேவையில்லை. ஒருவேளை விவாகரத்தானவர் என்றால், அவர் தனது வாழ்க்கைத் துணையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்ற விதிமுறை மாற்றம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

*பணித் தொடர்பாக*
*துரித பாஸ்போர்ட் :*

ஒரு அரசு ஊழியருக்கு துரிதமாக பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், தனது மேலதிகாரியிடம் இருந்து வெளிநாடு செல்ல தடையில்லாச் சான்று பெற்று அளிக்க முடியாவிட்டால், தன்னுடைய மேலதிகாரிக்கு தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து அறிவித்துவிட்டதாக, விண்ணப்பதாரரே சுய பிரகடன சான்றிதழை கையெழுத்திட்டுத் தரலாம்.

*புதிய விதிமுறை மாற்றங்கள்,*
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பதற்கான வேலையை மிகவும் எளிமையாக்கியதோடு, பல்வேறு சட்டச் சிக்கல்களையும் தீர்த்து வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக