சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் காரசாரவாதம்!
*20/09/17 புதன்கிழமை!*
*தினகரன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, வாதம்!*
4 ஆண்டுகள் பதவிகாலம் இருக்கையில் தகுதிநீக்கம் ஏற்க முடியாது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதற்காகவே இந்த தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை.
அதனால்
கட்சி தாவல் தடை சட்டம் எங்களுக்கு பொருந்தாது என்றார்.
தனபால் சபாநாயகராக செயல்படாமல் கட்சிக்காரராக செயல்படுகிறார்.
கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் அரசுக்கு ஆதரவாகவே ஓட்டளித்தோம். கொறடா உத்தரவிற்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்றே நாங்கள் கவர்னரிடம் மனு அளித்தோம்.
தமிழக அரசை டில்லியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள்.
தமிழத்தின் தற்போதைய அரசியல் சூழல் டில்லியில் சிலருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
அரசுக்கு எதிராக ஓட்டளித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். எனவும் வாதிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக