இயக்குநர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக இயக்குநர் சீமான் அவர்களிடம் சில நினைவூட்டல்...
இயக்குநர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக இயக்குநர் சீமான் அவர்களிடம் REDPIX வலைதள TV யின் நிருபர் சில கேள்விகளை முன் வைக்கிறார்......... அதற்கு பதிலளிக்கும் விதமாக திரு. சீமான் பேசும் போது.....
இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு தீண்டத்தகாத இந்துவாகவே இருந்த போதும்...... அவரது பொருளாதார வளர்ச்சியினாலும், அவரது இசை மேதமையினாலும் இன்று அவரது வீட்டில் சாதி இருக்கா? என்று கேட்கிறார்....
அதாவது கல்வியும், காசும் இருந்தா சாதி ஒழிஞ்சிடும் என்கிறார்.....
அண்ணன் சீமான் அவர்களுக்கு வரலாற்றை பற்றி நரம்பு புடைக்க நான் பாடம் எடுக்க அவசியப்படாது..... ஏனெனில் அவர் அறிவின் உச்சம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவரது தம்பிகளுக்காக இந்த வரலாற்று சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.......
பாபு ஜகஜீவன் ராம்...... முன்னாள் மக்களவை சபாநாயகர் திருமதி. மீராகுமார் அவர்களின் தந்தை, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர்......... (இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை இவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது)
இவர் வாரனாசி யில் (தற்போது காசி) ஒரு சிலைதிறப்பு விழாவுக்கு நாட்டின் பாதுகாப்பு மந்திரி என்ற அடிப்படையில் அழைக்கப்படுகிறார்........
அவரும் சிலை திறந்து வைக்கிறார்.........
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லிக்கு சேருவதற்கு முன்பு கங்கை தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அந்த சிலையும், அந்த இடமும் கழுவப்பட்டு, தீட்டு நீக்கப்படுகிறது......
இத்தனைக்கும் அவர் remote control மூலமாகத்தான் சில அடி தூரத்திலிருந்துதான் சிலையை திறந்து வைக்கிறார்........
இந்தியாவில் பிரதம அமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்க பதவியில் இருந்தாலுமே தீண்டத்தகாத இந்துவுக்கு இதுதான் நிலைமை...
சாதிப் பசிக்கு பலியான விருத்தாசலம் கண்ணகி முருகேசன் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது சீமானுக்கு தெரியாதா?
கோகுல்ராஜ் ஒரு பொறியியல் பட்டதாரி என்று சீமானுக்கு தெரியாதா?
உடுமலைப்பேட்டை சங்கர் ஒரு பொறியியல் பட்டதாரி என்று சீமானுக்கு தெரியாதா?
அவ்வளவு ஏன் வெளிடுகளுக்கு சென்று உயர் பட்டப்படிப்பு களை முடித்து, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பரோடா சமஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்று பணியாற்றியபோது, அவரது அலுவலகப் பணியாளர் அவரை வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவா........ இந்த தண்ணீரை நீ தொட்டால் தீட்டாகவும் என்று சொன்ன, வலிமிகுந்த வரலாற்றின் கோபத்தை சுமந்து கொண்டிருக்கும் எங்களிடம் படிச்சா சாதி போயிடும் னு சொல்ற மொக்கயான வாதங்களை தவிர்த்து ஒரேஒரு ஊர்த் தெருவுக்கு அம்பேத்கர் பெயரை வைத்து விட்டு வந்து பேசுங்கள்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக