சனி, 9 செப்டம்பர், 2017

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அன்னக் கழுத்துப் பூ!



கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அன்னக் கழுத்துப் பூ!


கொடைக்கானலில் வருடந்தோறும் அன்னக்கழுத்துப் பூ பூக்கும் நேரம் சுற்றுலாப் பயணிகள் வருகை களை கட்டும்.

இந்தப் பூவின் அதிசயமே இது 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பது தான்.

சிலர் இந்தப் பூ 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அன்னப்பறவையின் கழுத்துப் போல வளைந்திருக்கும் இந்தப் பூச்செடி ஒவ்வொன்றும் தன் வாழ்நாளில் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இந்த ஆண்டில் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துச் செழித்திருக்கும் அன்னக்கழுத்துப் பூ அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பூ என்பதால் அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வம் மிகுதியாகி வருகிறது.

சுமார் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்தச் செடியின் கழுத்துப் பகுதி அன்னத்தின் கழுத்தை நினைவுறுத்துவதால் தான் இந்தப் பூச்செடிக்கு அப்படி ஒரு பெயர் வந்தது என்கிறார்கள் தோட்டக் கலைத்துறையினர்.

இதே அன்னக்கழுத்துப் பூச்செடி ஒன்று கடந்த ஆண்டும் கொடைக்கானல் ,தமிழ்நாடு விடுதியில் பூத்திருந்ததை அன்றைய தினம் செய்தி ஊடகங்கள் பதிவு செய்திருந்தன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் குறிஞ்சிப் பூவும் கூட இதே கொடைக்கானல் மலையை ஒட்டிய அடிவாரப் பகுதிகளில் தான் மிகுதியாகப் பூக்கப் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக