தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா?
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்த பன்வாரிலால் புரோஹித், மூன்று முறை நாக்பூர் தொகுதி எம்.பியாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் 2 முறையும் பாஜக சார்பில் ஒரு முறையும் என மூன்று முறை எம்.பியாக இருந்துள்ளார். அசாம் மாநில ஆளுநராக சிறிது காலமும் மேகாலயா ஆளுநராகவும் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்.
தொடக்கத்தில் காங்கிரசில் இருந்த பன்வாரிலால் புரோஹித், பிறகு பாஜகவிற்கு சென்று 1996-ம் ஆண்டு பாஜக சார்பில் எம்.பி ஆனார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் காங்கிரசிற்கு சென்ற பன்வாரிலால், மறுபடியும் பாஜகவில் சேர்ந்தார். இவ்வாறு காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டு முறை புரோஹித் மாறி மாறி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 2003-ம் ஆண்டு விதர்பா ராஜ்ய கட்சி என்ற கட்சியை புரோஹித் தொடங்கினார்.
இவ்வாறு அரசியலில் எம்.எல்.ஏ, எம்.பியாக மட்டுமல்லாமல் தனிக்கட்சி நடத்திய அனுபவமும் புரோஹித்துக்கு உண்டு.
தமிழகத்தில் அரசியல் நெருக்கடி மிகுந்த இந்த நிலையில், புரோஹித் எப்படி செயல்படப் போகிறார்? பிரச்னைகளை திறம்படக் கையாள்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக