விகடனில் வெளியான நீட் தேர்வு சார்ந்து டெல்லி பேராசிரியர் அனில் சடகோபன் பேட்டிக்கு என்(மாரிதாஸ்) பதில்.
பதில் கொடுக்கும் முன்னர் நான் முன்னர் வெளியிட்ட அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்கிறேன் என்ற பதிவுக்கு வந்த பொதுவான ஒரு கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு சடகோபன் அதாவது இடதுசாரிகள் ஆதரவாளரான அனில் சடகோபன் அவர்கள் பேட்டிக்கு பதில் தருகிறேன்.
கேள்வி :
ஏழை கிராமபுற மாணவர்கள் எப்படி தனியாக நீட் தேர்வை சந்திக்க கோச்சிங் கிளாஸ் சென்று படிக்க முடியும்? அவர்கள் எப்படி CBSE பாடத்திட்டதில் வரும் நீட் தேர்வை எழுத முடியும்? {கேள்வி : பாலாஜி}
இந்த கேள்விக்கு மாரிதாஸ் பதில் சொல்லுங்க - பிஜேபிக்கு திராணி இருந்தால் பதில் கூறுங்கள் என்றனர் சிலர்.
பிஜேபிக்கு திராணி இல்லையா இருக்கா என்பது ஒருபுறம் இருக்கட்டும் - இந்த கேள்வி கேட்ட உங்கள் அனைவருக்கும் முதலில் நீட் என்றால் என்னவென்று தெரியுமா???? எனவே நீட் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். அதன் Physics, Chemistry, Biology மூன்றின் பாடம் என்ன வித்தியாசம் என்று ஒப்பிட்டது உண்டா??? எனவே நானும் கேள்வி கேட்பேன் என்று கேட்பது வீண். ஒரு கேள்வி கேட்கும் முன்னர் அது சார்ந்து நாமும் கொஞ்சம் தேடி படிப்பது நல்லது. அதுவே அறிவார்தவர் செயல். சும்மா உணர்வை தூண்டும் வசனங்கள் வீண்.
சரி, நீட் தேர்வு என்றால் என்ன????
நீட் தேர்வுக்கு சிலபஸ் உருவாக்குவது MCI - medical council of india. எனவே இது முதலில் CBSE பாடத்திட்டம் என்பது அடிப்படை தவறு. medical council of india கீழ் மாணவர்கள் மருத்துவம் படிக்க வரும் அனைவரும் இந்த அகில இந்திய அளவிலான தேர்வுக்கு தகுதியாக வேண்டும்என்று கேட்டு கொள்கின்றனர்.
CBSE Bord என்ன செய்கிறது என்றால் இந்த medical council of india வெளியிடும் சிலபஸில் அதை 95% வரை தன் பாடத்திட்டத்தில் சேர்த்து விடுகிறது. இதனால் தான் பலருக்கு இந்த நீட் தேர்வு CBSE பாடத்திட்டம் போல் தெரிகிறது.
CBSE Bord எப்படி தன் பாடத்திட்டத்தை MCI அறிவித்த பாடத்திட்டத்துக்கு உயர்த்தியது???? அதே போல State Bord உயர்த்தி இருந்தால் வேலை முடிந்தது.
ICSE board , CBSE Bord , State Bord , matriculation board, Army Public Schoo என்று எல்லா பிரிவுகளுக்கு கீழ் வரும் அனைத்து பிரிவினரும் இப்படி தான் தயார் ஆகிறார்கள்.
இது முதலில் புரிகிறதா ????
அடுத்து NEET வெறும் தேர்வு தான். தேர்வு முடிந்ததும்- இந்தாங்க வெற்றி பெற்ற மாணவர்கள் லிஸ்ட் என்று அந்த அந்த மாநிலத்திற்கு பட்டியலை கொடுத்துவிடுவார்கள். அதோடு அவர்கள் வேலை முடிந்தது. அதை வைத்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையை மாநிலங்கள் நடத்தி கொள்ளவேண்டும். நல்லா புரிந்து கொள்ளுங்கள் இப்போவும் 85% தமிழக மாணவர்கள் தான் இடம் ஒதுக்கபடுகிறது. நீட் தேர்வு மூலம் தமிழர்கள் வஞ்சிக்க படுவதாக எவனாது சொன்னா வாயிலேயே நாலு குத்து விடுங்க.
அதே இடஒதுக்கீடு முறை மேற்கொள்ளலாம் மாநில அரசுகள். இதில் நீட் எந்த பிரச்சனையும் வராது.
இது வரை முதலில் புரிகிறதா??? இது ஒன்றும் quantum physics இல்லை புரியாமல் போக. வெறும் தேர்வு திட்டவடிவம்.
எனவே கல்வி தரமாக இருக்க MCI தன் பாடத்திட்டத்தை வெளியிடும் பொது CBSE எப்படி மாறுகிறதோ அதே போல தமிழ் நாடு , ஆந்திரா , கர்நாடகா என்று எல்லா மாநிலங்களிலும் உள்ள state Board தங்கள் பாடத்திட்டத்தையும் மாற்றி இருந்தால் எதற்கு தனியா கோச்சிங்க கிளாஸ்????
இதனால் தான் மற்ற எந்த மாநிலமும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது புரிகிறதா?? இங்கே தமிழகத்தில் செய்வது அரசியல்..
ஆனால் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காமல் விட்டு விட்டோம். சரி ஒரு முறை அதற்கு விலக்கு வேண்டும் என்றோம். நீதிமன்றமும் சரி என்று போன வருடம் விட்டது. ஆனால் இந்த வருடமும் நீதி மன்றம் போய் நிற்க- தவறு யாருடையது?????
எனவே முதலில் நீட் என்றால் என்னவென்று தெரிந்து விட்டு பின்னர் கேள்விகள் கேட்ட வாருங்கள். நீட் சிலபஸ் என்று தேடவும் - அதை பாருங்கள் medical council of india என்று தான் போட்டிருப்பான்.
ஆக தவறு செய்தது ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் என்பது அப்பட்டமாக தெரியும் போது இது எப்படி நீதிபதிகள் தவறாகும்??? இது எப்படி மத்திய அரசின் தவறாகும்???
மத்திய அமைச்சர்கள் அனுமதி அளிக்க முன்வந்தனர். அவர்களுக்கும் பிரச்சனை என்ன இருக்கு - அவர்களும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க தானே நினைபர். இதில் என்ன வேண்டி இருக்கு பழிவாங்க???
அவர்கள் கொடுக்க முன்வந்த பொது வழக்கு நீதிமன்றம் சென்றால் அங்கெ "எல்லா மாநிலமும் நீட் தேர்வு எழுதுகிறது. எல்லா மாநிலமும் எந்த பிரச்சனையும் இல்லை. போன முறை பாடத்திட்டம் மாற்றவில்லை என்று விலக்கு கேட்டது சரி. இந்த முறை வந்தால் என்ன அர்த்தம்??? மாணவர்கள் வாழ்கையில் அரசியல் செய்வது ஏற்க முடியாது" என்று கட்டாயம் விரட்டி அடிப்பார்கள் தானே..
இது வழக்காக நீதி மன்றம் சென்றதுமே நான் கூறினேன் "நிதிபதிகளிடம் கட்டாயம் திட்டுவாங்கி விட்டு தான் வருவர்" என்றேன். அது நடந்தது.
வருஷம் வருஷம் எதையாது எடுத்து கிட்டு வந்து விலக்கு தாருங்கள் என்று நீங்கள் கேட்க "நீதிபதிகள் முட்டாள்கள் இல்லை". திராவிட கட்சிகள் மக்களை முட்டாள் ஆக்கலாம்.. அது தானே 60வருடமாக பெரியார் வழி வந்த திராவிட கூட்டம் செய்கிறது.
----------------------------
இப்போ ஆனந்த விகடனில் வந்த பேராசிரியர் அனில் சடகோபன் பேட்டிக்கு என் பதில்.
ஆனந்த விகடன் முதலில் அவரை இடதுசாரி(கம்யூனிஸ்ட்) ஆதரவாளர் பேராசிரியர் அனில் சடகோபன் என்று சொல்லாமல் மறைத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கொஞ்சமாது பத்திரிகை நேர்மை கடைபிடிக்க பழகுங்கள்.
அவர் முன்வைத்த குற்றசாட்டுகளும் பதில்களும்:
1)சமூகநீதியையும், சமத்துவத்தையும் இதனால் கெடும்... மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம்.
ஒற்றைத் திறனாய்வு தேர்வு கூடாது என்ற நிலைப்பாடு இந்த மருத்துவ தேர்வு முறையில் மட்டுமா இல்லை எல்லா விஷயத்திலுமா என்று எனக்கு புரியவில்லை. ஏன் என்றால் IAS IPS நடத்துகிறோம் தேர்வுகள் அதுவும் ஒற்றை திறனாய்வு தேர்வு தான். எல்லோரும் UPSC Civil Services தேர்வுக்கு பொதுவான Syllabus தானே வெளியிடுகிறோம்.. நடத்துகிறோம்..
ஒற்றைத் திறனாய்வு தேர்வு கூடாது என்பது தவறான வாதம்.
இது எனவோ நீட் மூலம் மருத்துவ கல்லூரிக்கு சேர்வதற்கு மட்டும் தான் இந்தியாவில் நடத்தபடுவது போல மாயையை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். இந்தியாவில் JEE இன்ஜினியர் சேர்வதற்கு நடக்கிறது இது பிரச்சனை இல்லையா??
Indian Maritime University Common Entrance Test , National Aptitude Test (NATA) என்று எத்தனை தேர்வுகள் நான் காட்டவேண்டும் கூறுங்கள்.
AIIMS , CMC-Vellore , CMC-Ludhiana , JIPMER , Manipal (MBBS), MGIMS-Wardha ,AMU (MBBS) , BHU Medical என்று அவன் அவன் இஷ்டத்துக்கு மருத்துவ தேர்வுகள் வைத்து மாணவர்கள் சேர்க்கை அறிவித்து பல ஆயிரம் கோடிகள் வாங்கி மருத்துவ படிப்பை விற்கும் பொது இங்கே எவனும் போராட்டம் நடத்தவில்லை.
AIIMS வழிகாட்டுதல் தெளிவின்மையால் , ஒரு நேர்மை இல்லாததால் கோடிகளில் மருத்துவ சீட் விற்ற போது எங்கே இருந்தீர் எந்த போராளிகள்???
இதனால் தான் நான் இந்தியா கொண்டுள்ளது educational system இல்லை Examination system - இதை மாற்றிவிட்டு State Bord மொத்தமாக ஒழித்துவிட்டு அனைத்தையும் CBSE போர்ட் என்று மாற்றிவிடுங்கள் என்று நான் பல வருடமாக கூறுகிறேன். எவன் காதில் வாங்குறான்.
அனைத்தையும் இந்திய அளவில் ஒற்றை திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்ய எளிமையாக இருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் வேறு வேறு பாடத்திட்டம் கொடுக்கமால் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தில் படித்து வெளியேறுவர் என்று கூறுகிறேன்.
இதற்கு மத்திய அரசு தயார்... மாநிலங்கள் தான் பிரச்சனை.
இப்போ நான் மாரிதாஸ் கூறுவது என்ன தவறு உண்டு????
2)உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும்.
யார் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் கொடுக்க விரும்புகிறார்???? யார் சிதைக்க விரும்புகிறார்கள்???? இதை யார் பேசுவது என்ற ஒரு வரைமுறையே இல்லாமல் போச்சு. ஏன் என்றால் பலருக்கு வரலாறு தெரியாது தெரியாது அல்லவா. அந்த தைரியம் தான் கம்யூனிஸ்ட் இப்படி பேச.
Indian Oil , ONGC ,NTPC, Gas Authority of India என்று பொதுதுறை நிறுவனங்கள் மூலம் வரும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து போரட்டடங்களை தூண்டிவிடும் கம்யூனிஸ்ட் கட்சியா பொது துறை நிறுவனங்கள் நலன் பற்றி பேசுவது??? நல்ல வேடிக்கை.
உங்கள் கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் காடிய லட்சணத்தில் HMT இந்தியாவின் கோவில் கோபுரம் என்று அழைக்கபட்ட பொதுத்துறை நிறுவனம் நாசம் ஆனது வேண்டுமானால் புதிய போராளிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். அனைவரையும் ஏமாற்ற முடியாது சடகோபன் சார்.
MBBS படிப்பே அந்நிய முதலாளிகளுக்கு அடிமையாக செய்யும் வேலை என்றால் சரி வாங்க சித்தா ஆயுர்வேதா படிக்கலாம்... அதை சொன்னால் சித்தர்கள் ஹிந்துமதம் அய்யோ யோகா போல இதிலும் ஹிந்துத்துவா திணிப்பு என்று ஆரம்பித்து விடுவீர். உங்களை என்ன சொல்ல???
எனவே இது அடிப்படையில் தவறான குற்றசாட்டு.
3)இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை.
இது என்ன விதமான பேச்சு??? உங்களுக்கு சமாளிக்க முடியாமல் எதோ உளறுகிறார்.
உண்மையில் நீட் தேர்வு என்பது வெறும் தேர்வு மட்டுமே. அதாவது வெறும் examination bord. அதில் மதிப்பெண் வாங்கியவர் பட்டியலை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட்டு விலகி விடுவர். இது மட்டுமே இவர்கள் பணி.
அந்த பட்டியலை கொண்டு கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்ப்பது முதல் மருத்துவ படிப்புக்கான கொள்கை முடிவு என்பது முழுக்க வேறு. அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்???? தேர்வு நடத்தும் வெறும் ஒரு அமைப்பு எப்படி நாட்டின் மாநிலத்தின் மருத்துவ கொள்கையில் தலையிடும்???
இது முழுக்க தவாற மக்களை திரிக்கும் உண்மைக்கு புறம்பான பேச்சு.
4) நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.
அப்பாடா தலித் என்று சொல்லாமல் விட்டீர். நல்லது.
இப்போ இந்த பின்தங்கிய சமூக மக்கள் யார்???? ராமநாதபுரம் , சிவகங்கை என்று பின்தங்கி பகுதிகளில் தேவர் , கள்ளர் , பிள்ளை , நாடார் , மருத்துவர் , பிராமணர், கோனார் என்று எல்லா ஜாதிய மக்களும் தான் பின்தங்கியவர்கள் என்று கூறினால் - அதாவது ஜாதிய அடையாளம் இல்லாமல் உண்மையில் கல்வி கிடைக்காமல் - உழைத்து பொருள் சேர்க்க வழி அதிகம் இல்லாத பகுதியை சார்ந்த மாணவர்கள் ஜாதி, மதம் கொண்டு பிரிக்காமல் இந்த கோரிக்கையை கம்யூனிஸ்ட் திமுக திக போன்றவை முன்வைக்கமுடியுமா??
நான் சவால் விடுகிறேன்... எனவே சும்மா உதார்விடவேண்டாம்...
உண்மையில் நாம் மாற்றி அமைக்கவேண்டியது கல்வி கொள்கையை தான்.
அதாவது நீட் தேர்வை சந்திக்கும் அளவுக்கு நம் மாநில கல்விதரம் தேவை. தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க வசதி இல்லாமல் தான் அரசு பள்ளிக்கு வருகிறார்கள். சரி தானே.
அப்படி வரும் பிள்ளைகள் வாழ்க்கை எதிர்கால என்பது ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலம் என்று அக்கரை இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தனியார் பள்ளிகளுக்கு சென்று கிடைக்கும் அளவுக்கான தரத்தில் கொடுப்பதில் தானே நம் அக்கரை இருக்கவேண்டும்???
எனவே சமூகத்தில் பின் தங்கிய என்று தனியாக எதுவும் பிரித்து பார்க்க தேவை இல்லை. அரசு பள்ளிக்கு வரும் அனைவருமே சமூகத்தில் பின்தங்கிய பிள்ளைகள் தான். அவர்களுக்கும் CBSE பள்ளியில் கிடைக்கும் தரமான கல்வி கிடைக்க முன்வருவதுவே நலம்.
படிக்கும் குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும் சார். சும்மா அரசியல் ஆதாயங்களை பள்ளி வகுப்புக்குள் கொண்டுவராமல் எட்டி நில்லுங்கள்.
5)தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள்.
இதற்கு நீங்கள் நான் மேலே கூறிய நீட் என்றால் என்ன என்ற விளக்கத்தை படித்தால் போதும்.
6)முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. இலவசமாக கொடுக்கின்றன.
இது போல முட்டாள்தனமான பேச்சு எல்லாம் இந்த சீமான் தான் பேசுவார் என்று நினைத்திருந்தேன் இப்போ கம்யூனிஸ்ட்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.
ஜெர்மனி மக்கள் தொகை 8,28,00,000.... இந்திய மக்கள் தொகை 132,68,01,576 ....
இந்திய மாநிலங்கள் மூலம் உணவுடன் கூடிய இலவச கல்வி கொடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கூட இந்த நாடுகளின் மொத்த மக்களை தொகையை விட அதிகம்.
எனவே உற்பத்தி , ஆராய்ச்சி , விளையாட்டு என்று ஒப்பிடுங்கள். நான் ஏற்றுகொள்வேன். இப்படி விசயங்களில் ஒப்பிடுவது எந்த அறிவார்ந்த மக்களும் செய்ய விரும்ப மாட்டார்கள்.
அதை விட நம்ம மக்கள் இப்போ தான் படிச்சு வாரானுக... அரசு பள்ளியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியருக்கு கூட எப்படி முதலீடுகள் சேர்க்க வேண்டும் என்று கூட தெரியாது. என்ன மிஞ்சி போனா வீடு நிலம் தங்கம் தான் இன்னும் முதலீடாக வாங்கி போடும் அளவுக்கு தான் இந்த மக்கள் அறிவு உள்ளது.
கொஞ்சம் காலம் ஆகும் இவர்கள் நீங்கள் சொல்லும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் போல வர.. எனவே ஒப்பிடுவது தவறு.
ஆக கம்யூனிஸ்ட் இதில் ஏன் குழப்ப பார்கிறார்கள்????
இதை கம்யூனிஸ்ட் மத்தியில் உள்ளவர்கள் பேச மாட்டார்கள். மாநில கம்யூனிஸ்ட் தலைகள் தான் குரல் கொடுக்கும். அதன் பின்புலம் உள்ள அரசியல் விவரம் பின்னர் அளிக்கிறேன்.
International Coordination of the Communist Parties (ICOR) பற்றி தனி பதிவே வெளியிடுகிறேன் நேரம் கிடைக்கும் போது அப்போ இந்த கம்யூனிஸ்ட் லட்சனம் தெரியும்.
-------------------
இந்த வகையில் நீட் தேர்வுக்கான தீர்வு :
மாநில அரசு CBSE BORD க்கு மாறிவிடுவது தான். எல்லாருக்கும் ஒரே கல்வி. மாநிலத்தில் உள்ள StateBorad குழு அப்படியே கலச்சுருங்க.. சும்மா மக்கள் காசில் அரசு வேலை பார்க்கிறேன் என்ற பெயரில் திராவிட கட்சிகளுக்கு சலாம் போட்டு வாழும் இந்த அரசு ஊழியர்கள் மாநில பாடத்திட்டத்தில் செய்த சாதனை
"பெரியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கபட்டார்; அண்ணா என்று மக்களால் அன்புடன் அழைக்கபட்டார்....." இரு திராவிட புராணத்தை பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களை படிக்கவைத்தது தான்.. தான் செய்யாத அனைத்து சாதனைகளும் திராவிட கொள்கை மூலமே நடந்ததாக உண்மையை திரித்து மாணவர்களை படிக்கவைத்தது தான் இவர்கள் செய்த சாதனை எனக்கு தெரிந்து.
போராட்டங்கள்???
போராட்டம் நடத்துங்கள்
"Tamil Nadu State Board மொத்தமாக கலைத்துவிட்டு CBSE Bord உடன் இணைக்க சொல்லி போராடுங்கள்". நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக இன்று போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பது மாணவர்களை நாசம் செய்யும் வேலை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
உண்மையல் என் வேதனை என்னவென்றால் :
இறந்த உடலை வைத்து இன்று அரசியல் வாதிகள் ஒருபக்கம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்; சினிமா பிரபலங்கள் தாங்கள் பிரபலமாக இருக்கும் வரை தான் தங்களுக்கு பணம் சம்பாரிக்க முடியும் என்று புத்திசாலி தனமாக நான் நல்லவன் என்று இந்த இறந்த உடலில் விளம்பரம் தேடுகிறார்கள் ; பிரிவினை வாதிகள் ஆகா அனிதா கிடைத்துவிட்டாள் எடுத்து மாட்டி இதையே ஒரு பிராண்டாக பயன்படுத்தி குழப்பி பிரிவினை தூண்டுகிறார்கள்.
மாணவர்கள் எதிர்காலம் , கல்வி தரம் பற்றி அக்கரை கொண்டவன் எல்லாம் வேடிக்கை பார்க்கவேண்டி உள்ளது. ஏதாவது சொன்னால் நீட் தேர்வுக்கு ஆதரவாளன் தான் அனிதா சாக காரணம் என்று சொல்லிவிடுவர் என்று எல்லோரும் பின்வாங்குகிறார்கள்.
சரி எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்???
இப்போ எவன் சார் இங்கே எழுத்தாளன்??? கமலாதாஸ் போல நேர்மை யாருக்கு இப்போ இருக்கு??
விகடன் , தி ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை எதற்கு பகைத்து கொள்வானேன். அவர்கள் காட்டிய அடையாளம் தானே எழுத்தாளன் என்ற பிரபலம். எனவே நாம் எதற்கு பேசிக்கொண்டு என்று ஒழுங்கி கொள்ளும் கூட்டமாக தானே இருக்கிறார்கள்.
எல்லோரும் CBSE பள்ளி தேடி பிள்ளைகளை சேர்க்க போவது நிச்சயம்.... இந்த கூட்டத்தை நம்பி ஏமாற போவது ஒன்றும் அறியாமல் உணர்சிவச பட்ட ஏழைகள் தான்.
இறுதியாக:
இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் 2010ல் கைதானது நியாபகம் இல்லையா அனைவருக்கும்??? எல்லோரும் மறந்து விட்டீர்களா?
அவரிடம் இருந்து 1,800 கோடி ரொக்கமாகவும், 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது மறந்துவிட்டதா மக்களுக்கு... அது எப்படி ???? எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் வாங்கி குவிக்கும் ஆயிரம் கோடிகள் கொட்டும் பொது எல்லாம் இந்த பிரச்சனை தெரியவில்லையா இந்த போராளிகளுக்கு, திமுகாவுக்கு??
இன்று மோடி மொத்தமாக அனைத்தையும் பொது கவுன்சிலிங் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றதும் அனைத்து மருத்துவ கல்லூரிகளும் அய்யோ அய்யோ என்று டொனேசன் மூலம் பணம் சம்பாரிக்க மாற்று வழி தேட தமிழகத்தில் இருக்கவே இருக்கு ஒரு டஜன் போராளிகள் ஆரம்பித்து விட்டனர் போராட்டத்தை.
நான் மாரிதாஸ் , நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த முடியாது. . . . எனக்கு அப்படி ஒன்றும் நல்லவன் என்ற பட்டம் தேவை இல்லை.
ஒட்டுமொத்த educational system விவரமும் நான் பேச தயார்.. டெல்லி பேராசிரியர் அல்ல மொத்த கம்யூனிஸ்ட் கட்சியும் வந்தாலும் நான் விவாதம் செய்ய தயார். இங்கே கல்வி தரம் பேசினால் அண்ணா யுனிவெர்சிட்டி தான் முதலில் இழுத்து மூடிவிட்டு செல்லவேண்டி வரும்.
பள்ளிகூடம் நடத்துறேன் பேர்வழி என்று அரசு பள்ளி மாணவர்கள் தரத்தை கெடுத்தனர். இன்ஜினியர் ஆகுறேன் என்று அண்ணா யுனிவெர்சிட்டி மூலம் பல ஆயிரம் பேர் வாழ்வை கெடுத்தனர். இப்போ என்ன சாதித்துவிட்டனர் என்று மருத்தவ படிப்பையும் கெடுக்க திராவிட அரசியல்வாதிகள் வாய் கூசாமல் போராடலாம் வாருங்கள் என்கிறார்கள்??? வெக்கமே கிடையாதா?
மாணவர்கள் போராளிகளை நம்பாமல் புத்திசாலிகளை நம்புங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக