வியாழன், 28 செப்டம்பர், 2017

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு



பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு

பெங்களூரு மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டார்.

*நெல்லையை சேர்ந்தவர்*

பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று(செப்.,28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர். மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் போட்டியிட்டார். அவருக்கு சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்தன. அவர் 139 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் பிஜே ஹல்லி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர். திருநெல்வேலியை சேர்ந்த சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மேயராக பதவியேற்க உள்ளார்.

துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வானார்.இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ஜ.,வினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக