வியாழன், 30 நவம்பர், 2017

உலனின் 8வது அதிசயம் ஒரே முகத் தோற்றம் கொண்ட வெவ்வேரறு இடத்தைச் சார்ந்த 28 மனிதர்கள்



உலனின் 8வது அதிசயம் ஒரே முகத் தோற்றம் கொண்ட வெவ்வேரறு இடத்தைச் சார்ந்த  28 மனிதர்கள்

நாள்.1.12.2017 அணைகளின் நீர் மட்ட விபரம்.


நாள்.1.12.2017  அணைகளின் நீர் மட்ட விபரம்...

*பாபநாசம் காரையார் அணை:*

* உச்ச நீர் மட்டம்: 143.00 அடி
* இன்றைய மட்டம்:129.10அடி
* நீர் இருப்பு : 4657.90மி.க.அடி
* நீர் வரத்து: 24359.56 கனஅடி
* நீர் வெளியேற்றம்: 5765.69 க.அடி
                 
*சேர்வலாறு அணை:*
 
* உச்ச நீர் மட்டம்: 156.00 அடி* இன்றைய மட்டம்147.14அடி
* நீர் இருப்பு 1053.65
 மி.க.அடி
                                 
*மணிமுத்தாறு அணை:*

* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
* இன்றைய மட்டம்104.25அடி
* நீர் இருப்பு: 4176.25 மி.க.அடி
* நீர் வரத்து: 14155 க.அடி
* நீர் வெளியேற்றம்: இல்லை

*கடனாநதி அணை:*

* உச்ச நீர் மட்டம்: 85.00 அடி
* இன்றைய மட்டம்:83.50 அடி
* நீர் இருப்பு: 318.24
 மி.க.அடி
* நீர் வரத்து7385க.அடி
* நீ‌ர் வெளியேற்றம்:7385 க.அடி
 
*இராம நதிஅணை:*

* உச்ச நீர் மட்டம்: 84.00 அடி
* இன்றைய மட்டம்:82.00அடி
* நீர் இருப்பு:109.60 மி.க.அடி
* நீர் வரத்து:592.75 க.அடி
* நீர் வெளியேற்றம்: 35க.அடி

*_மழை அளவு:_*

* பாபநாச மேல் அணை : 451மிமீ
* சேர்வலாறு:192மிமீ
* கீழணை : 234மிமீ                                    
  *அம்பாசமுத்திரம்:103மிமீ
* மணிமுத்தாறு.378.6 மிமீ
* கல்லிடை: 94.2 மிமீ
* சேரை:62மிமீ
* கடனாநதி அணை: 160 மிமீ
* இராமநதி அணை:92.மி மீ

எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...


எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...

தூத்துக்குடி எச்சரிக்கை
தூத்துக்குடிக்கு 2 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிக்கு 50 முதல் 60 கீலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  என தகவல் வெளியாகியுள்ளது தூத்துக்குடி வ.உ.சி தூறைமுகத்தில் 3ஆம் என் புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

எப்போது ஏற்றப்படும், அதற்கான விளக்கம்:

*1-ம் எண்* எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

*2-ம் எண்* எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

*3-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

*4-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

*5-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

*6-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

*பெரிய அபாயம்*

*7-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

*8-ம் எண்* புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

*9-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் , துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

*10-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

*11-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுவது தான் அதிகபட்ச எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடப்பட்டால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என அர்த்தமாகும்.

தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது - வானிலை மையம் எச்சரிக்கை...


தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது - வானிலை மையம் எச்சரிக்கை...

தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் விடுமுறை
திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, ராமநாபுரம், மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
 

புயலாக மாற வாய்ப்பு
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளுக்கப்போகுது மழை
குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக, தென் கேரள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

பலத்த காற்று வீசும்
இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்
கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. புயல் காரணமாக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

புதன், 29 நவம்பர், 2017

நடிகர் சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! அம்மு முதல் அம்மா வரை….




  நடிகர்   சோபன் பாபுவுடன்  ரகசிய  உறவு!! அம்மு முதல் அம்மா வரை….

1979. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன.

மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று சொன்னதால்தான் கருணாநிதி என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார் என்று அடிக்கடி பேசியிருந்த எம்.ஜி.ஆருக்கு மதுவிலக்கு என்கிற முக்காடு ரொம்ப நாளைக்கு கை கொடுக்காது என்ற யதார்த்தம் புரிந்தது.

மதுவிலக்கைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் ஒரே கொள்கைதான் என்று கிண்டலடித்தது ஒரு துக்ளக் கட்டுரை. எழுதியவர்  ஜெயலலிதா.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜெயலலிதா. இடைப்பட்ட காலத்தில் ஏதேதோ நடந்திருந்தது.


‘டாக்டர் பாபு ’ வில் நடித்ததில் சோபன் பாபு பழக்கமாகியிருந்தார்.

சோபன் பாபுவைத் திருமணம் செய்துகொண்டு , ஜெயலலிதா ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகச் சில செய்திகள்.

சோபன் பாபுவுடன் நல்ல புரிந்துணர்வு   இருப்பதாக வெளிப்படையாக ஜெயலலிதாவே ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

‘ ஆந்திரா அந்தகதா ’, ஆந்திராவின்  கவர்ச்சிகரமான மனிதர் என்று அழைக்கப்பட்ட சோபன் பாபு , எழுபதுகளில் தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஸ்டார்.

என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் படங்களில் இரண்டாவது ஹீரோவாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு, ஒரு சில வருடங்களிலேயே  முன்னணி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு  சினிமாவில் அதிகமாக விருதுகள் வாங்கிய பெருமை சோபன் பாபுக்கு உண்டு.

ஜெயலலிதாவுடன் ‘ டாக்டர் பாபு ’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயலலிதா எழுத்தாளர் அவதாரம் எடுத்தார்.

முன்னாள் நடிகை தன்னுடைய சினிமா அனுபவத்தைத்தான் எழுதுவார் என்று எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில் ஜெயலலிதா எழுதியது , நடப்பு அரசியல் பற்றி!

துக்ளக்கில் ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

முதல் வாரத்தோடு தமிழ்நாட்டு அரசியலை தவிர்த்துவிட்டு மற்ற விஷயங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார்.

இந்திய டாக்டர்களின் அலட்சியம் , கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம் , ஜோஸ்யத்தின் சாத்தியம் என எல்லாமே கனமான விஷயங்கள்.

திரும்பவும்  சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது ஜெயலலிதாவுக்கு.

‘ கிருஷ்ண லீலா ’, ‘ தேவன் கோயில் மணியோசை ’, ‘ கண்ணகியா , மாதவியா ’, ‘ மாற்றான் தோட்டத்து மல்லிகை ’ என்று ஒரு டஜன் படங்களில்  நடிப்பதாக   அறிவிப்புகள்.

அவற்றில் பாதிகூட வெளிவரவில்லை.

கிடைத்ததெல்லாம் அக்கா , அண்ணி , அம்மா வேடங்களே. கதை , பாத்திரம் பற்றியெல்லாம் ஏகப்பட்ட கேள்வி கேட்டுத் திருப்தியாக இருந்தால்  மட்டுமே ஒப்புக்கொண்டார்.


கதாநாயகன்கூட  அறிமுகமானவராக இருக்கவேண்டும்.

கதாநாயகனை   நேரில் பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது , ஒரு பழைய ஸ்கூட்டரில்  போயஸ் தோட்டம்  வீட்டுக்கு வந்திறங்கியவர் ரஜினிகாந்த்!

1980. ராணி சீதை ஹாலில் ஆர்.எம்.வீ. தலைமையில் ஒரு நடன அரங்கேற்றம்.

விழாவுக்கு  ஜெயலலிதாவும் வந்திருந்தார். கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் ஆர்.எம்.வீ. ஜெயலலிதா சந்திப்பு.

பழசை மறந்து ஜெயலலிதாவை பாராட்டிப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்த ஆர்.எம்.வீ.க்கு எம்.ஜி.ஆரிடமிருந்து போன்.

‘ என்ன , ரொம்பப் பாராட்டினீர்களாமே ?’ ‘ யாரைச் சொல்றீங்க ? புரியலையே! ’ ‘ அம்முவைத்தான்.

பாராட்டெல்லாம் ஜாஸ்தியா இருந்துச்சாமே!’ ‘ யார் உங்களுக்குச் சொன்னாங்க ?’ ‘ அம்முதான் சொன்னது! ’

ஆர்.எம்.வீ. அதை எதிர்பார்க்கவேயில்லை. திரும்பவும் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஜெயலலிதா!

ஜனவரி 4, 1981. மதுரையில்   உலகத் தமிழ் மாநாடு. நாட்டிய    நிகழ்ச்சிக்காக ரயிலில் தனது குழுவினரோடு வந்திருந்தார் ஜெயலலிதா.

முதல் நாள் , ராஜா முத்தையா ஹாலில் ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி. எம்.ஜி.ஆரால் வரமுடியவில்லை.

அவர் சார்பாக ஜானகி வந்திருந்தார். அடுத்த நாள் காலை இன்னொரு நாட்டிய நிகழ்ச்சி. அதற்கும் எம்.ஜி.ஆர். வரவில்லை.

எம்.ஜி.ஆர். வந்தே ஆகவேண்டுமென்றார் ஜெயலலிதா. ஒருவழியாக அரைமணி நேரம் தாமதமாக எம்.ஜி.ஆரும் வந்துசேர்ந்தார்.

கருணாநிதிக்கு  ஒரு குங்குமம் பத்திரிக்கை இருப்பதுபோல தனக்கொரு பத்திரிக்கை வேண்டுமென்று எம்.ஜி.ஆர். நினைத்தார்.

‘ தாய் ’ ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆசிரியர் வலம்புரி ஜான்.

துக்ளக் , குமுதம் பத்திரிகைகளில் எழுதியது போல , தாய் பத்திரிகையிலும் ஜெயலலிதா எழுத ஆரம்பித்தார்.



எழுத்தாளர்
‘ எனக்குப் பிடித்தவை ’ என்கிற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை எனக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எழுதினார்.

தாய் பத்திரிகையில் முக்கிய எழுத்தாளராக ஜெயலலிதா இருந்தபோது நடந்த அந்தச் சம்பவம், எம்.ஜி.ஆரை அதிருப்தியடையச் செய்திருந்தது.

சம்பவம் நடந்தது சென்னைப் பல்கலைக்கழக அரங்கத்தில். தமிழ் சினிமாவின் பொன்விழா.

விழாவின் பாதி நிகழ்ச்சிகளை ஜெயலலிதாவும் மீதியை சௌகார் ஜானகியும் தொகுப்பதாக ஏற்பாடு.

ஒரு வாரமாக   ஒத்திகை செய்துவிட்டு , தன்னுடைய முறைக்காகத் தயாராக இருந்த சௌகார் ஜானகிக்கு ஏமாற்றம்.

மறு பாதியையும் ஜெயலலிதாவே தொகுத்து வழங்கினார்.

கோபமான சௌகார் ஜானகி அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்ய , பத்திரிகைகளுக்குப் பரபரப்பான செய்தி கிடைத்தது.

சௌகார் ஜானகி வெளிநடப்புச் செய்தது தவறு என்று ஜெயலலிதா பேட்டி கொடுக்க , எம்.ஜி.ஆருக்குக் கோபம்.

காரணம், ஜெயலலிதா பேட்டி கொடுத்திருந்தது குங்குமம் பத்திரிகைக்கு.

பிறகு எம்.ஜி.ஆரை சுலபமாகச் சமாதானம் செய்துவிட்டார் ஜெயலலிதா.

ஏதாவது ஒன்றைச் செய்து தமிழக மக்களைத் தன்னோடு இணைத்துக் கட்டிப்போட விரும்பினார் எம்.ஜி.ஆர்.

இதற்காக  அவர் கொண்டுவந்த திட்டம் , சத்துணவு. நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பமான சத்துணவுத் திட்டம் , சூப்பர் ஹிட்.

இந்தச் சமயத்தில்தான் அரசியலில் தடம் பதிக்க எம்.ஜி.ஆரிடம் அனுமதி கோரினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்கும் அப்போது கருணாநிதியின் தாக்குதலைக் கூட்டாக எதிர்கொள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமான முகங்கள் தேவைப்பட்டன.

அ.தி.மு.கவின்   அரசியல் கொள்கையை விளக்கும் 29 பக்க அண்ணாயிஸம் கையேட்டை கொடுத்து படித்துவிட்டு வரச் சொன்னார்.



ஜூன் 4, 1982 அன்று கட்சிக்கு ஒரு கவர்ச்சி முகம் கிடைத்தது.

ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி எம்.ஜி.ஆரிடமிருந்து உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு , கட்சியில் சேர்ந்தார் ஜெயலலிதா.

நான்கே மாதத்தில் கடலூரில் கட்சி மாநாடு. அலங்கார வளைவுகள் , கொடிகள் , தோரணங்கள் , போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாகச் சிரித்துக் கொண்டிருந்தன ஜெயலலிதாவின் கட்அவுட்டுகள்.

மாநாட்டில் பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசிய ஜெயலலிதா , தான் கட்சியில் சேர சத்துணவுத் திட்டமே காரணமென்றார்.

ராமனுக்கு அணில் போலக் கட்சிப்பணி செய்யப் போவதாகச் சொன்னார்.

17.10.82. அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டு அன்றோடு பத்தாவது ஆண்டு விழா.

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம்.

கறுப்பு கலரில் ரவிக்கை, அரக்கு சிவப்பில் ஜரிகை போட்ட பட்டுப்புடைவையில் ஜெயலலிதா.

எல்லோரும்   பேசி முடித்த பின்னர் கடைசியாகத்தான் மைக்கைப் பிடித்தார்.

தொகுதியில் கட்சியை வளர்த்த உண்மையான , அடிமட்டத் தொண்டர்களின் பெயர்களைச் சொல்லி முடித்துவிட்டு , நேராகக் கழக அரசியலுக்கு வந்துவிட்டார்.



தெடர்புடைய செய்தி

ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்

jaya  ஆந்திரா  நடிகர்   சோபன் பாபுவுடன்  ரகசிய  உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. )

1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா!

அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!


ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது. thanks -ILAKKIYAINFO

சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி... ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback


சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி... ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback


*ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை நானே என பெங்களூரு அம்ருதா நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார்.* *ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவும், ஆம் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது; 1980-ல் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்க்கும் போது நான் உடனிருந்தேன் என அதிர குண்டை வீசியுள்ளார்.*
*அம்ருதா யார் என்பது பிறகு இருக்கட்டும். ஆனால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவு என்பது உலகம் அறிந்ததுதான். புதிதாக அதில் ஏதும் இல்லை.*
*ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் இடையேயான உறவு என்பதை முதலில் உறுதி செய்வதாக சுட்டிக்காட்டப்படுவது 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் "மனம் திறந்து பேசுகிறேன்" என்கிற தொடர்தான்.*

*அத்தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு.*

*இது பற்றி 1984-ம் ஆண்டு தி வீக் இதழில் மூத்த பத்திரிகையாளர் பகவான்தாஸ் எழுதியிருப்பதாவது: குமுதம் இதழில் தமது வாழ்க்கை வரலாற்றை ஜெயலலிதா பகிர்ந்து கொள்ள தொடங்கியது பலரது புருவத்தை உயர்த்த வைத்தது. ஜெயலலிதாவின் தொடர் குறித்து வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அந்த விளம்பரத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஒன்றும் சீதையோ அல்லது சாவித்திரியோ அல்ல. என்னுடைய வாழ்க்கையில் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது பற்றி அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நீங்கள் படித்து பார்த்து முடிவுக்கு வாருங்கள்" என்பதுதான் ஜெயலலிதாவின் விளம்பர வாய்ஸ். இவ்வாறு பகவான்தாஸ் பதிவு செய்துள்ளார்.*



*1998-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் குமுதம் தொடர், சோபன்பாபு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த வலம்புரிஜானை மேற்கோள்காட்டி மற்றொரு தகவலையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் பதிவு செய்துள்ளார். அதில், 1970களில் எம்ஜிஆர் ஜெயலலிதா அல்லாமல் வேறு ஹீரோயின்களை தேர்வு செய்தார். ஜெயலலிதாவும் அப்போது தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் நட்பாக இருந்தார். பின்னர் 1981-ல் தான் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்தார். ஜெயலலிதாவை எம்ஜிஆர் தொடர்ந்து வேவு பார்த்து வந்தார் என பதிவு செய்திருக்கிறார்.*


*1999-ம் ஆண்டு இந்தியா டுடேயில் மூத்த பத்திரிகையாளர் வாசந்தியும் ஜெயலலிதா- சோபன் பாபு உறவு பற்றி சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.*

*1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு - 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.* *ஜெயலலிதா! அதற்கு முன்பு - அவர் சில வருட காலம் - ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த - சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்! சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்' வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, " நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்" - என்று பதிலளித்தார். அப்படியானால் - " உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?"- என்று ‘குமுதம்' நிருபர் கேட்டார்.*


*'திருமணம் செய்து கொண்டால் தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.* *நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்" - என்றார் ஜெயலலிதா! 'குமுதம்' நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? " சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?" இது கேள்வி! ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! " அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்" கடைசியாக ஒரு கேள்வி - " இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?" ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் " கோயிங் ஸ்டெடி!" - குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி' என்று தலைப்பிட்டு... சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது - பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா' காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.*

*ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது,* *நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.*
*இவ்வாறு முரசொலி பதிவு செய்திருந்தது.*


MATHI NEWS தற்போதைய செய்தி

MATHI NEWS தற்போதைய செய்தி

Wednesday, 29 Nov, 7.40 pm

*ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை.. ஜெ. அத்தை மகள் லலிதா திடுக் தகவல்
 * தன்னுடைய பெரியம்மாதான் ஜெ.வுக்கு பிரசவம் பார்த்ததாக உறவினர் லலிதா பரபரப்பு தகவல்
 * மோடியின் கூட்டத்திற்கு மக்கள் வருகை குறைவு! ‘குஜராத் மகனை காண வாருங்கள்’ என பிரசாரம்
* ஆர்.கே.நகர் இறுதி வாக்காளர் பட்டியல் டிச.4-ம் தேதி வெளியிடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
 * ஆர்.கே நகர் இடைத்தேர்தல் -அ.தி.மு.க. வில் மதுசூதனன் , பாலகங்கா, கோகுல இந்திரா உள்பட 20 பேர் விருப்பமனு தாக்கல்
 * சத்யம் சினிமாஸ்க்கு சொந்தமான தியேட்டர், வீடு, அலுவலகங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை
* சசிகலா குடும்பத்தினர் வருமான சோதனைக்கும் சத்யம் சினிமாசில் நேற்று நடந்த சோதனைக்கும் தொடர்பு இல்லை வருமானவரி அதிகாரிகள் மறுப்பு
* மார்க் குழுமம், ஸ்பெக்ட்ரம் திரையரங்கு உட்பட தமிழகம் முழுவதும் 33 இடங்களில் வருமான வரி சோதனை
* சென்னையில் வியாழக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும்..
சொல்கிறது நார்வே வானிலை மையம்
 * ஆர்.கே.நகர் வங்கிகளில் டெபாசிட்டாகும் பணம்.. கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
 * குஜராத் தேர்தல்: காற்று வாங்கும் மோடி பிரசார கூட்டங்கள்.. ஷாக்கான பாஜக.. மக்களை அழைத்துவர படாதபாடு
 * சர்சைகளுக்கு முடிவுகட்ட முயற்சி : நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடை
 * ஊடக விவாதங்களில் பங்கேற்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும்- அ.தி.மு.க
 * சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: பிரதமர் மோடி - இவாங்கா டிரம்ப் சந்திப்பு
 * குஜராத்தில் படேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது: ரவிசங்கர் பிரசாத்
 * 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி 4 வருடங்கள் பலாத்காரம் செய்த நண்பர்கள்.. 3 முறை கருக்கலைப்பு.. சென்னையில் ஷாக்
 * கட்அவுட் கலாச்சாரத்தை ஆரம்பித்ததே திமுகதான்.. மறக்கமுடியுமா? தமிழிசை சரமாரி சாடல்
* ரஜினி, கமல், விஜய்... திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி - நியூஸ் 7 டிவி சர்வே
* நாடு முழுக்க பன்னாட்டு குளிர்பான விற்பனையில் பலத்த அடி.. ஆரம்பித்து வைத்த தமிழகம்
 * தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை திறக்க ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை
 * பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம்... எல்ஐசி எச்சரிக்கை
 * ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம்: டிடிவி தினகரன்
* ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணை அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல்- நீதிபதி ராஜேஸ்வரன்
* சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 6 நீதிபதிகள் நியமனம்
 * ஆர்.கே.நகர்: அதிகளவு மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள் கண்காணிப்பு
 * புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை: பாமகவின் ஆலோசனைகளை உதயசந்திரனிடம் வழங்கினார் அன்புமணி
 * ரஜினியின் '2.0' இணைய ஒளிபரப்பு உரிமையை பெற்றது அமேசான் பிரைம்
 * ஆதி திராவிடர் - சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: மாயாவதி
 * தெலுங்கானா: ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் சேவைவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
 * இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் உயர்த்த வீராட் கோலி பேச்சு வார்த்தை
* பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
 * தற்போது அஸ்வின்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்: முரளிதரன்
 * காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்
 * தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை: வானதி சீனிவாசன்
 * ஜெயலலிதா மகள் என்று அம்ருதா பொய் சொல்கிறார்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
* சர்வதேச நீதிபதி தேர்தலில் தோல்வி: ஐ.நா. தூதரை அதிரடியாக மாற்றியது பிரிட்டன்
 * மணல் கொள்ளை மாஃபியா சேகர்ரெட்டி மீது நடவடிக்கை தொடரும் - அமலாக்கத்துறை
* சிறப்பு மருத்துவர்கள் நியமன முறைகேடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
 * செவிலியர்கள் போராட்டம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர் விஜயபாஸ்கர்
 * ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்போம்; யாருக்கும் ஆதரவு கிடையாது- விஜயகாந்த்
 * ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு அனுசரிக்க தடைகோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
 * போராட்டம் நடத்தும் செவிலியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்
* போராடும் செவிலியர்களை அடைத்து கழிவறையைப் பூட்டி வைப்பதா?- திமுக வேடிக்கை பார்க்காது: ஆர்.எஸ்.பாரதி
 * திருவள்ளூரில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்... எப்போது ஒழியும் இந்த அவலங்கள்
 * குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்
 * கோயம்பேடு சந்தையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆய்வு
 * செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
 * பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!
 * டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் மேலும் 2 பேர் எடப்பாடி அணிக்கு தாவல்!
 * எந்த அணியிலும் இல்லாத நான் எப்படி அணி மாற முடியும்?- நவநீத கிருஷ்ணன் எம்.பி. கேள்வி
 * டீ விற்ற மோடியின் இந்த வளர்ச்சி வியப்பளிக்கிறது.. ஹைதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பேச்சு!
* தெருநாய்களுக்கு விஷம்.. பாலத்திற்கு பெயிண்ட்.. அறிவிக்கப்படாத 144.. டிரம்ப் பொண்ணுனா அவ்ளோ பயம்
* ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி.. தமிழிசை திட்டவட்டம்
* கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மீது மேலும் ஒரு வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை
 * கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – பத்திரிக்கைத்துறையினர் கடும் எதிர்ப்பு
 * பத்திரிக்கையாளர்கள் மீதான தமிழக அரசின் அடக்கு முறைக்கு தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
 * மிலாது நபியை முன்னிட்டு டிச., 2ல் 'டாஸ்மாக்' விடுமுறை
* பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டவில்லை போக்குவரத்து ஊழியர்கள் டிச.12 முதல் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு
 * செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் ஆபத்து: ஐ.ஐ.டி. பேராசிரியர் எச்சரிக்கை
 * குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து பத்மாவதி படத்தை வெளியிட பீகாரிலும் தடை
* தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமனம்
* தயாரிப்பாளர் தற்கொலை வழக்கு -அன்புச்செழியன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு
 * ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் கேட்கும் சுயேச்சை வேட்பாளர்கள் – தினகரனுக்கு நெருக்கடி
* ஹாதியாவை அவருடைய கணவர் சந்திக்க முடியாது பாதுகாவலராக நியமிக்கப்பட்ட கல்லூரி டீன் பேட்டி
* டிசம்பர் 4ம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
* நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
 * சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 * பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவம்: பிரதமர் மோடி
 * டெஸ்ட் தரவரிசை புஜாரா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

செவ்வாய், 28 நவம்பர், 2017

உலகமே இந்தத் தமிழனை (ஸ்ரீதரை) பாராட்டுகிறது!!



உலகமே இந்தத் தமிழனை (ஸ்ரீதரை) பாராட்டுகிறது!!


*நாமும் பாராட்டுவோமே!!*

தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான்!! தமிழன் கண்டுபுடிப்பு

*தயவு செய்து படித்துவிட்டு வெளிச்சம் பாயும் வேகத்தில் ஷேர் பண்ணவும் ..!!!*

*கே.ஆர். ஸ்ரீதர்* - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம்,

*"இவர் ஒரு தமிழர்"*

என்பதே!

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?

அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.

முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.

என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.

அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைவர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.

அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும்.

இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம்.

இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.

இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம்.

இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம்.

வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை.

கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு.

ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தைவாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.

'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.

வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.

தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது.

இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.

அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

நமது மத்திய மாநில அரசுகள் இவருடைய தொழில் நுட்ப அறிவியலை பயன் படுத்துமா என்பது .?இந்த தமிழனை பாராட்டுவோமே

தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

*தயவு செய்து படித்துவிட்டு மின்னொளி வேகத்தில் ஷேர் பண்ணவும் ..!!!*

2017 நவ.26: மன் கி பாத் நிகழ்சியில் பிரதமர் மோடி உரை ..



2017 நவ.26: மன் கி பாத் நிகழ்சியில் பிரதமர் மோடி உரை ...

*பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரை 26/11/17- அன்று!*

*நவம்பர் 26 : மும்பை தாக்குதல் தினமான இன்று பயங்கரவாதத்தை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்.*

*உலகின் சிறந்த கடற்படையாக சோழர் கடற்படை திகழ்ந்தது என இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.*

*மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக ரேடியோவில் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்று காலை 11 மணிக்கு மோடி உரையாற்றினார்.*

*மோடியின் மன் கி பாத் உரையை ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் நரேந்திர மோடி மொபைல் ஆப்பில் மக்கள் நேரடியாக கேட்க வழி வகை செய்யப்பட்டது*

*இது தவிர தூர்தர்ஷின் பிராந்திய மொழிகளிலும் மோடியின் உரை ஒலிபரப்பப்பட்டது. இதனிடையே மன் கி பாத் நிகழ்ச்சியை தேநீர் அருந்தியபடி பிஜேபி தொண்டர்கள் செய்த ஏற்பாட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.*

*இந்நிலையில் நவம்பர் 26/2017 மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:*

*அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் நினைவு கூற வேண்டும். சர்தார் வல்லபாய் படேலும், இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீனமானவர்களை காக்கிறது.*

*கடந்த 9 வருடங்களுக்கு முன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இன்றைய நாளில் தான் நடந்தது. உயிரிழந்த நமது ராணுவ வீரர்களை நாடு நினைவு கூர்கிறது.*

*அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்*

*நமது நதிகளும், கடலும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உலக நாடுகளுக்கு நுழைவு வாயிலாக உள்ளன. நமது நாட்டுக்கு கடலுடன் உடைக்க முடியாத உறவு உள்ளது. பெரும்பாலான கடற்படையில் பெண்களை தாமதமாக அனுமதித்தன என்பதை சிலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், 8 அல்லது 9 நூறாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் கடற்படை, உலகின் சிறந்த கடற்படையாக செயல்பட்டது. அதில், அதிகமான பெண்கள் முக்கிய பங்காற்றினர்.*

*கடற்படை பற்றி பேசும்போது சத்ரபதி சிவாஜியை மறக்க முடியாது. மராத்தா கடற்படையில், பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் இருந்தன. அவரின் கடற்படை எதிரிகளை தாக்குவதுடன், அவர்களின் தாக்குதலை முறியடித்தது.*

*இவ்வாறு அவர் பேசினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் முன்னாள் எம்பி


கடலூர் மாவட்டம் சிதம்பரம்  தமிழக காங்கிரஸ் முன்னாள் எம்பி

டாக்டர்  பா. வள்ளல் பெருமாள்  அவர்கள்  உயிரிழந்தார்.


*கடலூர் மாவட்டம் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி பா.வள்ளல்பெருமால் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.*

*இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருக்கு வயது (66), இவர் சிதம்பரம் தொகுதி பாரளுமன்ற உறுப்பினராக (1984, 1989, 1991) மூன்று முறை இருந்தார், 2001ம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ வாகவும் இருந்தார்.*

*ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.*

உலகளவில் காற்று மாசுபாடு - முதலிடத்தை பிடித்த இந்தியா.....!


உலகளவில் காற்று மாசுபாடு - முதலிடத்தை பிடித்த இந்தியா.....!

*சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்துக்கும கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலக இளவுஙர இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கண்டறிந்துள்ளது*

*கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் இருந்த சீனாவில், தற்போது அது 75 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது*

*ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது*

*கடந்த 2010ம் ஆண்டு, 2வமு இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா, தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

*உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. நிலக்கரியின் எடையில் சுமார் 3 சதவீதம் அளவுக்கு கந்தகம் உள்ளது*

*இந்த வேளையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது*

*கந்தக டை-ஆக்சைடு நச்சு காரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் பொதுமக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது*

*இந்தியாவில் 3.3 கோடி பேரும், சீனாவில் சுமார் 9.9 கோடி பேரும் கந்தக டை-ஆக்சைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது*

*குறிப்பாக 1952ம் ஆண்டு கந்தக டை-ஆக்சைடு காற்றில் பெருமளவு கலந்து மாசுபட்டதால், லண்டனில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது*

திங்கள், 27 நவம்பர், 2017

தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு உத்தரவு..


தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு உத்தரவு..

 விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர், ஏழையா, பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விபத்தில் சிக்குபவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கும் பணம் வசூலிக்கக்கூடாது என்றும் பினராயி விஜயன் கூறினார். .

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பவர்களின் உடலை பணத்தை கட்டினால்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*இந்தியாவிலேயே முதல் முறையாக உயிரை காக்க கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.*


வெள்ளி, 24 நவம்பர், 2017

25.11.2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் மாநில மாநாடு



இன்று விசிக வழக்கறிஞர் அணியின் முதல் மாநில மாநாடு..
~~~~~~~
இன்று 25.11.2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் மாநில மாநாடு  எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி இராம் ஜெத்மலானி, நீதியரசர் திரு
அரி.பரந்தாமன், எழுத்தாளர் சமஸ், எவிடென்ஸ் கதிர் ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர். இன்று மாலை 4 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களும் வழக்கறிஞர்களும் தவறாமல் பங்கேற்கவும்.

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.


வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.

வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.

ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.

கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.

நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.

கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.

இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த #பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட
இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது.

ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் #சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.

இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் #விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.

அப்போது,
1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,

2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,

3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து #நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது.

இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் #பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.

ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான்.

பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.

திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி #அலெக்ஸ்_ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்குள் ஓர் #இரகசியம்_ஒளிந்து இருந்தது.

வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் #ராஜினாமா செய்து ஓடினர்.

அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் #விற்று_விட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா #கப்பலை_வெள்ளையருக்கே_விற்று_விட்டது தான்.

இதனை அறிந்த வ உ சி...

"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.

பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார்
வ உ சி.

நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.

ஓங்கட்டும் உமது புகழ்.

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨24/11/17 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨24/11/17 !

தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்.

உடலுறுப்பு தானத்தில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.உடலுறுப்பு தேவைப்படுபவர்கள் டிரான்ஸ்டான் வலை வரிசையில் பதிவு செய்துகொள்ளலாம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

அரக்கோணம் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை.

கைரேகை வழக்கில் ஜெயலலிதாவின் ஆதார் அட்டையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு :
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது வைத்த கைரேகை தொடர்பான ஆவணங்களுடன் டிச.8ல் சிறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவு.

ஆர்கே.நகர் தொகுதியில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும், அகற்றவில்லை என்றால் விதிமீறல் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் : ஆணையாளர் கார்த்திகேயன்.

மாணவர்களுக்கான புத்தக பை கொள்முதல் டெண்டருக்கு தடை கோரிய வழக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

வார இதழில் இந்து தீவிரவாதம் என கமல் எழுதியதற்கு எதிராக காவல்நிலையத்தில் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவி அனிதா மரணம் தொடர்பாக டிச.12-ல் ஆஜராக தலைமை செயலர், டிஜிபி, அரியலூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் திருச்சியில் பேட்டி.

பிளஸ் டூ கல்வியோடு வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்தாண்டில் 3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மோடி துக்ளக் போல் செயல்படுகிறார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நடந்து வருகிறது - மம்தா பானர்ஜி.

ஆர்கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் : சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் மனு.

எம்ஜிஆர் நினைவுநாள் அன்று ஆர்கே. நகரில் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.ஆர்கே.நகர் வெற்றியை எம்ஜிஆர் , ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் : மைத்ரேயன்.

ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக கே.வேலுசாமி நியமனம்.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக முருகேசன், சிப்பிரமணியன் நியமனம்.

ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடுவேன் - டிடிவி.தினகரன்.

ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்துவிட்டது : பாமக நிறுவனர் ராமதாஸ்.

பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கவே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் அகற்றம் : இயக்குனர் கவுதமன்.

மீண்டும் வாய்ப்பளித்தால் ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் -அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துடனான சந்திப்புக்கு பின் மதுசூதனன் பேட்டி.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது - தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் அறிவிப்பு.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 30ம் தேதி கூடும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.போலி வாக்காளர்களை நீக்கியதுபோல் போலி அரசையும் நீக்க வேண்டும் - துரைமுருகன்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என ராகுல் காந்தி.

தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது - ஹர்திக் படேல்.

ஆர்கே. நகர் தேர்தலில்
டெபாசிட் இழப்பதில் திமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி ஏற்படலாம் - மைத்ரேயன்.

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கேசி.பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஹாடா வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழப்பு.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் காவல்துறை கூடுதல் ஐஜி. அஷ்ரப் நூர் உயிரிழப்பு.

திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் நடைபெற்றது சரத்குமார், ராதிகா உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்பு.

ஜெய்ப்பூரில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்து.

வேலூரில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தலைமையாசிரியர் ஞானசேகரன் கைது.

ஐதராபாத்தில் நவ.28 ஆம் தேதி சர்வதேச தொழிலதிபர்கள் மாநாடு: இவான்கா டிரம்ப் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு.

அறம் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது : திருநாவுக்கரசர்.

தற்கொலை செய்து கொண்ட சத்யபாமா பல்கலை. மாணவியின் பெற்றோர் நிர்வாகத்தின் மீது அளித்த புகாரை வாங்காமல் மாணவர்கள் மீது வழக்கு பதிவு.

விருதுநகர் : சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஆணை.

நாச்சியார் திரைப்பட டீசர் விவகாரம் : இயக்குநர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு.

திண்டுக்கல் : துப்புரவுப் பணியாளர்கள் 3பேர் வெட்டிப் படுகொலை.

லக்னோ உயிரியல் பூங்காவில் 17 வயது ஆண் புலி ஆர்யான் உயிரிழப்பு : ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாஸ்மாக், மணல் குவாரிகளைப் போன்று சினிமாத்துறையையும் அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது ? - நடிகர் கருணாஸ்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால் தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

வரும் ஜனவரி ஒன்றுமுதல் ஒரு நபருக்கு ஒரு வங்கிகணக்கு மட்டுமே

வரும் ஜனவரி ஒன்றுமுதல் ஒரு நபருக்கு ஒரு வங்கிகணக்கு மட்டுமே ...

அது எந்த வங்கியில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்., ஆனால் ஒரே ஒரு சேமிப்பு கணக்குமட்டும்தான் ஒருவருக்கு.

எந்த வங்கியிலிருந்தும் எந்த வங்கிக்கும் எப்போது வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ளலாம். (சொந்தகாரன் பேர்ல வேலைக்காரன் பேர்லல்லாம் வங்கி கணக்கு தொடங்கி பணம் போட்டவன்லாம் செத்தான்)

பணபரிவர்த்தணைகளை குறைத்து வங்கிமூலம் பரிவர்த்தனை செய்யவைப்பதின் மூலம் பெரும்பாலானவர்களை வருமானவரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏடிஎம் மிசின்களில் அட்டையை நுழைப்பதற்கு பதிலாக கைவிரல்ரேகை மூலம் பணம்பெறும் வசதி வருகிறது.

செக்வசதி முற்றிலும் நிறுத்தபட இருக்கிறது.

முழுவதும் இணைய பரிமாற்றம்தான்.
ஒரு நிறுவனத்துக்கு ஒரே ஒரு நடப்பு கணக்கு மட்டும்தான் ...


அடுத்த ஆப்பு...... மோடி சர்கார்

வியாழன், 23 நவம்பர், 2017

உடுமலைபேட்டை ஆணவக் கொலை பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு தேசத்திற்கான சாபம் இந்த சாதி முறை



உடுமலைபேட்டை ஆணவக் கொலை பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு
தேசத்திற்கான சாபம்  இந்த சாதி முறை
=====================================

உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த சங்கர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரின் காதல் மனைவி கௌசல்யா உயிருடன் பிணமாக வாழ்கிறார். சமீபத்திய பரபரப்புகளில் மூழ்கிப்போன தமிழகம், நேற்று வெளியான ஒரு தீர்ப்பைக் கவனிக்கவில்லை.

படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கவனிக்கப்பட வேண்டிய அந்தத் தீர்ப்பை எழுதியவர் நீதிபதி எஸ். வைத்தியநாதன் என்பவர்.

விடுவிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி எழுதிய வரிகளில் மிக முக்கியமானவை கீழே:

''மிக முக்கியமான மாறிச்செல்லும் கட்டத்தை நமது தேசம் கடந்துகொண்டிருக்கிறது. (அதுபோன்ற சூழலில்) மிக முக்கியமான பொது நலன் குறித்த இதுபோன்ற வழக்கில் நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது. தேசத்திற்கான சாபம் இந்த சாதி முறை. அதனை எத்தனை விரைவாக அழித்து முடிக்கிறோமோ அத்தனை நல்லது. தேசத்தின் முன்னுள்ள சவால்களைச் சந்திப்பதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சூழலில், சாதி தேசத்தைப் பிளவுபடுத்துகிறது. சாதிகளைக் கடந்து திருமணம் செய்வது சாதியை அழிக்கிறது என்பதால், சாதி கடந்த திருமணங்களின் தேசத்தின் நலனுக்கானவை. இருந்த போதும் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொந்தரவு தரும் செய்திகள் வருகின்றன. சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த இளைஞர்களும் இளம் பெண்களும் வன்முறையால் மிரட்டப்படுகிறார்கள் அல்லது வன்முறைக்கு ஆளாகிறார்கள். எமது கருத்தில் மேற்படி வன்முறைச் செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை. அதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வயதுக்கு வந்த எந்தவொருவரும் தனது தேர்வுப்படி எந்த ஒருவரையும் மணக்கலாம்.”

நீதிபதி மேலும் முன்சென்று, ‘நாட்டில் வயதுக்கு வந்த ஒருவர் தன் சாதி, மதத்தைக் கடந்து திருமணம் செய்ய விரும்பினால் அவர்களை யாரும் துன்புறுத்தக் கூடாது. வன்முறைக்கு ஆளாக்கக் கூடாது. அதுபோன்ற செயல்களைக் குற்றச் செயல்கள் என்று கருதி துன்புறுத்துவோரை/ வன்முறையை ஏவுவோரை தண்டிக்க வேண்டும். இதனை நிர்வாகமும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்’ எனறும் நீதிபதி குறிப்பிட்டார்.

 இதுபோன்ற கருத்துகளை துணிந்து பதிவு செய்த நீதிபதியைப் பாராட்டுவோம்.

நமிதா-வீரேந்திரா திருமணம் இன்று காலை திருப்பதியில் நடைபெற்றது. 24-11-2017.


நமிதா-வீரேந்திரா திருமணம் இன்று காலை திருப்பதியில் நடைபெற்றது.
24-11-2017.

MATHI FLASH NEWS

MATHI  FLASH NEWS..


👉🏻 *ஆர்கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு* !

👉🏻 *ஆர்கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது*

👉🏻 *வரும் 27ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்*

👉🏻 *டிசம்பர் 4ம் தேதி கடைசிநாள்*

👉🏻 *டிசம்பசர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை*

👉🏻 *தேர்தல் ஆணையம் அறிவிப்பு*



MATHI NEWS செய்திகள்@23/11/17

MATHI NEWS செய்திகள்@23/11/17

2018 ஜனவரி.1-ம் தேதி முதல் ஸ்மார்ட் போன்களில் ஜி.பி.எஸ். கட்டாயம்

அ.தி.மு.க.வை உடைத்து விடலாம் ஆட்சியைக் கலைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சம்மட்டி அடி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

டாஸ்மார்க் பார் டெண்டருக்கு எதிரான வழக்கு: உரிமையாளர்கள் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

காசோலை நடைமுறையை திரும்ப பெறும் திட்டம் கிடையாது - மத்திய நிதி அமைச்சகம்

வியாபம் வழக்கில் 592 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

தேர்வில் காப்பி: நிபந்தனை ஜாமினில் வெளி வந்தார் ஐ.பி.எஸ் அதிகாரி

சென்னை: விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

செய் அல்லது செத்துமடி என்ற போராட்டத்தை விவசாயிகள் தொடங்க வேண்டும் அன்னா ஹசாரே வலியுறுத்தல்

அகமதாபாத் ரெயில்வே நிலையத்தில் மர்ம பொருள் கிடந்ததால் பரபரப்பு

ஜாதவின் மனைவி, தாயார் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

உ.பி.,யில் பஸ் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி 31 பேர் படுகாயம்

உ.பி.யில் ஓடும் ரயிலிலிருந்து 3 முஸ்லிம்கள் வெளியே தள்ளப்பட்டதாகப் புகார்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் மகளுக்கு ரூ.2.5 கோடி இழப்பீடு: மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்

 பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ் நோட்டீஸ்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் மோதல், 15 பயங்கரவாதிகள் தலை துண்டிப்பு

சிரியாவில் அமைதி: ஈரான், ரஷ்யா, துருக்கி ஒப்புதல்

திபெத்தில் வளர்ச்சியை தான் நாங்கள் விரும்புகிறோம். சீனாவிடமிருந்து தனிநாடு பெற வேண்டும் என்பது அல்ல என புத்தமத தலைவர் தலாய்லாலா தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகளை திரும்பபெற வங்காளதேசம் - மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

ஹாங்காங் பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

புதன், 22 நவம்பர், 2017

தாமரை வடிவில் ஜெயலலிதா சமாதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்!


தாமரை வடிவில் ஜெயலலிதா சமாதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்!

முத்ரா தொழில் கடன் திட்டம்* *(MUDRA LOAN SCHEME)


முத்ரா தொழில் கடன் திட்டம்* *(MUDRA LOAN SCHEME)

குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பிணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய #முழு #விபரம்:

உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......

இப்போது.......

மீன் வளர்ப்பு,
மாடு வளர்ப்பு,
பால் பண்ணை,
தேனீ வளர்ப்பு,
கோழிப் பண்ணை,
பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

 திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம்.  சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம்.

முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/

சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. வங்கிக்கடன் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனங்களை இத்தொழில் செய்வோர் நாடுகின்றனர். அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை.

மத்திய பட்ஜெட்டில் 'முத்ரா' வங்கி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த   வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல், 8ம் 2015 தேதி முத்ரா வங்கியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதிலும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு  சொத்து பணயம் இல்லா கடன் பெரும் திட்டம். இது தனிநபர் கடன் திட்டம் அல்ல. தொழில் நடத்துவதற்கு வழங்கப்படும் தொழில் கடன் திட்டம்.

முத்ரா கடன் திட்டம் பற்றிய முழு விபரம்- know about the MUDRA LOANS:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PMMY) . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயபடுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயபடுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.

இதன் சேவைகள்:
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கபடுகிறது.

சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம்  வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக  ஐந்து லட்சம்  முதல் பத்து லட்சம்  வரை கடன் பெறலாம்.

தகுதி:
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்.....?
1 அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

 2. உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், கோழிப் பண்ணை, மாடு வளர்த்தல், மீன் பண்ணை, தேனீ வளர்த்தல், பால் பண்ணை, பட்டு தொழில், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர் கைவனை கலைனர் உற்பத்தி தொழிசாலை அமைதல்  என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

 3. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

 4. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல்( Quatation) கொடுக்க வேண்டும்.அதன் அடிபடையல் கடன் கிடைக்கும்.

 5.  உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.

 6. சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.

 7. கல்வி கடன், தனிநபர் கடன் , தனிநபர் வாகன கடன்  இதில் வராது.

இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை....


* இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

 * வயது வரம்பு 18 வயது  முடிந்திருக்க வேண்டும்.

 * இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.

* இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.


 * . இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும்.

 * நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.

 * .   நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.

 * .  ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.

 * .  இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் ( SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம்.

 * .ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

 *  உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.

 * .  அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.

 *. விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.

* .  இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

கடன் வழங்கும் வங்கிகள்:

• 27 Public Sector Banks

• 17 Private Sector Banks

• 31 Regional Rural Banks (RRBs)

• 4 Co-operative Banks

• 36 Micro Finance Institutions (MFIs)

• 25 Non Banking Financial Companies (NBFCs)

அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.

1)      அடையாள சான்று ( வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்) Proof of Identity (Self attested Voter ID/Driving License/PAN Card/Aadhaar Card/Passport/any other Photo ID issued by Government)

2)      இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது) Proof of Residence (Recent Telephone Bill/Electricity Bill/Property Tax Receipt (not older than 2 months)/Voter ID Card/Aadhaar Card/Passport/Domicile Certificate/Certificate Issued by a local authority)

3)    லேட்டஸ்ட் புகைப்படம் Applicant’s recent photograph (not older than 6 months)

4)    இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது Quotation of Machinery/other items to be purchases

5)    சப்லேயர் விபரங்கள் Name of the Supplier/Details of Machinery/Price of Machinery

6)    தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ் Proof of Identity/Address of the Business Enterprise (relevant licenses & certificates)

7)    சாதி சான்று Proof of Category (SC/ST/OBC/Minority etc)

மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதல்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்க பட்டுள்ளது.

முத்ரா அட்டை:

முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் மறுக்கும் பட்சத்தில்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன் மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது?

 அந்த தொழில் லாபகரமான தொழிலா?

 அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது?

அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன?

அந்த எந்திரங்களின் விலை என்ன?

தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்?

சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம்.

உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன்  கொடுப்பார்கள்.

முக்கிய குறிப்பு:
Ø  வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்கவும் மாலை  4.00 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று.
மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும்.
 மேலாளரின் முடிவே இறுதியானது.

 மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

பரபரப்பு🛑செய்திகள்🛑22/11/17 !

பரபரப்பு🛑செய்திகள்🛑22/11/17 !

புதுடெல்லி : இந்தியாவில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால் பொதுமக்கள் ஆதரவுடன் திமுக போராட்டம் : முக.ஸ்டாலின்.

அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் விட மாட்டோம் - நடிகர் விஷால்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளேன்.ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் - ஜெ.தீபா.

திரைத்துறையினரும், முதலீட்டாளர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம். கழுத்தை இறுக்குவதை தவிர்த்து கைகோர்த்து செல்வது நல்லது - நடிகர் சங்கம்.

அரசியல் களத்தில் இறங்க வேண்டியதற்கு நல்விடியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த்.

”நான் கடவுள்” நேரத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனால் நடிகர் அஜித்குமாரும் மிரட்டப்பட்டவர்.தமிழ்நாட்டின் பாதிப் பணம் வைத்திருக்கும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்யவும் - இயக்குநர் சுசீந்திரன்.

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவது உறுதி - விசிறி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு.

கந்து வட்டி புகாரை மட்டுமே அடிப்படையாக வைத்து குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது டிஜிபிக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி : பொன்.ராதாகிருஷ்ணன்.

மத்திய அரசிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் தமிழக அரசுக்கு பாடம் நடத்த வேண்டாம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவியது இந்தியா.

நடிகர் அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது; அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே எனது நோக்கம் - இயக்குநர் சுசீந்திரன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலை தலையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்.தூத்துக்குடி மாநகராட்சியில் விரிவாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைப்பணிகள் தொடங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

கந்துவட்டி விவகாரத்தில்பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வரவேண்டும்; அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஆர்கே.நகர் தேர்தலில் டிடிவி.தினகரன் மீண்டும் போட்டியிடுவார் : தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தன்னையும் இணைத்து கொள்ள வேண்டிவிசாரணை ஆணையத்தில் டிராபிக் ராமசாமி மனு.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் : ஹெச்.ராஜா.

திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடருவேன் : சைதை துரைசாமி ஆவேசம்.

ஆர்கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய டெல்லி செல்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

ஆர்கே.நகர் தொகுதி போல் அனைத்து தொகுதியிலும் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை தேவை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன்
அரசு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிக வாபஸ்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த நித்தியானந்தா பாலியல் வீடியோவில் இருப்பது அவர் தான் உறுதி செய்தது டெல்லி தடயவியல் துறை.

சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி தற்கொலை : தேர்வில் காப்பி அடிக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சக மாணவர்கள் முன்னால் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை.

நித்யானந்தா - ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை அல்ல கர்நாடக மாநில காவல்துறைக்கு டெல்லி தடயவியல் ஆய்வகம் அறிக்கை.

அடுத்த 5ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து டீசல் ரயில் என்ஜின்களும் மின்சார என்ஜின்களாக மாற்றப்படும் - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்.

அசாம் மாநிலத்தில் அதிவேக ரயில் மோதியதில் 2 ஆசிய யானைகள் பரிதாபமாக உயிரிழப்பு.

ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது என்பது ஏமாற்று வேலை.️ஜிஎஸ்டி வரியை அழியோடு ஒழிக்க வேண்டும் என்பதே வணிகர் சங்க பேரவையின் நோக்கம் - தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையன்.

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்ட கடலோர கிராமங்களில், மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் - தமிழக அரசு.

கோவையின் அடையாளமாக ஈஷாவின் தியான லிங்கத்தை முன்னிறுத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து ரயில் பெயர்ப்பலகையில் கோவை ரயில் சந்திப்பு இலச்சினையை பொறித்தது தெற்கு ரயில்வே.

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், வட, தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.️சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இரவு நேரங்களில் இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

செவ்வாய், 21 நவம்பர், 2017

பரபரப்பு🚨செய்திகள்🚨21/11/17 !

பரபரப்பு🚨செய்திகள்🚨21/11/17 !

காஷ்மீரில் லஷகர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை : ஹந்த்வாரா முழுவதும் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் 50 பேர் உயிரிழப்பு.

உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பெண் கைது.

ஆர்கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி , ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் - வருமான வரித்துறை.

முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு.

இலங்கை கடற்படை கைது செய்த 37 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு.37 பேரையும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் : கிராம மக்கள் எதிர்ப்பு.

போயஸ் கார்டனில் உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன 70 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - வருமான வரித்துறை.

மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் உறுதி.

டெல்லியில் 108 அடி உயர அனுமன் சிலையை இடமாற்றம் செய்யலாமே என டெல்லி உயர்நீதிமன்றம் யோசனை.

ஆர்கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம்
போலி வாக்காளர்கள் நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சிறப்பு அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மணல் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்பி.க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் தற்போதைய சூழலில் கண்டறிவது சிரமம் பினாமிகள் யார் என்பதை உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடக்கிறது : வருமான வரித்துறை.

தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி அரசு ஆட்சி செய்கிறது.அரசியல் சாசனப்படி சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தயாரா ? அரசு திட்டங்களை அறிவிக்காமல் திமுகவை விமர்சிக்கிறார்கள் : முக.ஸ்டாலின்.

பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பன்சாலியை உத்தபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

தமிழகத்தில் டிச. 5ம் தேதி வரையே ஆட்சி இருக்கும்.மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.நவ.28 முதல் வேலூர், சேலம், திருச்சி மண்டலங்களில் டிடிவி.தினகரன் சுற்றுப்பயணம் : நாஞ்சில் சம்பத்.

கர்நாடகாவில் உள்ள மந்திராலயா ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார்.

பத்மாவதி படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன் என்பது குறித்து தணிக்கைக்குழு உறுப்பினர் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா விளக்கம் அளித்து உள்ளார்.

ஆந்திரா : செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் கைது.

மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறேன் என கூறுபவர்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள் – தமிழிசை சவுந்தரராஜன் .

சுகாதார துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது - தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி.

மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படும்.மீனவர்கள் விவகாரத்தை அரசியலுக்காகவும் வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துகிறார்கள் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி கேகே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பு - உச்சநீதிமன்றம்.

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது வெளிச்சந்தையில் விலை உயர்வால் முட்டை வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சரோஜா மறுப்பு.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது : தமிமுன் அன்சாரி எம்எல்ஏ.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு.

ஓபிஎஸ் , ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் மனங்கள் இணைந்ததா என அதிருப்தியை வெளிப்படுத்தும் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.

556 புதிய சிறப்பு மருத்துவர்கள், 175 இளநிலை உதவியாளர்கள், 49 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் வழங்கினார்.

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றுநீா் பாசன குளங்களுக்கு முறையாக தண்ணீா் திறக்கப்படாததால் திருச்செந்தூா் பிரதான சாலையில் உள்ள அனைத்து விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்.

வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் சகோதரரை மணந்தால் மட்டுமே நிதியுதவி என்பதில் மாற்றம் செய்தது மத்திய அரசு . வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் மனைவி வேறு ஒருவரை மணந்து கொண்டாலும் நிதியுதவி பெறலாம்.

மோடி குறித்து விரல் நீட்டி பேசினால் அவை துண்டிக்கப்படும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் நித்யானந்த் ராய் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி.

திங்கள், 20 நவம்பர், 2017

MATHI NEWS செய்திகள்@21/11/17

MATHI NEWS  செய்திகள்@21/11/17

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்: நாடு கடத்தல் வழக்கு விசாரணை டிசம்பர் 4-ல் ஆரம்பம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக தொடர்ந்த வழக்குகளால் ஆர்.கே.நகர் தேர்தல் தேதிஅறிவிப்பதில் தாமதம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு

உலகில் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு: அதிகாரி அதிர்ச்சி தகவல்

திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் ரவுடி தற்கொலை முயற்சி: டியூப் லைட்டால் கழுத்தில் கீறிக்கொண்டார்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது: தமிமுன் அன்சாரி

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த டிஜிட்டல் -லாக்கிங் சிஸ்டம் ஏன் கூடாது? - அரசு பதிலளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவு

நாகையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு கலெக்டர் நோட்டீஸ்

 போயஸ் வீட்டை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு: அரசு விசாரணைக்கு தீபா ஆஜராகவில்லை

திருச்செந்தூரில் கல்லூரி பேருந்துகள் மோதல்: மாணவர்கள் காயம்

சென்னை புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிப்பு

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்: தீபா கணவர் பிரமாண பத்திரம் தாக்கல்

 புதிய மெட்ரோ ரயில் செயலி; 10 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

பயணியிடம் அத்துமீறிய இண்டிகோ விமான ஊழியர்கள் சஸ்பெண்ட்

ரயில் விபத்தில் பயணிகள் இறப்பதை தடுக்க மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு: ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் தகவல்

*மதிய செய்திகள்@21/11/17


காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை மைத்ரேயன் எம்.பி., கருத்தால் சர்ச்சை

தமிழகத்துக்கு 63 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கோரும் மனுவை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.

ஆர். கே. நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்

அரியானா மாநிலம் குர்கான் நகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார். ஆனால், சிகிச்சை கட்டணமாக ரூ.16 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையை கூட்ட வேண்டும்: ஸ்டாலின்

ஜெயக்குமார் பல கோடி சொத்து சேர்த்தது எப்படி?: வெற்றிவேல் எம்.எல்.ஏ. தாக்கு

அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ்.: துரைமுருகன்

மாநில சுயாட்சிக்கு பங்கம் வராது: தமிழிசை

அம்மா வழியில் ஆட்சி நடத்தும் ஜெயக்குமாரும், வருங்கால குற்றவாளி: சாருஹாசன் கடும் பாய்ச்சல்

பிட் அடித்த விவகாரம்-ஐபிஎஸ் அதிகாரி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

குஜராத் படேல் தலைவர்களை சமாதானபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் 2 வது பட்டியலில் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு

தொழிலதிபர் மல்லையா போல் நான், அடுத்தவர் பணத்தை எடுத்து கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.

உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லரை, சில்லறை நாணயங்களுடன் ஒப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

தணிக்கை சான்றிதழ் பெறாமல் பத்மாவதி திரையிடல்: தணிக்கைத் துறை தலைவர் கண்டனம்

வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு: அமெரிக்கா அறிவிப்பு

தென் கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் சிவ கேசவன் தகுதி பெற்றுள்ளார்.