திங்கள், 20 நவம்பர், 2017

சசிகலாவால் கொடநாடு வலைக்கப்பட்ட கதை


சசிகலாவால் கொடநாடு வலைக்கப்பட்ட கதை

-ஒரிஜினல் ஓனரின் வாக்குமூலம்

ஜெ-வின் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கொடநாட்டை முதலில் வாங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த கிரேக் ஜோன்ஸ். அவரது மகன் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய சாட்சி.

அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில்... எனக்கு மார்கிரெட், கிறிஸ்டின், ரோசலின், டயான் என நான்கு சகோதரிகள் உள்ளனர். மார்கிரெட், கிரிஸ்டினும் பிரட்டினில் இருக்கிறார்கள். நானும், இன்னும் இரண்டு சகோதரிகளும் பெங்களூரில் குடகுப் பகுதியில 298 ஏக்கரில் உள்ள காபித் தோட்டத்தில் 1975-ல் 33 லட்சத்தில் கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் சேர்ந்து வாங்கினோம். அதன் பரப்பளவு 958 ஏக்கர். 1976-ல் சில காரணங்களுக்காக 60 ஏக்கரை விற்று விட்டோம். மீதமுள்ள 898 ஏக்கர்தான் இந்த கொடநாடு எஸ்டேட். சில தேவைகளுக்காக கோத்தகிரியில் உள்ள விஜயா வங்கியில் 30 இலட்ச ரூபாய் கடனாக வாங்கினோம்.

அது வட்டியோடு 1985-ல் 3.5 கோடி ரூபாயாக ஆகி விட்டதால் எஸ்டேட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அப்போது கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் வாங்குகிறோம் என கோவையைச் சேர்ந்த ராஜரத்தினம், சசிகலா, உடையார் குடும்பத்தார் ஆகியோர் விலை பேச வந்தார்கள். கூடவே தமிழக அரசின் டேன் டீ அதிகாரிகளும் வந்திருந்தார்கள். பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதற்குப் பின் சில நாட்கள் கழித்து ஜெயலலிதா வந்து எஸ்டேட்டை பார்வையிட்டார். அதற்குப் பிறகு ராஜரத்தினம், உடையார் ஆகியோர் கொடநாடு எஸ்டேட் வாங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஐந்து முறை பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரண்டு முறை நான் கலந்துகிட்டேன். மூன்று முறை என் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ராஜரத்தினம் சொன்ன நிபந்தனைகள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால் நாங்கள் எஸ்டேட்டை விற்கவில்லை ...என்று சொல்லி விட்டோம்.

அதற்குப் பின் கொடநாடு எஸ்டேட்டிற்கு நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்றில் 6 குண்டர்கள் வந்து என் எஸ்டேட் மேனேஜரை மிரட்டியிருக்கிறார்கள். அதாவது சென்னையைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் இந்த எஸ்டேட்டை விற்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்... என்று கோபமாய் சொல்லிப் போயிருக்கிறார்கள்.

அதை என் மேனேஜர் சொன்னதும், நான் பெங்களூருவில் உள்ள சூலூர் ஸ்டேசனில் 1993- ல் அக்டோபர் 25-ந் தேதி புகார் கொடுத்தேன். அந்தப் புகார் நீலகிரி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அப்போதைய நீலகிரி எஸ்.பி பெங்களூருக்கே வந்து புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று என்னை மிரட்டினார் .அதனால் நான் வாபஸ் வாங்கி விட்டேன்.

அதற்குப் பின் கொடநாடு எஸ்டேட்டை வாங்க ‘’அடிசன்ஸ்’’ என்கிற கம்பெனியும், எஸ்.ஆர்.குரூப் என்கிற கம்பெனியும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் சிட்டிங் கார்ப்பரேஷன் என்கிற கம்பெனியும் 9.60 கோடிக்கு இந்த கொடநாடு எஸ்டேட்டை வாங்க போட்டிபோட்டன. ஆனால் இந்த கம்பெனிகள் அப்போதைய ஆட்சியிலிருந்த இவர்களால் மிரட்டப் பட்டதால் அவர்கள் எஸ்டேட்டை வாங்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கி விட்டனர்.

1994-ல் சென்னையைச் சேர்ந்த அந்த உடையார், அர்ச்சுனன் லால் என்பவரை அனுப்பியிருந்தார். உடையார்தான் அனுப்பினார் என்பது எனக்குத் தெரியாது. அவர் மூலம் தமிழக அட்வகேட் ஜெனரலாய் இருந்த அ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீட்டில் எஸ்டேட் வாங்கும் பேச்சு வார்த்தை நடந்தது.

9.50 கோடி தான் கடைசி விலை என்றேன். ஆனால் அவர்களோ 7.50 கோடி ரூபாய்தான் கொடுப்போம். அது போக நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் அனைத்து கடன்களையும் நாங்கள் கட்டிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். வேறு வழியின்றி ஒத்துக் கொண்ட போதுதான் தெரிந்தது இந்த கிருஷ்ணமூர்த்தி உடையார்க்கு நெருங்கிய சொந்தக்காரர் என்பது.

ஆனால், என்னை நம்ப வைப்பதற்கென்றே 7. 50 ரூபாய்க்கு பேசி முடித்த எஸ்டேட்டுக்கு 7.60 கோடி ரூபாய் அதாவது 10 இலட்ச ரூபாயை சேர்த்து செக்காய் கொடுத்து உடையாரின் பெயரில் என்னிடமிருந்து விலைக்கு வாங்கினார்கள். ஆனால் அவர்கள் என் வங்கிக் கடனை அடைப்பதாய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்கள் என அவர் சொல்லியிருக்கிறார்.

இதே சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு சாட்சியான உடையாரின் மருமகள் ராதா வெங்கடாசலம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், கொடநாடு எஸ்டேட்டை வாங்கிய எனது மாமனார் உடையாருக்கும், ஜெயலலிதாவுக்கும் நல்ல பழக்கம் உள்ளது என்பதால் அந்த எஸ்டேட்டை ஜெயலலிதா, சசிகலா பெயரில் எழுதி கொடுத்து விட்டார் என்று சொல்லியிருக்கிறார். வாட்ஸ் ஆபில் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக