ஞாயிறு, 5 நவம்பர், 2017

கண்ணீரும் புன்னகையும்: அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி!



கண்ணீரும் புன்னகையும்: அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி!

தெலங்கானா மாநிலத்தின் முதல் பொதுத் தாய்ப்பால் வங்கி, தலைநகர் ஹைதராபாத்தில் மாநில அரசால் நடத்தப்படும் நிலோஃபர் மருத்துவமனையில் செயல்படத் தொடங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் அனுப்ரியா படேல் கடந்த வாரம் இதைத் தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் கிடைக்க வழியில்லாத குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘தாத்ரி தாய்ப்பால் வங்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கி நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு அரசு சாரா நிறுவனம் ஏற்றுள்ளது.

முன்னதாக இளம் தாய்மார்கள் மத்தியில் தாய்ப்பால் கொடுப்பது குறித்த தவறான கருத்துகளைக் களைந்து அவர்கள் தாய்ப்பால் தானம் செய்வதை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டது இந்த நிறுவனம்.

இதன் மூலம் இந்த வங்கி தொடங்கப் பட்டதிலிருந்து போதுமான அளவு தாய்ப்பால் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சொல்கிறது.

கைக்குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தாயிடமிருந்து பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்யும்

*இதுபோன்ற நடவடிக்கைகளால் கைக்குழந்தைகள் இறப்பு விகிதம் குறையும் என்று நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக