எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...
தூத்துக்குடி எச்சரிக்கை
தூத்துக்குடிக்கு 2 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிக்கு 50 முதல் 60 கீலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது தூத்துக்குடி வ.உ.சி தூறைமுகத்தில் 3ஆம் என் புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
எப்போது ஏற்றப்படும், அதற்கான விளக்கம்:
*1-ம் எண்* எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
*2-ம் எண்* எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
*3-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
*4-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
*5-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
*6-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
*பெரிய அபாயம்*
*7-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
*8-ம் எண்* புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
*9-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் , துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
*10-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
*11-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுவது தான் அதிகபட்ச எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடப்பட்டால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என அர்த்தமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக