வியாழன், 2 நவம்பர், 2017

689 அடி உயரத்திற்கு உயர்த்த முடிவு... மும்பையில் அமையுது பிரமாண்ட வீரசிவாஜி சிலை!!



689 அடி உயரத்திற்கு உயர்த்த முடிவு... மும்பையில் அமையுது பிரமாண்ட வீரசிவாஜி சிலை!!

*செம உயரத்தில்*
*அமைப்பது என்ற*
*முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் வீர சிவாஜி சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையின் உயரத்தை 689 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் உயரமான சிலை என்ற பெருமையை பெற உள்ளது.*

*சீனாவில் உள்ள வசந்த கால கோவிலில் உள்ள புத்தர் சிலை, 682 அடி உயரம் உடையது. இதுவே உலகில் அதிக உயரமுடைய சிலையாக உள்ளது.*

*மும்பை கடலோரப் பகுதியில் மராட்டிய மன்னர், வீர சிவாஜியின் சிலையை , 630 அடி உயர சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.*

*தற்போது அதன் உயரம், 689 அடியாக உயர்த்தப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.*

*குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜியின் சிலை அமைக்கும் பணி, 2018 ஜனவரியில் துவங்கி, 2021க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.*

*இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கு, மஹாராஷ்டிரா கடலோர மண்டல நிர்வாக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.*

*மும்பையின் கடலோரத்தில், 15.96 ஏக்கர் பரப்பு நிலத்தில், இந்த சிலை நிறுவப்பட உள்ளது. அந்த வளாகத்தில், கோவில், மருத்துவமனை, சிவாஜியின் வாழ்க்கையை குறிக்கும் வகையில், ராய்காட் கோட்டை வடிவில், அருங்காட்சியம் போன்றவைகளும் அமைய உள்ளன.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக