திங்கள், 6 நவம்பர், 2017

முதன்முறையாக திமுக தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!


முதன்முறையாக திமுக தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

06/11/17- திங்கள்கிழமை!

*சென்னை வந்துள்ள பிரதமர் மோடி முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.*

*சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக வெள்ளப்பாதிப்புகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.*

*பின்னர் தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.*

*அதையடுத்து, எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார்.*

*அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.*

*இந்த சந்திப்பின்போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட மூத்த தலைவர்கள் மற்றும், பாஜ தமிழ்நாடு தலைவர் தமிழிசை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.*

*மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*

*பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.*

*இதன் காரணமாக தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக