செவ்வாய், 28 நவம்பர், 2017

உலகளவில் காற்று மாசுபாடு - முதலிடத்தை பிடித்த இந்தியா.....!


உலகளவில் காற்று மாசுபாடு - முதலிடத்தை பிடித்த இந்தியா.....!

*சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்துக்கும கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலக இளவுஙர இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கண்டறிந்துள்ளது*

*கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் இருந்த சீனாவில், தற்போது அது 75 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது*

*ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது*

*கடந்த 2010ம் ஆண்டு, 2வமு இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா, தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

*உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. நிலக்கரியின் எடையில் சுமார் 3 சதவீதம் அளவுக்கு கந்தகம் உள்ளது*

*இந்த வேளையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது*

*கந்தக டை-ஆக்சைடு நச்சு காரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் பொதுமக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது*

*இந்தியாவில் 3.3 கோடி பேரும், சீனாவில் சுமார் 9.9 கோடி பேரும் கந்தக டை-ஆக்சைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது*

*குறிப்பாக 1952ம் ஆண்டு கந்தக டை-ஆக்சைடு காற்றில் பெருமளவு கலந்து மாசுபட்டதால், லண்டனில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக