நிகழ்ச்சி ஒளிபரப்ப ஜெயா டிவி-க்குத் தடை!
*வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து, ஜெயா டிவி-யில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.*
*ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவை, இளவரசி மகன் விவேக் ஜெயராமனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.*
*இந்த நிலையில், இன்று காலை ஆறு மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.*
*சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.*
*விவாதம், பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட், லைவ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.*
*’தேவைப்பட்டால் நியூஸ் கார்டு மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.*
*ரெய்டு குறித்த செய்தியை சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு தண்ணீர், தேநீர் உள்ளிட்ட வசதிகளை செய்தி கொடுத்தது ஜெயா டிவி நிர்வாகம்.*
*ஜெயா டிவி அலுவலகம் மட்டுமன்றி, சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோரது வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக